செக்ஸ் வாழ்க்கையில் எது அதிகம் இருக்கோ, இல்லையோ, இருக்கக் கூடாத ஒன்று - உடல் எடை. நீங்கள் ஜிம் பாடியாக இருக்கீங்களோ இல்லையோ, கும் பாடியாக மட்டுமே இருக்கவே கூடாதாம். அப்படி இருந்தால் நிறைய சிக்கலாம்.
உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மாக மாறினால் செக்ஸ் வாழ்க்கையும் சீராகவும், சிறப்பாகவும் இருக்குமாம்.
உடல் எடையைக் குறைத்தால் எப்படி செக்ஸ் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று கேட்கலாம்.. அதற்கான காரணங்கள் இதோ.
உறுப்பு எழுச்சி பிரச்சினை சரியாகும்
குண்டாக இருக்கும் ஆண்களுக்கு உறுப்பு எழுச்சிக் குறைபாடு பிரச்சினை ஏற்படுகிறதாம். உடல் எடையைக் குறைத்து ஸ்லிம் ஆகும்போது இந்தப் பிரச்சினை சரியாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாம்.
ஆண்மைக் குறைவும் நீங்கும்
அதேபோல உடல் எடை அதிகம் இருப்போருக்கு ஆண்மைக் குறைபாடு ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளன. எனவே எடை குறையும்போது இந்தப் பி்ரச்சினையும் சரியாகுமாம்.
உடம்பு குறைஞ்சா ரத்தம் நல்லா ஓடும்
உடம்பைக் குறைக்கும்போது தேவையில்லாத கொலஸ்டிரால், ரத்த அழுத்தப் பிரச்சினை, சர்க்கரை வியாதி போன்றவற்றை தடுக்க முடியுமாம். ரத்த ஓட்டம் உடலின் அத்தனை பகுதிகளுக்கும் குறிப்பாக ஆணுறுப்புக்கு நன்றாக இருக்குமாம்.
செக்ஸ் ஆர்வம் அதிகரிக்கும்
உடல் எடை குறையும்போது செக்ஸ் மீதான ஆர்வமும் தானாகவே அதிகரிக்குமாம். மேலும் டெஸ்டோஸ்டிரான் அளவும் அதிகரிக்குமாம். ஹார்மோன் சமச்சீரின்மை பிரச்சினையும் குறையுமாம்.
மார்பக வளர்ச்சியைத் தடுக்கலாம்
சில ஆண்களுக்கு பெண்களைப் போல பெரிய மார்பகம் இருக்கும். இதற்கு முக்கியக் காரணம், இந்த உடல் எடை கூடல் பிரச்சினைதான். அதேபோல இளம் பெண்கள் பலருக்கு இந்த உடல் எடை கூடல் காரணமாக பிசிஓடி பிரச்சினைவரும். இதனால் அவர்களுக்கு மாத விடாய் பருவம் தாறுமாறாக இருக்கும். தைராய்ட் பிரச்சினையும் கூடவே இருக்கும். கர்ப்பம் தரிப்பதும் பாதிக்கப்படும்.
மலட்டுத்தனத்தை போக்கலாம்
பெண்களைப் பொறுத்தவரை உடல் எடை கூடலால் பல பிரச்சினைகளை அவர்கள் சந்திக்கிறார்கள். அதில் முக்கியமானது மலட்டுத்தன்மை. குண்டான உடல்வாகு கொண்டவர்கள் கர்ப்பம் தரிப்பது என்பது கடவுள் தரும் வரம் போல ஆகி விட்டது இப்போது. காரணம், பலவிதமான உடல் கோளாறுகள், பிசிஓடி, தைராய்ட் உள்ளிட்டை காரணமாக கர்ப்பம் தரிப்பது பெரும் சிரமமாக உள்ளது. உடல் எடைக் குறைப்பே அவர்களுக்கு விமோச்சனம் தரும்.
செக்ஸ் ஆர்வத்தை விழுங்கி விடும்
குண்டான உடல் வாகு கொண்டவர்களுக்கு மூச்சுத் திணறல், இருதய நோய் வாய்ப்புகள், சிறுநீரக பிரச்சினை, புற்றுநோய் வாய்ப்புகள், ரத்த அழுத்தம், டிமென்ஷியா என பல வியாதிகள் தாக்கும் அபாயம் உள்ளதாம். மேலும் செக்ஸ் ஆர்வத்தையும் இவை குழி தோண்டிப் புதைத்து விடுமாம். படுக்கையைப் பார்த்தாலே பயந்து போவார்களாம் இப்படிப்பட்ட நிலையில் உள்ளவர்கள்.
ஆணுறுப்பு சுருங்கிப் போகும்
குண்டான உடல் வாகு கொண்டவர்களுக்கு ஆணுறுப்பு சுருங்கிப் போகும் அபாயமும் உள்ளதாம். சிலருக்கு கிட்டத்தட்ட 'அது' இல்லையோ என்று சொல்லும் அளவுக்கு மிக மிக சின்னதாகிப் போகுமாம். இப்படிப்பட்ட நிலைக்கு Buried penis syndrome என்று பெயர். இப்படிப்பட்டவர்களுக்கு ஆணுறுப்பு எழுச்சியே இருக்காதாம். 0.6% ஆண்களுக்கு இந்த சின்ன ஆணுறுப்பு பிரச்சினை இருக்கிறதாம்.
எல்லா பொசிஷனும் சாத்தியமாகாது
உடல் எடை அதிகம் கொண்டவர்களால் பொசிஷன் பிரச்சினையை சமாளிக்க முடியாத நிலையும் ஏற்படுகிறதாம். அதாவது செக்ஸ் பொசிஷன்கள் பலவற்றை இவர்களால் அனுபவிக்க முடிவதில்லையாம். காரணம் தொப்பை மற்றும் உடல் எடை. குறிப்பாக குண்டான ஆண்களுக்கு இந்தப் பிரச்சினை வருகிறதாம்.
பலம் இருக்காது
அதேபோல குண்டான உடல் வாகு கொண்டவர்களால் நீண்ட நேரம் உறவில் ஈடுபடவும் முடியாதாம். குறிப்பாக மூட்டு வலி அதிகரித்து விடுமாம். முட்டி போட்டு உறவில் ஈடுபடுவது இவர்களுக்கு பெரும் சிரமமாக இருக்குமாம்.
மொத்தத்தில் உடல் எடையைக் குறைத்தால் மட்டு்மே செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பது டாக்டர்களின் கருத்தாகும்.



Click it and Unblock the Notifications



