•  

சிக்கன் சாப்பிட்டா செக்ஸ் ஹார்மோன் அதிகரிக்குமாம்!

செக்ஸ் ஹார்மோன்கள் சரியாக சுரக்காவிட்டால் சிக்கல்தான். ஆணோ, பெண்ணோ இருவராலுமே சரியாக ஈடு கொடுக்க முடியாது. உடலில் ஹார்மோன்கள் சரியான அளவு சுரக்க வேண்டுமெனில் அதற்கேற்ப சில உணவுகளை கண்டிப்பாக உட்கொள்ளவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.ஆண்மைக்கு சிக்கன்

ஆண்மைக்கு சிக்கன்

டெஸ்டோஸ்டிரோன் என்னும் ஹார்மோன் ஆண்களுக்கு செக்ஸ் உணர்வினை அதிகரிக்க காரணமாக இருக்கிறது. சிக்கனில் உள்ள துத்தநாகம், பி6 வைட்டமின் போன்றவை டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதன் மூலம் ஆண்களுக்கு கிளர்ச்சி அதிகரிக்கும்.

ஹார்மோனை தூண்டும் கறுப்பு உளுந்து

ஹார்மோனை தூண்டும் கறுப்பு உளுந்து

கறுப்பு உளுந்து சாப்பிட்டால் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். எனவே 40 வயதிற்கும் குறைவாக உள்ள ஆண்கள் வாரம் ஒருமுறையும், 40 வயதிற்கு மேல் உள்ள ஆண்கள் வாரம் மூன்று முறையும் கறுப்பு உளுந்தை வேகவைத்து சாப்பிடலாம். இதன் மூலம் டெஸ்டோஸ்டிரோன் சுரப்பு அதிகரிக்கும்.

விந்தணு உற்பத்திக்கு பிரேசில் நட்ஸ்

விந்தணு உற்பத்திக்கு பிரேசில் நட்ஸ்

நட்ஸ் சாப்பிடுவது உடலுக்கு நல்லது அதிலும் பிரேசில் நட்ஸ் தான் ஆண்களுக்கு சிறந்தது. இதில் உள்ள செலினியம் எனும் பொருள் ஆண்களின் விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கும். மேலும் செலினியம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, உறவு கொள்ள ஆர்வத்தை தூண்டும் இயற்கை வயக்ராவாக செயல்படுகிறது.

செக்ஸ் உணர்வுக்கு கடல்சிப்பி

செக்ஸ் உணர்வுக்கு கடல்சிப்பி

கடல் சிப்பியில் துத்தநாகச் சத்து அதிகம் உள்ளது. இது விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும். டெஸ்ட்டோஸ்டிரன் ஹார்மோனை சரியாக சுரக்கச் செய்யும். இது மூளையில் டோபமைன் ஹார்மோனை தூண்டும். ஆண், பெண் செக்ஸ் உணர்வை அதிகரிக்கச் செய்யும்.

கிளர்ச்சியூட்டும் பூசணி விதை

கிளர்ச்சியூட்டும் பூசணி விதை

பூசணிக்காய் விதையில் உயர்தர துத்தநாகம் அடங்கியுள்ளது. இது டெஸ்ட்டோஸ்டிரன் ஹார்மோன் குறைபாட்டினை சரிசெய்யும். மேலும் இதில் உள்ள பி, இ, சி, டி மற்றும் கே வைட்டமின்கள் ஆண்களின் செக்ஸ் உணர்வை இயற்கையாக தூண்டும்.

 

English summary
Chicken contains zinc and B6 in abundance which help in the production of testosterone, the hormone that is responsible for a man's sex drive.
Story first published: Tuesday, October 30, 2012, 17:18 [IST]
Please Wait while comments are loading...

Get Notifications from Tamil Indiansutras