•  

வயதான பின்னும் அதில் அதிக ஆர்வம் காட்டும் பெண்கள்!

Older Women Still Enjoy Sex
 
உடல் ஆரோக்கியமாக இருக்கும் பெண்கள் வயதான பின்னும் தாம்பத்ய உறவில் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனராம். உடல்நலம் குறைந்தவர்களுக்கு மட்டுமே செக்ஸ் ஆர்வம் குறைந்து போகிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.இது தொடர்பாக கலிபோர்னியா- சான்பிரான்சிஸ்கோ பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன.நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு ஏற்படும் செக்ஸ் உணர்வுகளைப் பற்றியும் அவர்களுக்கு அதில் ஏற்படும் திருப்தி பற்றியும் அறிந்து கொள்வதற்காகவே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.45 வயது முதல் 80 வயது வரை உடைய 2000 பெண்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். 65 வயதை உடைய பெண்கள் தங்கள் துணையுடனான உறவில் அதிக ஆர்வத்துடன் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர். ஆய்வு நடைபெறுவதற்கு முந்தைய மூன்று மாதங்களுக்கு அவர்களின் செக்ஸ் ஈடுபாடு தீவிரமாக இருந்ததாம்.இவர்களில் 39 சதவிகிதம் பேர் தங்களுக்கு செக்ஸில் ஆர்வம் இல்லை என்று கூறியுள்ளனர். 36 சதவிகிதம் பேர் தங்களின் துணைக்கு ஆர்வம் குறைவாக இருப்பதாக கூறியுள்ளனர். 23 சதவிகிதம் பேர் உடல்நலக்குறைபாடு காரணமாக துணைக்கு செக்ஸில் ஆர்வம் குறைவாக இருப்பதாக கூறியுள்ளனர். 9 சதவிகிதம் பேர் உடல்நலக்குறைபாடு காரணமாக செக்ஸில் ஆர்வம் குறைவதாக கூறியுள்ளனர்.இதேபோல் சிகாகோ பல்கலைக் கழக ஆய்வறிக்கையின் படி 20 வயதுகளில் இருக்கும் பெண்கள் மிகக்குறைவாகவே உச்சட்ட சிலிர்ப்பு நிலையை அடைகின்றனர் என்றும் 40 வயதுகளில் இருக்கும் பெண்களே அதிகமாக அந்நிலையை அடைகின்றனர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.இளமைக் காலத்தில் உறவுக்கு அழைப்பதில் ஆண்கள் முன்னுரிமை தருகின்றனர். ஆனால் நடுவயதில் பெண்தான் ஆர்வம் மிகுந்தவளாக இருப்பாள். இதற்குக் காரணம் ஆண் பெண் இருவர் உடலிலும் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டெரோன் ஹார்மோன்தான். வயதாகும் போது ஆணுக்கு இவையிரண்டும் அளவில் குறையத் தொடங்கும். ஆனால் பெண் உடலில் டெஸ்டோஸ் டெரோனின் குறைவை ஈஸ்ட்ரோஜன் ஈடுகட்டுகிறது. எனவேதான் ஆணை விடவும் பெண் நடுவயதில் அதிக ஆர்வம் கொண்டவளாக இருக்கிறாள்.இளவயதினை விட வயது முதிரும் போது மோகத்திற்கு பார்வை மட்டும் போதுமானதாக இருப்பதில்லை. தொடு உணர்ச்சிகளே அந்நிலைக்குத் தூண்ட முடியும். எனவே தான் இவ்வயதுகளில் நிதானமும் செயல்திறனும் இவ்விஷயத்தில் உதவிகரமாக இருக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
English summary
There’s a common misconception that as women age, they lose interest in sex due to their own physical problems. A new University of California-San Francisco study shows that is not the case for most women.The study also showed significant differences in the frequency of sexual activity, as well as sexual desire and satisfaction, among racial groups of middle-aged and elderly women.
Story first published: Sunday, November 4, 2012, 16:57 [IST]

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more