•  

‘கிஸ்’டரியின் ஹிஸ்டரி தெரியுமா?

முத்தம் என்ற வார்த்தையே சிலருக்கு மூர்ச்சையை ஏற்படுத்தும். அன்பு, பாசம், காதல், நேசம் இப்படி எத்தனையோ வார்த்தைகளில் சொல்வதை முத்தம் என்ற ஒரு செயலின் மூலம் நிரப்பிவிடலாம். முத்தம் பற்றி பல சுவாரஸ்யமான விசயங்கள் உள்ளன. முத்தம் கொடுப்பவருக்கும் சரி, அதை பெற்றுக்கொள்பவருக்கும் சரி ஒரே மாதிரியான மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அந்த முத்தம் பற்றி கிஸ்டரி என்ற புத்தமே எழுதியுள்ளார் ஒருவர் அதைப் பற்றி நீங்களும் தெரிஞ்சுக்க வேணாமா? படிங்களேன்.



எப்போ எப்படி வந்தது?

எப்போ எப்படி வந்தது?

முத்தம் அதாவது kiss என்ற வார்த்தை ஜெர்மனியில் உள்ள kussjan என்ற வார்த்தையின் ஒலியில் இருந்துதான் வந்துள்ளது என்கிறார் அந்த எழுத்தாளர். முத்தம் தோன்றியது பற்றி தெளிவான வரலாறு இல்லை என்றாலும், கி.மு. 1500வது ஆண்டிலேயே நமது வேதங்களில் முத்தம் குறித்த குறிப்புகள் உள்ளன. இந்தியர்கள் கண்டுபிடித்த முத்தத்தின் வகை 30, அதேசமயம், ரோமானியர்கள் கண்டுபிடித்ததோ 3 வகை முத்தத்தை மட்டுமே.

முத்தம் கொடுத்தால் மரணம்

முத்தம் கொடுத்தால் மரணம்

உதட்டுடன் உதடு பொறுத்தி கொடுக்கப்படும் ப்ரெஞ்ச் கிஸ் இந்தியாவில் இங்கிலீஸ் கிஸ் என்று கூறப்படுகிறது. 1990ல் நடைபெற்ற திருவிழா ஒன்றில் 8 மணிநேரத்தில் 8001 ஜோடிகள் முத்தம் கொடுத்தனராம். சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 16 பேர் முத்தம் கொடுத்துள்ளனர்.

பல ஊர்களில் பல முத்தம்

பல ஊர்களில் பல முத்தம்

நேபாள நாட்டில் 1562ஆம் ஆண்டில் பொது இடங்களில் முத்தம் கொடுத்தால் மரணதண்டனையாம். காதலர்களை உடனடியாக கொலை செய்திருக்கின்றனர் பாவிகள்.

ரோமானியர்களைப் பொறுத்தவரை, ஒருவருக்கு ஜலதோஷம் பிடித்திருந்தால் அவரது மூக்கில் கழுதையை முத்தமிட வைப்பார்களாம். அப்படி செய்தால், ஜலதோஷம் போய் விடும் என்பது அவர்களது நம்பிக்கை.

அதேபோல ரோமானியர்கள், கல்யாண நிகழ்ச்சிகளின் முடிவில் ஒருவருக்கொருவர் முத்தத்தை அன்புப் பரிமாற்றமாக பகிர்ந்து கொள்வார்களாம்.

 

பனிப்பிரதேச ஜில் முத்தம்

பனிப்பிரதேச ஜில் முத்தம்

எஸ்கிமோ முத்தம் மிகவும் பிரபலமானது. பனிப் பிரதேசங்களில் வசிக்கும் இனுயுட் இன மக்கள் ஒருவர் மீது கொண்ட பாசத்தை வெளிப்படுத்த மூக்கோடு மூக்கு உரச நெற்றி அல்லது கன்னத்தில் அழுத்தமாக முத்தமிடுவது வழக்கம். இதை அவர்கள் கலாச்சாரமாகவே பின்பற்றி வருகின்றனர்.

