•  

36 சதவிகித பெண்களுக்கு 24 வயசில்தான் முதல் அனுபவமாம்!

பதின் பருவத்திலேயே எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக இருக்கும் இன்றைய கால கட்டத்தில் இந்தியாவில் 36 சதவிகித பெண்கள் தங்களின் 24 வயதில்தான் முதல் செக்ஸ் அனுபவத்தை பெறுவதாக கூறியுள்ளனர். உலக கருத்தடை தினத்தை ஒட்டி எடுக்கப்பட்ட சர்வே ஒன்றில் இது தெரியவந்துள்ளது.Sex
 
செப்டம்பர் 26ம் நாள் உலக கருத்தடை தினத்தை ஒட்டி ஆசிய கண்டத்தைச் சேர்ந்த சீனா, இந்தியா, இந்தோனேசியா, தென் கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா ஆகிய 8 நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 20 முதல் 35 வயதைச் சேர்ந்த 812 பெண்கள் பங்கேற்றனர். அதில் பல சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்துள்ளன.36% இந்திய பெண்கள், தங்களின் 24-29 வயது வரம்பில் முதல் முதலாக உறவில் ஈடுபட்டதாக கூறியுள்ளனர்.ஒரு பெண்ணின் முதல் உடலுறவு கொண்ட வயது 24-29 என்றும், அவரது முதல் கர்ப்பம் 24-27 வயதிற்கும் இடையே ஏற்பட்டது என்று 48% இந்திய பெண்கள் பதிலளித்துள்ளனர்.இந்தியாவில் இந்த கருத்தடை பயன்பாட்டு முறை விகிதம் மிகவும் குறைவாக உள்ளது என்று கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது.முதல் முறையாக நீண்ட காலமாக குடும்ப கட்டுப்பாடு பற்றி நடத்திய ஆய்வில், 55 சதவிகிதம் பேர் ஆணுறை மட்டுமே கருத்தடை சாதனமாக உபயோகப்படுத்துகின்றனர் என்பது தெரிய வந்தது. மேலும் மூன்றில் ஒருவர் கருத்தடை தேவை இல்லை என்று கூறியுள்ளனர்.Read more about: sex, kamasutra, செக்ஸ், survey
English summary
An annual multi-national survey, exploring young people's attitudes to sex and contraception, has been released to mark World Contraception Day (WCD) 2012, which takes place every year on September 26. Here are some of the findings.
 
Story first published: Saturday, November 17, 2012, 10:37 [IST]

Get Notifications from Tamil Indiansutras