•  

தலைவலிக்குதா? உடனே அதுக்கு தயாராகுங்களேன்!

Kamasutra
 
தாம்பத்ய உறவு என்பது தம்பதியரிடையேயான பிணைப்பை மட்டும் அதிகரிப்பதில்லை. உடல் ரீதியான, மனரீதியான இருக்கத்தை போக்குகிறது என்கின்றனர் நிபுணர்கள். மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் பாலுணர்வு ஏற்படுவது இயற்கையான ஒன்று. அதனால்தான் குறிப்பிட்ட பருவத்தில் திருமணம் செய்து வைத்து சரியான வடிகாலை ஏற்படுத்தித் தருகின்றனர்.நம்முடைய நாட்டு கலாச்சாரத்தில் தாம்பத்ய உறவைப் பற்றி யாரும் வெளிப்படையாக பேசுவதில்லை. அப்படிப்பேசுபவர்களை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பவர்கள்தான் அதிகம் இருக்கின்றனர். தம்பதியர்களுக்கு இடையே ஏற்படும் தாம்பத்ய உறவு என்பது ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஓர் உன்னத வழியாகவே கருதப்படுகின்றது. இதனையே மேலை நாட்டு ஆராய்ச்சிகளும் உறுதி செய்கின்றன.உறவின் மூலம் மன இறுக்கம் குறைகின்றது. மனச்சோர்வு நீங்குகின்றது. உடலும் மனமும் மகிழ்ச்சியடைகிறது. சீரான சிந்தனைக்கும் செயல்பாட்டிற்கும் ஆண், பெண் இருபாலருக்கும் உடலுறவு அவசியமாகின்றது என்கின்றனர் பாலியல் நிபுணர்கள்.தலைவலிக்கிறதா? டெஸ்ட் பண்ணுங்களேன்.தம்பதியர சராசரியாக வாரம் இருமுறை உறவு வைத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்தை சீராக்கும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நியுயார்க் பல்கலைக்கழகத்தில் நடந்த ஆராய்ச்சியில் உடலுறவால் தலைவலி, கீல்வாதம் போன்ற பல வலிகள் குறைவதும் கண்டறியப்பட்டுள்ளது. உடலுறவு கொள்ளும் பொழுது மூளையில் ஏற்படும் இயற்கையான சில இரசாயன சுரப்புகளால் சந்தோஷம் பெருகுவதால் இந்த இரசாயனப் பொருட்கள் வலி நிவாரணத்திற்கும் பயன்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இதை நீங்களே டெஸ்ட் செய்து பார்க்கலாம்.கடுமையான தலைவலியாக இருக்கிறதா? கண்ட மாத்திரையைப் போடவேண்டாம். உங்கள் துணை அருகில் இருந்தால் உடனே உறவில் ஈடுபடுங்கள் உங்கள் தலைவலி வந்த சுவடு தெரியாமல் காணாமல் போய்விடும் என்கின்றனர் நிபுணர்கள்.அழகு அதிகரிக்கும்மகிழ்ச்சியான உடலுறவில் பெண்களின் அழகு கூடுகிறது என்கின்றனர் நிபுணர்கள். வாரத்தின் ஏழு நாட்களில் 4 முறை உறவில் ஈடுபடும் பெண்கள் 10 வருடம் வயது குறைந்தவர்களாக தெரிகின்றனர் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.பிரசவம் எளிதாகும்உடலுறவு என்பது சில நிமிட சந்தோஷத்திற்காகவோ அல்லது இனவிருத்திக்காகவோ மட்டுமல்ல அதையும் விட மகத்தான பல பங்குகளைக் கொண்டது. சமீப கால ஆராய்ச்சிகள் இதனை தெளிவுபடுத்தியுள்ளன. நீண்ட நேரம் உடலுறவு கொண்டு கருத்தரிக்கும் பெண்களுக்கும் அதிக நேரம் உடலுறவு கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ள பெண்களுக்கும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல பிரச்சனைகள் குறைகின்றன என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தவிர, பெண்கள் அதிக நேரம் உடலுறவு கொள்வதால் பெண் உறுப்பில் உள்ள தசை நார்கள் வலுவடைய உதவுவதாகவும் இது பிற்காலத்தில் ஏற்படும் சிறுநீர்க் கசிவு உபாதைகளைப் போக்கிடும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.