•  

சிலந்தியின் விஷம் செக்ஸ் உணர்வை தூண்டுமாம்!

Spider
 
மனிதர்களின் செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்க சத்தான உணவுகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வாலிப வயோதிக அன்பர்களுக்கு வயக்ரா போன்ற மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் சிலந்தியின் விஷம் மூலம் பாலியல் உணர்வுகளை அதிகரிக்க முடியும் என்றும் இதனால் நீண்ட சுகத்தை அனுபவிக்க முடியும் என்றும் கூறியுள்ளனர். இது தொடர்பான ஆராய்ச்சி முடிவு ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.தென்அமெரிக்க நாடான பிரேசிலின் காட்டு பகுதிகளில் ‘போனுட்ரியா நிக்ரிவென்டர்' என்ற வகை சிலந்திகள் அதிகம் காணப்படுகின்றன. உலகிலேயே அதிக விஷம் கொண்ட சிலந்திகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.இதன் கொடுக்கில் இருந்து வெளியேறும் திரவம், அதிக விஷத்தன்மை வாய்ந்தது. போனுட்ரியா சிலந்தி விஷத்தின் மருத்துவ குணம் தொடர்பாக பிரேசில் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இணைந்து சமீபத்தில் ஆய்வு நடத்தினர். சிலந்தியிடம் இருந்து ‘பிஎன்டிஎக்ஸ்2,6' எனப்படும் விஷம் உறிஞ்சி எடுக்கப்பட்டது.முதுமை காரணமாக செக்ஸ் வாழ்வில் உற்சாகம் குறைந்து காணப்பட்ட எலிகளின் உடலில் இந்த விஷம் செலுத்தப்பட்டது. அதன் பின்னர், எலிகளின் ‘மூடு' அதிகரித்தது. இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த ஆய்வாளர்கள் தங்களில் ஆராய்ச்சி முடிவுகளை செக்ஸ் பற்றிய இதழ் ஒன்றில் வெளியிட்டுள்ளனர். அதில் சில சுவாரஸ்யமான தகவல்கள் கூறப்பட்டுள்ளன.எலிகளின் உடலில் சிலந்தியின் விஷத்தை செலுத்தியதும் நைட்ரிக் ஆக்சைடு சுரப்பு அதிகமாகிறது. மருந்தை செலுத்திய 20 நிமிடத்தில் அது வேலை செய்ய தொடங்குகிறது. இது ரத்த தட்டுகளை விரிவடைய செய்கிறது. ரத்த தட்டுகளின் சுவர்கள் நெகிழ்வு தன்மை அடைகின்றன. ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. மர்ம உறுப்பு பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் அதிக விரைப்புத்தன்மை கிடைக்கிறது.ஏறக்குறைய, ‘வயாக்ரா' போன்ற செக்ஸ் வீரிய மாத்திரைகள் போலவே சிலந்தி விஷம் செயல்படுகிறது. வயதான பிறகு ஏற்படும் விரைப்புத்தன்மை கோளாறுகளுக்கு சிலந்தி விஷம் அருமையான மருந்தாக இருக்கும் என்று தெரிகிறது.இந்த ஆராய்ச்சி இன்னமும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. மனிதர்களை வைத்து சோதனை நடத்தி, வெற்றி கிடைத்த பிறகுதான் சந்தையில் மருந்தாக அறிமுகப்படுத்தப்படும் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.இதை படித்து விட்டு நம் ஊர் ஆசாமிகள் யாரும் சிலந்தியை கடிக்க வைத்து சோதனை செய்து பார்க்க வேண்டாம். அப்புறம் அலர்ஜி ஆகிவிடப்போகிறது.

English summary
A toxin synthesized from the venom of a spider may offer an alternative to today's erectile dysfunction drugs, say researchers. In the new study, published online Aug. 23 in the Journal of Sexual Medicine, the toxin, unpoetically named PnTx2-6, reverses age-related erectile dysfunction in mice.
 

Get Notifications from Tamil Indiansutras