•  

ஆணுறை அணிந்தாலும் எழுச்சி குறையாதாம்... ஆய்வு சொல்கிறது

Sex
 
ப்ளூமிங்டன், அமெரிக்கா: ஆணுறை அணிந்து உறவு கொண்டால் ஆண்களுக்கு எழுச்சியில் பிரச்சினை வரும் என்ற வாதத்தை தகர்த்துள்ளது புதிய ஆய்வு முடிவு ஒன்று. ஆணுறை அணிந்தாலும், அணியாவிட்டாலும் ஆண்களுக்கு உறுப்பு எழுச்சி இயல்பாகவே இருக்கும் என்று இந்த ஆய்வு கூறுகிறது.ஆணுறை அணிந்து உறவு கொள்ளும்போது ஆண்கள் சவுகரியமாகவே உணர்கிறார்கள் என்றும் அவர்களுக்கு உறுப்பு எழுச்சி குறைபாடு வருவதில்லை என்றும் இந்த ஆய்வு மேலும் சொல்கிறது.இதுதொடர்பாக அமெரி்க்காவின் இன்டியானா பல்கலைக்கழகத்தின் பொது சுகாதார கல்வி நிறுவனம் ஒரு ஆன்லைன் கருத்துக் கணிப்பை நடத்தியது. அதில் 18 முதல் 59 வயது வரையிலான ஆண்களிடம் அவர்களின் செக்ஸ் பழக்க வழக்கங்கள் குறித்த கருத்துக்கள் கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த முடிவை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.அதில் முக்கியமானதாக, ஆணுறை அணியாமல் உடலுறவு கொள்ளும்போதும், ஆணுறை அணிந்து உடலுறவு கொள்ளும்போதும் ஒரே மாதிரியான இன்பத்தையே அனுபவிப்பதாகவும், வித்தியாசம் எதையும் உணர்வதில்லை என்றும் கூறியுள்ளனர்.மேலும் ஆணுறை அணிவதை ஆண்கள் அதிகம் விரும்புவதாகவும் இந்தக் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. ஆணுறையால் தங்களதுஉறவில் எந்தவிதமான பாதிப்பும் வருவதில்லை என்றும், அதனால் சுகத்தில் குறைபாடு எதுவும் வருவதில்லை என்றும், உறுப்பு எழுச்சி இயல்பாகவே இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.அதேசமயம், பெண்களுக்கு இந்த ஆணுறையானது சில அசவுகரியங்களைக் கொடுப்பதாக கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. தங்களுக்கு இன்பத்தைக் கொடுக்கும்படியான ஆணுறைகளை ஆண்கள் அணிய வேண்டும் என்பது பெண்களின் எதிர்பார்ப்பாக உள்ளதாம்.

English summary
Men did not find it difficult to maintain erections when putting on condoms, according to a U.S study
 Experts hope message will help stem tide of sexually transmitted infections. Researchers reviewing an online questionnaire of the sex habits of men and women from 18-59, found participants consistently rated safe sex as 'highly arousing and pleasurable' - the same score as unprotected sex.

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more