•  

தினசரி 8000 முறை செக்ஸ் சிந்தனைகள் சாத்தியமா?

Sex
 
மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் பாலியல் குறிந்த சிந்தனைகளும், உணர்வுகளும் ஏற்படுவது இயல்பு. ஆணோ, பெண்ணோ தினந்தோறும் செக்ஸ் பற்றி சிந்திக்காமல் இருக்கவே மாட்டார்கள். இது இயல்பானதுதான் என்று கூறும் நிபுணர்கள் செக்ஸ் பற்றிய சிந்தனைகள் அதீதமாக இருந்தாலே அல்லது எதுவும் தோன்றாமல் இருந்தாலோதான் அது இயற்கைக்கு மாறானது என்று கூறுகின்றனர்.7 விநாடிக்கு ஒருமுறைஆண்களின் மூளை ஒவ்வொரு 7 விநாடிக்கும் ஒருமுறை செக்ஸ் குறித்த சிந்தனையில் மூழ்குவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. அப்படிப் பார்த்தால், ஒரு ஆண், சராசரியாக ஒரு நாளைக்கு 16 மணி நேரம் விழித்திருப்பதாக எடுத்துக் கொண்டால், ஒரு நாளைக்கு 8000 முறை அவன் செக்ஸ் குறித்த சிந்தனையில் மூழ்கியிருக்க வேண்டும். ஆனால் இது சாத்தியமா, 7 விநாடிகளுக்கு ஒருமுறை ஆண்கள் செக்ஸ் நினைப்பில் மூழ்குகிறார்களா என்று செக்ஸாலஜிஸ்ட்டுகளிடம் கேட்டால், கண்டிப்பாக வாய்ப்பே இல்லை என்று மறுக்கிறார்கள். இதுபோன்ற சிந்தனைகளில் திளைத்திருப்பவர்கள் கண்டிப்பாக மனநல மருத்துவர்களை பார்க்கவேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் நிபுணர்கள்.நாளுக்கு 20 முறை மட்டுமேசராசரி மனிதனுக்கு தினசரி 20 முறை மட்டுமே செக்ஸ் பற்றிய சிந்தனைகள் எழும் என்று ஒகியோ பல்கலைக்கழக ஆய்வு ஒன்று கூறுகிறது. உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ இதுபோன்ற எண்ணம் தோன்றுவது இயல்பானதுதான் என்கின்றனர் நிபுணர்கள். ஆனால் ஒவ்வொரு 7 செகண்டுக்கு ஒருமுறை செக்ஸ் சிந்தனைகள் எழ வாய்ப்பே இல்லை என்று உறுதியாக தெரிவித்துள்ளனர்.பருவ வயதில் அதிகம்பள்ளிகளில், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு செக்ஸ் குறித்த ஆர்வமும், ஈர்ப்பும் சற்றுஅதிகமாக இருக்கும். இது இயற்கையானதே. அவர்களது ஹார்மோன் வளர்ச்சிதான் அதற்குக் காரணம். ஆனால் 26 வயதைத் தாண்டி விட்ட ஆண்களுக்கு 7 விநாடிகளுக்கு ஒரு முறை செக்ஸ் நினைப்பு வரும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்களது மனதில் செக்ஸை விட மற்ற விஷயங்கள் நிச்சயமாக அதீதமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என்கின்றனர் நிபுணர்கள். சில ஆண்களுக்கு செக்ஸ் நினைப்பு அதிகம் இருப்பது உண்மைதான். ஆனால் ஒட்டுமொத்த ஆண்களையும் இதில் சேர்த்து விட முடியாது. செக்ஸைப் பற்றியே எப்போதும் ஆண்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பொதுவாக கூறுவது தவறு என்றும் அவர்கள் கூறுகின்றனர்.பொறுப்புகள் சூழ்ந்து விடும்பெண்களை விட ஆண்கள் வெளிப்படையாக செக்ஸ் உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள். இது பொதுவானது. மேலும் செக்ஸை ஒரு மனப் பளுவை நீக்கும் மருந்தாக ஆண்கள் கருதுகிறார்கள். பெண்களைப் பொறுத்தவரை அப்படியில்லை. ஆண்கள் செக்ஸ் சிந்தனையில் மூழ்குவது என்பது பெண்களை விட அதிகம் நடக்கும் ஒன்றுதான் என்றாலும் கூட 7 விநாடிகளுக்கு ஒருமுறை சத்தியமாக நடப்பதில்லை என்பதே உண்மை என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர். மேலும் ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர் பல்வேறு வகையான பொறுப்புகள் மனதில் வந்து உட்கார்ந்து விடும். அதுகுறித்த சிந்தனையில்தான் அவர்கள் அதிகம் மூழ்கியிருப்பார்களே தவிர செக்ஸ் அவர்களை ஆக்கிரமிக்கும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார் மற்றொரு நிபுணர்.செக்ஸ் சிந்தனையே இல்லைஇதற்கிடையே, ஆண்களின் செக்ஸ் குணாதிசயங்கள் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் வித்தியாசமான முடிவுகள் வந்துள்ளன.அதில், 54 சதவீத ஆண்கள் தினசரி செக்ஸ் குறித்த சிந்தனையில் மூழ்குவதாகவும், ஒரு நாளைக்கு பலமுறை செக்ஸ் சிந்தனை அவர்களுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 43 சதவீதம் பேருக்கு வாரத்திற்கு சில முறையும், சிலருக்கு மாதம் சில முறையும் செக்ஸ் சிந்தனை ஏற்படுகிறதாம். 4 சதவீதம் பேருக்கு மாதத்திற்கு ஒருமுறைதான் செக்ஸ் சிந்தனை வருகிறதாம். இதிலிருந்து பார்த்தால், சராசரியாக ஆண்களில் பாதிப் பேருக்கு ஒரு நாளைக்கு ஒருமுறை கூட செக்ஸ் சிந்தனை வருவதில்லை என்பதை உணரலாம். உண்மையில், செக்ஸ் சிந்தனை அதிகம் இருப்பவர்களை விட இல்லாதவர்கள்தான் கவலைக்குரியவர்கள் என்கின்றனர் நிபுணர்கள்.இதில் நீங்கள் எந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை சுய பரிசோதனை செய்து தெரிந்து கொள்ளுங்கள்English summary
The average man thinks about sex 20 times a day or less, say researchers from Ohio State University. The people who think about sex most of all tend to be... people who are comfortable with the idea of sexuality itself. And the research discredits the persistent stereotype that men think about sex every seven seconds, which would amount to more than 8,000 thoughts about sex in 16 waking hours.
 
Story first published: Tuesday, September 11, 2012, 11:16 [IST]

Get Notifications from Tamil Indiansutras