கடிதங்களில் முத்தம்

கடிதங்களில் முத்தம்

அதேபோல வெளிநாடுகளில் கடிதம் எழுதுவோர் கடிதத்தின் முடிவில் எக்ஸ் (X) குறியிடுவது வழக்கம். அதாவது முத்தத்தைப் பரிமாறிக் கொள்வதன் அடையாளமாக அதை வைத்துள்ளனர்.

காலியாகும் கலோரி

காலியாகும் கலோரி

முத்தம் கொடுப்பதன் மூலம் நமது உடலில் கலோரிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைகிறதாம். முத்தம் கொடுக்கப்படுவதைப் பொறுத்து நிமிடத்திற்கு 22 கலோரி வரை குறையுமாம். அதேசமயம், விநாடிக்கு 12 கலோரி வரை குறைகிறது என்று மற்றொரு ஆய்வில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

முத்தக் காட்சி ரெக்கார்டுகள்

முத்தக் காட்சி ரெக்கார்டுகள்

உலகிலேயே முதல் முறையாக முத்தக் காட்சிஇடம்பெற்ற படம் ஹாலிவுட் படம்தான். 1896ம் ஆண்டு முதல் முத்தக் காட்சி ஹாலிவுட் படம் ஒன்றில் இடம் பெற்றது. அதேபோல முதல் முறையாக பிரெஞ்சு முத்தம் இடம் பெற்ற ஆண்டு 1961ம் ஆண்டாகும்.

அதேபோல 1926ம்ஆண்டு ஜான் பாரிமோர் என்ற ஹாலிவுட் கலைஞர் நடித்த படத்தில் கிட்டத்தட்ட 127 முத்தக் காட்சிகள் இடம் பெற்றிருந்ததாம். இன்று வரை இதுதான் முத்த ரெக்கார்டாக உள்ளது.

 

உயிரிழப்பு அபாயம்

உயிரிழப்பு அபாயம்

சீனாவில் ஒரு பெண் மிகவும் ஆழமான முத்தத்தை வாங்கியபோது அவளது காது செவிடாகி விட்டதாம். ஜப்பானில் ஒரு பெண் ஆழமான முத்தம் வாங்கி உயிரை இழுந்துவிட்டாள். உறவின் உச்சக்கட்ட நிலையில் ஆண் கொடுத்த முத்தம் அவளின் உயிரை காவு வாங்கிவிட்டது. வாயோடு வாய் பொருத்தி, உதடுளை இறுக்கமாக கவ்வியபடி ஆழமாக முத்தம் கொடுக்கும்போது வாய்க்குள் காற்று புக முடியாத நிலை ஏற்படுகிறது. இது பிரச்சினையைத் தரும் என்பது உண்மைதான் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

பரிமாறப்படும் பாக்டீரியாக்கள்

பரிமாறப்படும் பாக்டீரியாக்கள்

ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாளில் சராசரியாக 336 மணிநேரம் முத்தமிடுவாக தெரிவிக்கிறார் அந்த எழுத்தாளர். முத்தம் கொடுப்பதன் மூலம் 278 வகை பாக்டீரியாக்கள் இடம் மாறுகின்றன. இது நோய் பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோல் முத்தமிடுவதன் மூலம் சில வகை நோய்களும் கூட உடல் விட்டு உடல் மாறும் வாய்ப்புகள் உள்ளன என்பது இன்னொரு எச்சரிக்கைச் செய்தி. அதேசமயம், முத்தமிடுவதால் எச்ஐவி பரவுவதில்லை என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. எனவே முத்தம் கொடுப்பவரோ பெறுபவரோ வாயை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டியது அவசியம்.

 

English summary
Want to know what a kiss reveals? A new book, 'Kisstory' tells the history of kissing and reveals that not all smooches are romantic. For instance, in Naples in 1562 kissing publicly was punishable by death. The word "kiss" comes from the Germanic word kussjan, probably because of the sounds it makes.
Story first published: Monday, December 3, 2012, 14:08 [IST]
Please Wait while comments are loading...

Get Notifications from Tamil Indiansutras