மலரினும் மெல்லியது காமம்.... உடல் ரீதியாக இணைவதை விட உணர்வு ரீதியாக இணைவதன் மூலம் ஆரோக்கியம் மேம்படுகிறது என்று எண்ணற்ற ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
வாரத்திற்கு மூன்று முறையோ... தினந்தோறும் ஒருமுறையோ எப்படி என்றாலும் அவரவர் வசதியைப் பொறுத்து உறவில் ஈடுபடாலாம் என்கின்றனர் நிபுணர்கள். இதில் இப்படித்தான் என்ற கட்டுப்பாடு எதுவும் கிடையாது.
உடலின் தேவை... மூளையின் கட்டளை... உணர்வுகளின் விருப்பம்... ஹார்மோன்களின் சுரப்பு இவற்றின் கலவையே கலவியை நிர்ணயிக்கின்றன என்கின்றனர். இதில் புதிதாக திருமணமானவர்கள் என்றாலும் சரி, திருமணமாகி 15 ஆண்டுகளுக்கு மேலான தம்பதிகள் ஆனாலும் சரி அவரவர்களின் உடல்நிலை, மனநிலையைப் பொருத்து உற்சாகமான உறவில் ஈடுபடுகின்றனர்.
இதுபற்றி விரிவான ஆய்வு மேற்கொண்ட செக்ஸாலஜிஸ்ட் எம்மா ஜிஃப் தனக்கு நேரிட்ட அனுபவங்களை எழுதியுள்ளார்.
இதற்கு எதற்கு கணக்கு
தினம் ஒருமுறை, வாரத்திற்கு மூன்று முறை என்ற கணக்கெல்லாம் இல்லை உங்களுக்கு தேவை என்று படுகிறதா? துணையுடன் உற்சாகமாக ஈடுபடுங்களேன் என்கிறார் எம்மா.
காலியாகும் கலோரிகள்
செக்ஸ் மூலம் உயர் ரத்த அழுத்தம் சரியாகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மூளை உற்சாகமடையும் என்பது உண்மைதான் என்கிறார் நிபுணர். ஒவ்வொருவர் வாழும் வாழ்க்கை முறை, உடலில் எழும் உணர்வு, கிளர்ச்சி போன்றவைகளைப் பொருத்து விருப்பதான நேரங்களில் உறவில் ஈடுபடலாம். இது தொடர்பாக 5 தம்பதியரிடம் மேற்கொண்ட ஆய்வில் சுவாரஸ்ய தகவல்களை வெளியிட்டுள்ளார் நிபுணர்.
வயது வித்தியாசம் பெருசில்லையே
நடாலியா என்ற 35 வயது பெண் தன்னைவிட 7 வயது குறைவான கெவின் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். நடாலியாவிற்கு ஏற்கனவே 20,15,6 வயதில் மூன்று குழந்தைகள் இருக்க திடீரென்று கெவினை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இப்போது 6 மாத ஒரு குழந்தை இருக்கிறது.
படுக்கை அறையில் சூப்பர்
தங்களுக்கு இடையேயான வயது வித்தியாசம் பெரிதாக தெரிவதில்லை என்று கூறும் நடாலியா படுக்கை அறையில் உற்சாகமாக இருப்பதாக கூறுகிறார். இதை கெவின் ஒத்துக்கொள்கிறார். தினசரி ஒருமுறை ஏன் இரண்டுமுறை கூட உற்சாகமாக ஈடுபடுகிறோம் என்கிறார் கெவின்.
அத எப்படி சொல்றது?
ஜானி கெனித் தம்பதியருக்கான அனுபவம் வித்தியாசமானது. இருவருமே ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர்கள். பத்தாண்டுகளுக்கு முன்பு வாழ்க்கையை தொடங்கியுள்ளனர். தினசரி உறவில் ஈடுபடுவது தங்களுக்கு பிடித்தமானது என்கின்றனர். செக்ஸ் என்பது வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத புதுவித அனுபவம் என்கின்றனர் இந்த தம்பதியர்.
திகட்டாத அனுபவம்
புதிதாக திருமணமான தம்பதியான பென் போலன் தம்பதியின் அனுபவம் வித்தியாசமானது. முதலிரவு தொடங்கி மூன்று வாரத்திற்கு அதைப் பற்றிய நினைவாகவே இருந்துள்ளது என்கின்றனர். படுக்கை அறையில் திகட்ட திகட்ட அனுபவித்தோம் என்கின்றனர் அந்த புதுமணத் தம்பதியர்.
முத்தமும் நடனமும்
லேகா பென்டன், லெவிஸ்கென்ஸ்பி தம்பதியரின் அனுபவம் புதுவிதமானது. முத்தமிடுவதும் நடனமாடுவதும் தங்களை உற்சாகப்படுத்தும் என்று கூறும் இந்த தம்பதியர் வாரம் முழுவதும் செக்ஸ் வைத்துக்கொண்டாலும் அலுப்பதில்லை என்கின்றனர். இதனால் இருவருக்கும் இடையேயான காதல்தான் அதிகரிக்கிறது என்கின்றனர்.
உற்சாகமான விளையாட்டு
கனடாவைச் சேர்ந்த கோசியா, மைக்கேல் என்பவரை திருமணம் செய்திருக்கிறார் 10 வருடங்கள் ஓடிவிட்டது. ஆனாலும் புதிதாய் திருமணமானதுபோல வாழ்க்கையை கொண்டாடுவதாக கூறுகின்றனர். போரடிக்கும் நேரங்களில் பல வித உபகரணங்களை பயன்படுத்தி விளையாட்டினை உற்சாகப்படுத்திக் கொள்வதாக கூறுகின்றனர்.
எதுவுமே தப்பில்லை
இந்த ஆய்வை நடத்திய செக்ஸ் எக்ஸ்பர்ட் எம்மா ஜிஃப், செக்ஸ் என்பது பலருக்கும் பலவிதமான உணர்வுகளை தரும். இதற்கு என்று வகுக்கப்பட்ட விதிமுறை எதுவுமில்லை. தினசரி உறவில் ஈடுபட்டால் நார்மல் என்றோ, வாரம் ஒருமுறை என்றால் அப்நார்மல் என்றோ எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை. அவரவர் உடல்நிலையைப் பொருத்து இதனை கையாளலாம்.
துணையுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
பெண்களுக்கு மெனோபாஸ் காலம், ஆண்கள் புகை,போதை வஸ்துக்களை பயன்படுத்துவதன் மூலம் செக்ஸ் உணர்வுகளை குறைய வாய்ப்புள்ளது. இதுபோன்ற குறை உடையவர்கள் தகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.
கிளர்ச்சியை தூண்டும் உணவுகள்
உணவுகளும், மூலிகைகளும் செக்ஸ் உணர்வை தூண்டுவதில் முக்கிய பங்காற்றுகின்றன. சில்லி பெப்பர், மாமிச உணவு, வெள்ளைப்பூண்டு, சாக்லேட், தர்பூசணி போன்றவை மனிதர்களின் செக்ஸ் உணர்வுகளை தூண்டக்கூடிய உணவுகள். இவற்றை உட்கொள்வதன் மூலம் செக்ஸ் ஹார்மோன் சரியான அளவில் சுரக்கும் என்கின்றனார் நிபுணர்.