ஈகோ..
எந்த ஆணாக இருந்தாலும் ஏதாவது ஒரு ரூபத்தில் பெண்களிடம் தங்களது ஈகோவைக் காட்ட அவர்கள் தவறுவதே இல்லையாம். குத்திக் காட்டிப் பேசுவது, வேண்டும் என்றே நக்கலடிப்பது, கிண்டலடிப்பது ஆகியவை அவர்களின் ஈகோவின் வெளிப்பாடுதானாம். இது பெண்களுக்கு சுத்தமாக பிடிப்பதில்லையாம்.
நான் தப்பே செய்யலையே
அதேபோல தாங்கள் ஒருதவறும் செய்வதில்லை என்றும் தவறு செய்வதெல்லாம் பெண்களின் வழக்கம் என்றும் பாட்டு பாடுவது ஆண்களின் இயல்பாம். இதையும் பெண்கள் கட்டோடு வெறுக்கிறார்களாம். மேலும் தாங்கள் செய்த தவறுகளை மட்டும் அப்படியே மறந்து விடும் ஆண்கள், பெண்கள் தவறு செய்தால் மட்டும் அதை மறக்காமல் சொல்லிச் சொல்லிக் காட்டுகிறார்களாம்.
பார்வை
பெரும்பாலான ஆண்களுக்கு, பெண்களைப் பார்க்கும்போது அவர்களின் அந்தரங்கத்தை ஊடுறுவிப் பார்ப்பதில் அலாதி விருப்பம் இருக்கிறதாம். குறிப்பாக அவர்களின் மார்பகங்களை அப்படியே விழுங்கி விடுவது போல பார்ப்பார்களாம். மேலும் இடுப்பு, உதடுகள், பின்புறம் உள்ளிட்டவற்றையும் விழுந்து விழுந்து பார்ப்பார்களாம். இதையும் பெண்கள் பெரும்பாலும் விரும்புவதில்லையாம்.
பொறாமை
பெண்களை விட ஆண்களுக்குத்தான் பொறாமை ஜாஸ்தியாம். அவர்களுக்குப் பிடித்த பெண் வேறு ஆணுடன் பேசுவதையோ, சிரித்துப் பேசுவதையோ, வெளியில் போவதையோ ஆண்கள் விரும்புவதில்லையாம். இதை பெண்கள் ரசிப்பதில்லையாம்.
சுய தம்பட்டம்
ஏதாவது ஒன்றை செய்து விட்டு, அந்தக் காரியம் என்னால்தான் நடந்தது. நான் இல்லாமல் உன்னால் இதைச் செய்திருக்க முடியாது என்று தம்பட்டம் அடிப்பதில் ஆண்கள்தான் நம்பர் ஒன்னாம். பெண்களுக்குப் பிடிக்காத விஷயம் இதுவாம். மாறாக, தங்களது ஆண்களின் வெற்றியில் பெரும் பங்கெடுத்தாலும் கூட அதைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் அடுத்த வேலையைப் பார்ப்பது பெண்களின் வழக்கமாம்.
ரொம்பத்தான் பாசம்
தங்களுக்குப் பிடித்தவர்கள் மீது பாசத்தைக் கொட்டுவதில் பெண்களை விட ஆண்களே முன்னணியில் உள்ளனராம். இருந்தாலும் இந்த பாசம் சில நேரங்களில் ஓவராகி சம்பந்தப்பட்ட பெண்களை டென்ஷன் ஆக்கி விடுகிறதாம். ஏண்டா இந்த கொலை வெறி என்று கேட்கும் அளவுக்கு பாசத்தைக் கொட்டி விடுகிறார்களாம் ஆண்கள்.
என்னைப் போல வருமா
சில நேரங்களில் பெண்களுக்கு உதவப் போகும் ஆண்கள் தங்களை ஒரு சூப்பர் மேன் போல நினைத்துக் கொண்டு ஏகத்துக்கும் மெனக்கெடுவதை பெண்கள் ரசிப்பதில்லையாம். உனக்காக சூரியனை கொண்டு வருவேன், சந்திரனை தூக்கி வருவேன் என்று டயலாக் விடும் ஆண்களை பெண்கள் இப்போதெல்லாம் கண்டு கொள்வதே இல்லையாம்.
கிண்டல் செய்வது பிடிக்காது
பெண்களைப் பொறுத்தவரை, அவர்கள் துயரத்தில் இருக்கும்போதோ, சோகத்தில் இருக்கும்போதோ அதை கிண்டலடித்துப் பேசினால் அதை அவர்கள் பெரும் பாதிப்பாக எடுத்துக் கொள்கிறார்களாம். நக்கல் செய்வது, குத்திக் காட்டுவது ஆகியவற்றை ஆண்கள் செய்யும்போது பெண்கள் மன வேதனைக்குள்ளாகிறார்களாம்.
வேற வேலையே இல்லையாடா...
சில ஆண்கள் எப்போது பார்த்தாலும் தங்களது பெண் நண்பிகளுடனேயே இருக்க விரும்புவார்கள், இருக்கவும் முயற்சிப்பார்கள். இதை பெண்கள் ரசிப்பதில்லையாம். உனக்கு வேற வேலையே இல்லையா, என்னோட பிரைவசியை புரிஞ்சுக்க மாட்டேங்கிறானே இந்தப் பய என்று பல பெண்கள் புலம்பித் தள்ளுகிறார்களாம்.
படுக்கை அறையில் ஆதிக்கம்
படுக்கை அறையில் ஆண்கள் காட்டும் ஆதிக்கத்தைத்தான் பெரும்பாலான பெண்கள் வெறுக்கிறார்களாம். எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல அவர்கள் நடந்து கொள்வதும், முரட்டுத்தனம் காட்டுவதும், அவசரப்படுவதும், காயப்படுத்துவது போல நடந்து கொள்வதும் பெண்களுக்கு பெரும் கடுப்பைத் தருகிறதாம். இப்படி செய், அப்படி செய் என்று அவர்கள் ஆணையிடுவது போல நடப்பதை பெண்கள் கட்டோடு வெறுக்கிறார்களாம்.
இப்படி பெண்களை எப்படியெல்லாம் இந்த ஆண்கள் கொடுமைப்படுத்துகிறார்கள் என்று அந்த சர்வே கூறினாலும் கடைசியில், என்னதான் ஆண்கள் இப்படிச் செய்தாலும் அவர்களைத்தான் பெண்கள் அதிகம் நேசிக்கிறார்கள், விரும்புகிறார்கள், ஆசைப்படுகிறார்கள் என்றும் கூறி வைத்துள்ளது.
இந்த சர்வே ஆண்களுக்கு நல்லதா.. இல்லை கெட்டதா....'வேலு நாய்க்கரே' உங்களுக்குத் தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்களேன்...!