படுக்கை அறையில் கவனச்சிதறல் இருக்கக் கூடாது என்பார்கள். தம்பதியர் இருவரும் உறவின் போது வேறு எதைப்பற்றியும் சிந்திக்காமல் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்பட்டால் மட்டுமே உறவில் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும்.
இது தொடர்பாக அமெரிக்காவின் ஜான்ஸ் காப்ஹின்ஸ் ப்ளூம்பெர்க் பொது சுகாதார அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்த ஆய்வினை மேற்கொண்டனர். தம்பதியரிடையேயான உணர்வு ரீதியான, மனரீதியான நிலைகளைப் பற்றி ஆய்வு மேற்கொண்ட அவர்கள், தாம்பத்ய உறவின் போது தன்னம்பிக்கை, சுதந்திரமான செயல்பாடு, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் திறன் இருந்தால் மட்டுமே அவர்களால் மகிழ்ச்சிகரமாக உறவில் ஈடுபடமுடியும் என்று கூறியுள்ளனர்.
இந்த அளவுகோளின் அடிப்படையில் பலரிடம் கேள்விகளை முன்வைத்தனர் ஆய்வாளர்கள். ஓரல் செக்ஸ் மூலம் அவர்கள் அனுபவிக்கும் நிலைபற்றி கேள்வி கேட்டனர். அதன் மூலம் தாம்பத்ய உறவில் சரியான மகிழ்ச்சி கிடைக்கிறதா? என்றும் அவர்கள் கேட்டறிந்தனர்.
பெண்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் படுக்கை அறையில் தங்களின் துணைவர் தாங்கள் கூறுவதை கவனித்து அதன்படி நடந்து கொள்வதன் மூலம் முழுமையான இன்பத்தை அனுபவிக்க முடிவதாக ஆய்வாளர்களிடம் தெரிவித்தனர்.
படுக்கை அறையில் தம்பதியரிடையே நடைபெறும் உரையாடல், அவர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரிக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.