வாழ்க்கையில் எத்தனையோ நிகழ்வுகளை சந்தித்திருப்போம். எத்தனையோ சம்பவங்கள் நடந்திருக்கும். ஆனால் முதல் முத்தத்தை மறக்கவே முடியாது. இதயம் நனைத்த முதல் மழை அல்லவா அது... எப்படி மறக்க முடியும்.
போன வாரம் என்ன செய்தாய் என்று கேட்டால் யாருக்கும் சரியாக சொல்லத் தெரியாது... ஆனால் உனக்கு முதல் முத்தம் கிடைத்தது எங்கிருந்து என்று கேட்டால் புல்லரித்துப் போய் கதை கதையாக சொல்வார்கள்.
என் இதயத்தின் ஒவ்வொரு செல்லிலும்
என் செல்லத்தின் முத்தச் சின்னங்கள்
மனதெல்லாம் காதல் வெள்ளம்
முட்டி மோதி தட்டுத் தடுமாறி போனதே என் உள்ளம்
என்று முதல் முத்தம் பெற்றவர்கள் காதல் பாடல் பாடுவார்கள். காதல் போதையில் தடுமாறிப் போவார்கள். மென்மையாக இச் இச் என்று வைத்தபோது மனமெல்லாம் துடித்து துவண்ட தருணத்தை மறக்க முடியுமா... உதடுகளைக் கவ்வி இழுத்து கவர்ந்து கொடுத்த முத்தத்தையோ, பெற்ற முத்தத்தையே மறக்க முடியுமா? நிச்சயம் மறக்க முடியாதுதானே...
சரி இதை விடுவோம்.. முதல் முத்தத்தை ஏன் நாம் மறக்க முடிவதில்லை தெரியுமா... எழுச்சியுடன் கூடிய எந்த விஷயமாக இருந்தாலும் அதை நமது மூளை அவ்வளவு சீக்கிரம் மறப்பதில்லையாம்.
முதல் முத்தம் என்றில்லாமல், முதல் குழந்தை பிறப்பு, முதல் விருது உள்ளிட்ட எந்த விஷயத்தையும் மூளை சீக்கிரம் மறக்காதாம். அதனாலதான் இவையெல்லாம் நமது மனதில் பளிச்சென நிற்கிறதாம்.
ஆய்வுகள் சொல்வது இப்படி... ஆனால் ஆத்மாக்களின் ஸ்பரிசம் எதையும் அவ்வளவு சீக்கிரம் மறக்காது என்பது அனுபவஸ்தர்களின் கருத்து...