•  

தம் அடிச்சா தாம்பத்ய உறவு பாதிக்கும்: ஆய்வில் எச்சரிக்கை

Smoking Affects Men’s Sex Drive
 
புகைப்பிடிப்பவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு புற்றுநோய் மட்டும் ஏற்படுவதில்லை ஆண்மை இழப்பும் ஏற்படுகிறது என்று சீனாவில் நடைபெற்ற ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.புகை பிடிப்பதற்கும் தாம்பத்ய குறைபாடுக்கும் உள்ள தொடர்பு பற்றி ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் பொது சுகாதாரப் பிரிவு விரிவான ஆராய்ச்சி மேற்கொண்டது. உறவின் போது சிக்கலை சந்திக்கும் 30 முதல் 50 வயதுக்கு உட்பட 700 ஆண்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.அவர்களிடம் 3 ஆண்டுகள் பல்வேறு கட்ட ஆய்வு நடத்தப்பட்டன. தாம்பத்ய உறவில் ஈடுபாடு குறைவு, ஆர்வம் இருந்தாலும் ஈடுபட முடியாமை ஆகிய பிரச்னைகளில் தவித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பெற்றவர்களில் 53.8 சதவீதத்தினர் புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட்ட பிறகே சிகிச்சைக்கு பலன் கிடைத்தது என்றனர். புகை பழக்கத்தை கைவிட்ட 6 மாதத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறினர். விரைப்புத்தன்மை குறைபாடுக்கு சிகிச்சை பெற்றவர்களில் புகை பழக்கம் இருந்தவர்கள் அதை நிறுத்திய பிறகே பலன் கிடைத்ததாக தெரிவித்தனர்.இதுபற்றி ஆய்வுக் குழு பேராசிரியர் சோபியா சான் கூறுகையில், "சீனா உள்ளிட்ட ஆசிய கண்டங்களைச் சேர்ந்த நாடுகளில் விரைப்புத்தன்மை குறைபாடு அதிக ஆண்களிடம் உள்ளது. இதற்கு பெரும்பாலோர் புகைபிடிப்பதே காரணம்" என்றார். இது ஆண் உறுப்புகளை இரு விதங்களில் பாதிக்கிறது. ஆண் உறுப்பிற்கு சரியான அளவில் ரத்த ஓட்டம் கிடைப்பதில்லை என்றும் ஆய்வாளர் கூறியுள்ளார்."புகை பிடிப்பதால் புற்றுநோய், நுரையீரல் நோய்கள் ஏற்படும் என்று மட்டுமின்றி ஆண்மையிழப்பு உட்பட தாம்பத்ய குறைபாடுகளும் ஏற்படும்" என்று ஆய்வினை மேற்கொண்ட பேராசிரியர் தாய் ஹிங் கூறியுள்ளார்.
English summary
Men who smoke have twice the risk of developing erectile dysfunction. Smoking damages the penis in two ways. First, smoking has a direct ''vasospastic'' effect, causing spasm of the arteries in the penis reducing blood supply.
Story first published: Saturday, October 6, 2012, 17:30 [IST]

Get Notifications from Tamil Indiansutras