குளிர்காலத்தில் நம் உடம்பில் டெஸ்டோஸ்டீரான் அளவு குறைவாகத்தான் இருக்கும் என்பதால் செக்ஸ் உணர்வுகளும் கூட சற்று அடக்கமாகவே இருக்கும். எனவே அதற்காக அமைதியாக இருந்துவிடாமல் சின்னச் சின்ன ரொமான்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்கின்றனர். அதற்கான ஆலோசனைகளையும் கூறியுள்ளனர் படியுங்களேன்.
குறையும் ஹார்மோன்
குளிர்காலத்தில் உடல் ரீதியாகவே நமது உடல் செக்ஸ் தேவையை நாடுவது குறையுமாம். இதற்கு ஹைபர்னேஷன் காலம் என்று பெயரிட்டுள்ளனர் முன்னோர்கள். இதனால் உடலின் மெட்டபாலிசமும் கூட குறையுமாம். இருந்தாலும் இதைத் தவிர்த்து செக்ஸ் ரீதியாக இயல்பாக இருக்க சில வழிகள் உள்ளன.
மூடு கிளப்பும் நீல ஒளி
கோடைகாலத்தில் இருப்பதைப் போன்றஉணர்வுகளுக்கு நாம் மனதைப் பழக்கிக் கொள்ள வேண்டும். உடல் ரீதியாகவும் இதை பழக்கப்பட்டு ஒரு எளிய வழி உள்ளது. அதுதான் லைட் தெரப்பி. நீல நிற விளக்கொளியில் துணையுடன் அமர்ந்து நேரத்தை செலவிட வேண்டுமாம். அப்போது நமது உடலுக்குத் தேவையான சூடு கிடைப்பதோடு, மனதிலும் மூடு கிளம்புமாம்.
இந்த நீல விளக்கானது, நமது உடலின் சர்காடியன் ரிதம் எனப்படும் பயோகிளாக்கை சரிப்படுத்தி நமது உடலில் இயக்கத்தை இயல்பாக்க உதவுகிறதாம். அதாவது கோடைகாலத்தில் நமது உடல் இருப்பதைப் போல மாறுமாம்.
உடம்பில் சூடேற்றுங்கள்
கடும் குளிர்காலத்தில் மூடு வரும் என்று சிலர் நம்புகிறார்கள். ஆனால் குளிர் கடுமையாக இருக்கும்போது செக்ஸ் உணர்வுகள் மங்குமாம். உடல் வெப்பநிலை குறையுமாம். இதனால் செக்ஸ் உணர்ச்சிகள் இருவருக்கும் குறைந்தே காணப்படுமாம். நமது உடலின் சருமம் சூடாக இருந்தால்தான் உணர்ச்சிகள் நிறைய வரும் என்பது ஆய்வாளர்களின் கருத்து. நிறைய ஆண்களுக்கு கடும் குளிரை அனுபவிக்கும்போது எழுச்சியே இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் இதையும் சமாளிக்கலாம்.
துணையின் உடைகள்
உங்களது துணையின் உடையை எடுத்து சற்று நேரம் அணிந்து கொண்டு, அவருடைய நினைவில் மூழ்கினால் உடல் சூடு இயல்பாகுமாம். அதாவது கணவரின் சட்டையை மனைவி அணிந்து கொள்வது, மனைவியின் பிராவை எடுத்து கணவன் உடலோடு சேர்த்து வைத்துக் கொள்வது போல...மேலும் உடல் ரீதியான உராய்வுகளும் கூட சூட்டை ஏற்படுத்துமாம். இதன் மூலம் இயல்பு நிலைக்கு உடலைக் கொண்டு வர முடியுமாம்.
பாதம் சூடா இருக்கா?
பெண்களின் பாதம் சூடாக இருந்தால் செக்ஸ் மூடு நன்றாக இருக்குமாம்.இதை ஆய்வுப்பூர்வமாக நிரூபித்துள்ளனர். அப்படி பாதம் சூடாக இருந்தால் பெண்களுக்கு எளிதில் ஆர்கஸம் வருமாம்.
இரவு லைட்டா சாப்பிடுங்க
ராத்திரி சாப்பாட்டை அதிகம் சாப்பிடுவதால் உடல் எடை குளிர்காலத்தில் கூடுமாம். இதனாலும் செக்ஸ் ஆசைகள் குறையுமாம். கோடை காலத்தை விட குளிர்காலத்தில் ராத்திரி சாப்பாடு, விருந்துகளால் உடல் எடை அதிகமாகும். அதாவது ஒரு கிலோ வரை கூடுமாம்.
இதைத் தவிர்க்க இரவு நேர விருந்துகளைக் குறக்க வேண்டும். குறிப்பாக பீட்சா, பர்கர் போன்றவற்றைக் குறைப்பது நல்லது. எளிதான சாப்பாட்டுக்கு மாற வேண்டும். இதன் மூலம் உடலில் கொழுப்பு சேருவது குறைந்து செக்ஸ் உணர்வுகள் வற்றாமல் தடுக்கலாம்.
இப்படிச் சின்னச் சின்னதாக சில உபாயங்களைப் பயன்படுத்தி உடல் சூடு குறையாமல் பார்த்துக் கொண்டு, செக்ஸ் உணர்வுகள் வற்றி விடாமல் தடுக்கலாம். சில்லென்று ரொமான்ஸை ஆரம்பிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.