உற்சாகமான மனநிலைகலவியின் போது பல ரசாயன மாற்றங்கள் உடலில் நிகழும் மூளையில் டோஃபாமைன் அளவுகள் ஏறும். உறவின் மூலம் ரத்த அழற்சி சீராகி மூளைக்கு அதிக ரத்தம் பாய்கிறது. வாரம் இரு முறை குறைந்த பட்சம் உறவு வைத்துக் கொள்வது ஜலதோஷத்தை அண்டவிடாது தடுத்திடும் வயிற்றுப் பிரச்சனைகளான நெஞ்செரிச்சல், அல்சர் வலி போன்றவற்றையும் போக்கிடும்.அன்பு அதிகமாகும்திருப்தியான உடலுறவிற்குப் பின், உடல் களைத்துப் போய் சோர்வடைவது இயல்பே. இதற்கு அடிப்படைக் காரணமாக விளங்குவது உடலுறவின் போது, உச்சநிலையை அடைந்த பின்னர் உடல் ‘ஆக்கிடோஸிஸ்' என்ற இரசாயனப் பொருளை சுரக்கின்றது.இதுவே ஓய்வையும் உடல் வெப்பத்தையும் மாற்றமடையச் செய்கின்றது. இப்பொருளே வாழ்க்கை துணைவருடன் அன்பை பெருக்கி இனிய மனநிலையை உண்டாக்குகின்றது.வலியும் சோர்வும் நீங்கும்பெண்களுக்கு உடலுறவு மாதவிலக்கு ஏற்படுத்தும் பலதரப்பட்ட பிரச்சனைகளை சரி செய்கின்றது. குறிப்பாக, மாதவிலக்கின் சமயம் "எஸ்ட்ரோஜனின்" அளவு சீர் செய்யப்படும் பொழுது, மாதவிலக்கிற்கு முன்பாக உடலுறவு கொண்டால் எஸ்ட்ரோஜனின் அளவு எளிமையாக சீரமைக்கப்படுகின்றது. அதனால் மாதவிலக்கின் போது ஏற்படும் பலவிதமான வலிகள் சோர்வு போன்ற உபாதைகள் பெரிதும் குறைவதும் கண்டறியப்பட்டுள்ளது.மனச்சோர்வு நீங்கும்ஆண்களுக்கு உடல் உறவு களைப்பை, இறுக்கத்தை, மனச்சோர்வை போக்கிடும் ஒர் மாமருந்தாகும். மனம் அமைதி பெறவும் உடல் புத்துணர்ச்சி பெற பெரிதும் பயன்படும் அற்புத செயலாகும்.எனவேதான் உளவியல் நிபுணர்கள் பலரும் பிரம்மச்சரியத்தை விட, உடலுறவால் தான் அதிக உடல் ஆரோக்கியத்தையும், மன அமைதியையும் தர இயலும் என ஒப்புக்கொள்ள ஆரம்பித்து, பரிந்துரையும் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.அளவுக்கு மிஞ்சினால்தாம்பத்ய உறவு பல விதமான உடல் மற்றும் மனரீதியான நோய்களுக்கு வடிகாலாக அமைந்தாலும், அளவோடு வைத்துக்கொள்வதே நல்லது என்கின்றனர் நிபுணர்கள். அளவுக்கு அதிகமான உடலுறவு சோர்வை கொடுத்து உடலை பலவீனமடையச் செய்து விடும். எனவே குறைந்த இடைவெளியில் வாரத்திற்கு இரண்டு முறைக்கு மிகாமல் உறவு கொள்வதே ஆரோக்கியம் என்பது நிபுணர்களின் கருத்து.
English summary
Some people say sex is overrated, and others believe otherwise. But in reality, sex can really help you beyond just your bedroom. Find out why sex is important in a relationship, and how you can use it to have a better life.
Story first published: Thursday, December 27, 2012, 8:15 [IST]

Get Notifications from Tamil Indiansutras