•  

கிளைமேக்ஸ் சூப்பரா இருக்கணுமா? இதப்படிங்க!

The Secret to Bigger, Better Orgasms
 
ஆரம்பம் நல்லாத்தான் இருக்கு ஆனால் முடிவு சரியில்லையே என்று வருத்தப்படும் தம்பதியர் பலர் உண்டு. இதற்கு காரணம் சரியான திட்டமிடுதல் இல்லாததுதான் என்கின்றனர் நிபுணர்கள். ஆர்கஸம் எனப்படும் கிளைமேக்ஸ் சரியாக இல்லாவிட்டால் இருவருக்குமே சிக்கல்தான். சரியான கிளைமேக்ஸ்சினை எட்ட நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை படியுங்களேன்மனஅழுத்தம் ஏற்படும்பெண்களுக்கு ஆர்கஸம் என்ற நிலை எட்டப்படவில்லை எனில் எரிச்சல், மன அழுத்தம் போன்றவை கூட ஏற்படுகிறதாம். இதனால் வாழ்க்கைத்தரமும், உறவும் பாதிக்கும் என்கின்றனர் அமெரிக்காவின், லாஸ் ஏஞ்ஜலீஸிலுள்ள செடார் சினாய் மருத்துவ மையத்தின் உளவியல் ஆய்வாளர் வாகி வில்லியம் இஷக்! தாம்பத்திய உறவில் ஈடுபடுவோரால் தொடர்ந்து ஆர்கஸத்தை அடையமுடியவில்லையென்றால் அது அனார்கஸ்மியா என்ற செக்ஸ் குறைபாட்டினை ஏற்படுத்திவிடுவாம்.நான்கில் ஒருவர் பாதிப்புஉச்சக்கட்டத்தை எட்டமுடியாமை என்பது பெண்களிடையே ஒரு பொதுவான பிரச்சினையாக இருக்கிறது என்று கண்டறியப்பட்டது. மேலும் நான்கில் ஒரு பெண்ணுக்கு பகல்கனவாகவே இருக்கும் ஆர்கஸம் குறைபாட்டை தீர்க்க மருத்துவமும், இதுவரையிலான ஆய்வுகளும் போதவில்லை என்று விஞ்ஞானி இஷக் தெரிவித்துள்ளார்.பலருக்கும் இதே பிரச்சினைகடந்த 2001 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 20 முதல் 40 வயதான பெண்களில், சுமார் 24% பெண்களுக்கு மாதக்கணக்கில் உச்சக்கட்டத்தை எட்டமுடியாமை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலோனோர் மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவதில்லை. இதற்கு காரணம் அவமானப்பட நேரிடுமோ என்ற அச்சம்தான்.உளவியல் சிகிச்சைதேவைஆர்கஸம் தொடர்பான பிரச்சினை காரணமாக ஒருவர் மருத்துவரை அணுகினாலும், தீர்வுக்கான சிகிச்சை சிக்கலானது. காரணம், ஆர்கஸத்தைப் பொருத்தவரை இத்தனை நாட்களில், இத்தனை தரம் உச்சக்கட்டத்தை அடைவதுதான் இயல்பானது என்று சொல்லும் ஒரு திட்டவட்டமான வரையரை கிடையாது! ஆக, மருத்துவர்கள் நோயாளிகளின் வயது, செக்ஸ் அனுபவம் மற்றும் திருப்தி ஆகியவற்றைக் கொண்டே ஒரு தீர்வை காண முயலவேண்டும் என்கிறார் இஷக்!.கிளைமேக்ஸ் உணவுகள்உடல் ரீதியாக சிக்கல் இருந்தாலும் ஆர்கஸம் பிரச்சினை ஏற்படும். சத்தான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் சூப்பராக கிளைமேக்ஸ்சினை எட்டலாம் என்கின்றனர் நிபுணர்கள். ஒமேகா 3 சத்துள்ள கடல் உணவுகளை உட்கொள்ளலாம்.துத்தநாகச் சத்து அவசியம்துத்தநாகச்சத்துக் கொண்ட பூசணிக்காய் விதை, பொட்டாசியம் சத்து நிறைந்த வாழைப்பழம், டார்க் சாக்லேட், போன்றவை கிளர்ச்சியை தூண்டுவதோடு சரியான கிளைமேக்ஸ் ஏற்பட வழி வகுக்குமாம்.பூண்டு, ஆலிவ் எண்ணெய்வெள்ளைப்பூண்டு இயற்கை வயக்ரா என்று அழைக்கப்படுகிறது. தினசரி உணவில் வெள்ளைப் பூண்டு சேர்த்துக்கொண்டால் தம்பதியரின் செக்ஸ் வாழ்க்கையில் கூடுதல் திருப்தி ஏற்படுமாம்.ஆர்கஸம் பிரச்சினை உள்ள பெண்கள் ஆலிவ் எண்ணெயை உணவில் சேர்த்துக்கொண்டால் அவர்களின் செக்ஸ் ஹார்மோன் அளவு சரியான அளவு சுரக்கும். இதன் மூலம் தாம்பத்ய வாழ்க்கையில் திருப்தியான நிலை ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள்.
English summary
Climaxing issues keeping you off sex? Hitting the so-called 'Big O' remains a dream for you? Well, a major reason for your poor sexual prowess can be what lies on your platter.
Story first published: Monday, November 5, 2012, 14:44 [IST]

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more