•  

செக்ஸ் உணர்வு கூட வேண்டுமா? வயாகரா வேண்டாம், சன் பாத் போதும்!

Sun Bath
 
வியன்னா: சூரிய குளியலின் மூலம் மனிதர்களின் செக்ஸ் உணர்வு அதிகளவில் தூண்டப்படும் என ஆஸ்திரிய மருத்துவ பல்கலைக்கழக ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது.

ஆண்களின் செக்ஸ் ஆர்வத்தையும், உணர்வுகளையும் தூண்டுவது டெஸ்டோஸ்டிரான் என்ற ஹார்மோன்தான்.

டெஸ்டோஸ்டிரான் மிக முக்கிய ஆண் செக்ஸ் ஹார்மோனாகும். ஆண்களின் செக்ஸ் உறுப்புகளின் வளர்ச்சிக்கு இதுவே காரணமாகும். விந்தணு உற்பத்தி, செக்ஸ் உணர்வுகளை கட்டுப்படுத்துவது, செக்ஸ் குணாதிசயங்களை வெளிப்படுத்துவது ஆகியவற்றையும் இந்த ஹார்மோன்தான் பார்த்துக் கொள்கிறது.

டெஸ்டோஸ்டிரான் சிறப்பாக செயல்பட வைட்டமின் டி மிகவும் முக்கியம். இந்த வைட்டமின் டி, நமது தோலிலிருந்துதான் 90 சதவீத அளவுக்கு உற்பத்தியாகிறது.

நமது ரத்தத்தில் ஒரு மில்லிலிட்டருக்கு 30 நானோகிராம் வைட்டமின் டி இருந்தால் அது சராசரி அளவாகும். அதிகபட்சம் 40 முதல் 60 நானோ கிராம் வரை இருக்கலாம்

வைட்டமின் டி சூரிய ஒளி மூலம்தான் நமக்கு பெருமளவில் கிடைக்கிறது. அதேசமயம், இறைச்சி, மீன் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதாலும் நமது உடலில் அது உற்பத்தியாகிறது.

இதுதொடர்பாக ஆஸ்திரியாவின் கிராஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், குளிர்காலத்தில் ஆண்களிடையே டெஸ்டோஸ்டிரான் அளவு குறைந்து காணப்படுகிறது. இதற்குக் காரணம், சூரிய ஒளி போதிய அளவில் கிடைக்காததால்தான்.

போதிய அளவு சூரிய ஒளிக்கு தங்களை உட்படுத்திக் கொள்ளும் ஆண்கள், மற்ற ஆண்களை விட சிறந்த முறையில் செக்ஸ் உணர்வுகள் தூண்டப்பட்டு காணப்படுவதையும் இந்த ஆய்வில் கண்டுபிடித்துள்ளனராம்.

செக்ஸ் ஆர்வத்தையும், உணர்வுகளையும் செயற்கையான முறையில், வயாகரா மற்றும் இதர மருந்துகள் மூலம் தூண்டுவிக்கச் செய்வதை விட சூரிய குளியலே நல்ல பலனைக் கொடுக்கும் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தினசரி ஒரு மணி நேரம் சூரிய குளியல் செய்தாலே, டெஸ்ட்டோஸ்டிரானின் அளவு 69 சதவீதம் உயரும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

எனவே இனிமேல் செக்ஸ் உணர்வுக்காக 'மெடிக்கல் ஷாப்' போக வேண்டாம், 'மொட்டை மாடி'க்குப் போய் சூரியனைப் பார்த்து 'ஹாய்' சொல்லி விட்டு வந்தாலே போதும்!

Story first published: Thursday, February 4, 2010, 11:23 [IST]

Get Notifications from Tamil Indiansutras