•  

ஆர்வத்தை தூண்டும் ‘லிபிடோ இன்ஜெக்சன்!

Sex
 
ஆணோ பெண்ணோ பாலியல் ரீதியாக பலரும் ஏராளமான சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். மனஅழுத்தம், வேளைப்பளு உள்ளிட்டவைகளினால் தாம்பத்ய உறவில் ஆர்வமின்மை ஏற்படுகிறது. அவர்களின் சிக்கலுக்கு வரப்பிரசாதமாக முன்பு வயக்ரா கண்டுபிடிக்கப்பட்டது. ஆண்களுக்கு மட்டுமேயான இந்த மாத்திரையை விட தற்போது ‘லிபிடோ இன்ஜெக்சன்' இருபாலருக்கும் நன்மை தரக்கூடியதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த மருந்தை பயன்படுத்தினால் போனசாக உடல் எடையும் கணிசமான அளவு குறைகிறது என்கின்றனர் நிபுணர்கள்.உலகம் முழுவதும் மூன்றில் ஒரு பங்கு பெண்களும், ஆறில் ஒரு பங்கு ஆண்களும் பாலியல் ஆர்வமின்மை கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான வரப்பிரசாதம் இது என்கின்றனர் இந்த புதிய அதிசய மருந்து தயாரிப்பாளர்கள்.வயக்ரா மாத்திரையை உலகமெங்கும் மூன்று கோடி பேருக்கும் மேலாக பயன்படுத்தியுள்ளதாக புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது. ஆனால் இந்த புதிய கண்டுபிடிப்பான ‘லிபிடோ இன்ஜெக்சன்' வயாகராவைப் போல மேனியில் நேரடியாக மாற்றங்களை ஏற்படுத்தாமல் மூளையில் மாற்றத்தை ஏற்படுத்தி பாலியல் ஆர்வத்தையும், ஆரோக்கியத்தையும் தூண்டுகிறதாம்.வயாகரா வெறுமனே உடலில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன் நின்று விடுகிறது. மன அளவில் அது எந்த விதமான ஆர்வத்தையோ, விருப்பத்தையோ, மோகத்தையோ கிளறிவிடுவதில்லை. கூடவே அது முழுக்க முழுக்க ஆண்களுக்கானது. ஆர்வமற்ற பெண்களுக்கு வயாகராவினால் எந்த பயனும் இல்லை. ஆனால் இந்த புதிய ஆர்வம் தூண்டும் மாத்திரை பெண்களுக்கும் ஆண்களுக்கும் பொதுவானது என்பது குறிப்பிடத் தக்கது. இந்த மருந்து Type 2 gonadotropinb ஐ வெளிவிடும் ஹார்மோன்களை ஊக்கப்படுத்துவதன் மூலம் பாலியல் ஆர்வத்தை தூண்டுகிறதாம்.ஆர்வத்தைத் தூண்டுவதன் மூலமும், அதற்குரிய சுரப்பிகளை சுரக்கச் செய்வதன் மூலமும் ஆண்மைக் குறைபாடு உட்பட பல நோய்களையும் இந்த மருந்து சரி செய்து விடும் என்கின்றனர்.முதலில் பெண்களுக்கென தயாரிக்கப்பட்ட இந்த மருந்து ஆண்களுக்கும், பெண்களுக்கும் பயன்படுத்தப்படும் வகையில் இப்போது உருவாகி வருகிறது. மூளையில் நேரடியாக ஊசி மூலம் செலுத்த வேண்டும் என துவங்கிய ஆராய்ச்சி இப்போது இரத்தக் குழாய்களிலும் செலுத்தலாம் எனும் அளவில் வளர்ச்சியடைந்திருக்கிறது. இதை மாத்திரையாக தயாரிக்கும் முயற்சி இப்போது நடைபெற்று வருகிறது.வயாகராவை முழுமையாக துடைத்து எறியும் நோக்குடன் இந்த மருந்து மன உடல் சார்ந்த பிரச்சனைகளின் தீர்வாக தயாராகிக் கொண்டிருக்கிறது என்பது சர்வதேச கவனத்தை ஈர்த்திருக்கிறது.இந்த மருந்தை உட்கொள்வதன் மூலம் மற்றுமொரு நன்மை கிடைக்கிறதாம் அதாவது உடல் எடை கணிசமாகக் குறையும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.English summary
Scientists claim to have discovered the secret of sexual desire in a breakthrough that could change millions of lives around the world. They are developing a 'wonder pill' to generate sex drive in both women and men who struggle with their libido. The medication could also have the potential to boost fertility rates and is believed to have the side-effect of encouraging weight-loss.
 
Story first published: Tuesday, October 2, 2012, 16:01 [IST]

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more