•  

தினசரி உறவு… உடலுக்கு மட்டுமல்ல மனதுக்கும் நல்லது!

Sex
 
தாம்பத்ய உறவின் மூலம் உடலுக்கு மட்டும் சந்தோஷம் கிடைப்பதில்லை. மனதும் உற்சாகமடைகிறது. மூளையும் புத்துணர்ச்சியடைகிறது என்று ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். தினசரி உறவில் ஈடுபடுவதன் மூலம் உண்டாகும் நன்மைகளையும், பலன்களையும் பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.பாசப்பிணைப்பு அரிகரிக்கும்தினசரி செக்ஸ் வைத்துக் கொள்வதன் மூலம் இருவருக்கும் இடையே உடல் ரீதியான பாசப் பிணைப்பு அதிகரிக்கிறது. உடலும் ஆரோக்கியமாக திகழ வழி கிடைக்கிறது என்று கூறுகிறார் கொலம்பியா பல்கலைக்கழக மகப்பேறியல் துறை பேராசிரியர் டாக்டர் ஹில்டா ஹட்சர்சன்பிரச்சினையை சமாளிக்கலாம்மேற்கு ஸ்காட்லாந்து பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை உறவில் ஈடுபடுவோருக்கு மன அழுத்தம் போன்ற சூழல்களை எளிதாக சமாளிக்க முடிகிறது என்று தெரியவந்துள்ளது.உற்சாகம் தரும் ஹார்மோன்கள்செக்ஸ் உறவின்போது வெளியாகும் என்டார்பின் மற்றும் ஆக்ஸிடாசின் ஹார்மோன்கள், நமது மூளையின் மகிழ்ச்சிப் பிரதேசத்தைத் தூண்டி விட்டு நம்மை உற்சாகத்தில் வைத்திருக்க உதவுகிறது. மேலும், ரொமான்டிக் மூடையும் இது தூண்டி விடுகிறது. மனதையும், உடலையும் ரிலாக்ஸ் ஆக்குகிறது. இதனால் பதட்டம், மன அழுத்தம், கோபம் போன்றவை சர்ரென்று குறைந்து போய் விடுகிறது.நல்லா தூக்கம் வரும்உடலுறவின்போது கிளைமேக்ஸை எட்டினால்தான் இந்த சந்தோஷம் கிடைக்கும் என்று இல்லை. மாறாக ஆர்கசம் வந்தால் கூட போதுமானாதாம்.அதிக அளவில் உற்சாகமான உறவில் ஈடுபடும் நாட்களில் நன்றாக உறக்கம் வருமாம். இதற்கு காரணம் ஆர்கஸத்தின்போது வெளியாகும் புரோலடாசின் என்ற ஹார்மோன்தான் என்கின்றனர் ஆய்வாளர்கள். இந்த ஹார்மோனுக்கும் உறக்கத்திற்கும் நிறைய தொடர்பு இருக்கிறதாம்.பிணைப்பு அதிகமாகும்நாம் தூங்கும்போது புரோலடாசின் ஹார்மோன் அளவானது இயல்பாகவே அதிகம் இருக்குமாம். இதுதான் மனிதர்களின் தூக்கத்திற்கும் முக்கியக் காரணம். இது உறவு கொள்ளும் ஆண், பெண்ணுக்கும் இணையிலான பிணைப்புக்கும் முக்கியக் காரணமாகிறதாம்.இருப்பினும் அருமையான, திருப்திகரமான உடலுறவை வைத்துக் கொள்ளும்போது தூக்கம் அவ்வளவு சீக்கிரம் வராதாம். மாறாக உடலுக்கு நல்ல சக்தி கிடைக்குமாம். ஒரு வேளை தூக்கம் வேண்டும் என்று விரும்பினால் சாதாரண முறையிலான செக்ஸ் உறவு கொண்டாலே போதுமானதாம்.புத்துணர்ச்சி கிடைக்கும்அதேபோல செக்ஸ் வைத்துக் கொள்வோருக்கு உடல் வலி, அசதி போன்றவையும் நீங்கி புத்துணர்ச்சி கிடைக்குமாம். ஆர்கஸத்திற்குப் பின்னர் வெளியாகும் ஹார்மோன்களின் அளவுதான் இதற்குக் காராணம். முதுகு வலி, தலைவலி போன்றவை நல்ல செக்ஸ் உறவுக்குப் பின்னர் காணாமல் போய் விடுமாம்.தலைவலியை குறைக்கும்மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி உள்ள பெண்கள் பலரிடம் நடத்தப்பட்ட ஆய்வின்போது, அவர்களுக்கு கிளைமேக்ஸ் வந்த பின்னர் அந்தத் தலைவலி குறைந்து அல்லது மறைந்து போனது தெரியவந்தது. இதற்குக் காரணம். ஆர்கஸத்தின்போது உருவாகும் என்டோப்ரீன்கள் என்ற ஹார்மோன்தான் உடல் வலியைப் போக்கும் அருமருந்தாக அமைந்துள்ளதாம்.சளியாவது காய்ச்சலாவது.....செக்ஸ் உறவால் சளி பிரச்சினையையும் கூட விரட்டியடிக்க முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள். செக்ஸ் உறவின்போது நமது உடலில் உற்பத்தியாகும் இம்யூனோகுளோபுலின் ஏ என்ற ஆன்டிபயாடிக்தான் இதற்குக் காரணம். இந்த ஆன்டிபயாடிக் காரணமாக நமது உடலை சளித் தொல்லை, காய்ச்சல் போன்றவை தாக்குவது குறைகிறதாம்.English summary
Researchers have shed light on the myriad health benefits that an individual can reap from great sex. "Having sex regularly can do more than make you feel closer to your partner—it can actually make you physically healthier," ABC News quoted Dr. Hilda Hutcherson, a clinical professor of obstetrics and gynecology at Columbia University as saying.
Story first published: Monday, November 19, 2012, 14:58 [IST]

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more