கூலா இருங்க
உடல் சூடு அதிகம் உள்ளவர்களுக்கு பாலியல் உணர்வுகள் அதிகமாக இருக்கும். ஆசை அதிகம் ஆனால் செயல்பாடுகள் பலவீனமாக இருக்கும். பாலியல் உறுப்புகள் குளுமையாக இருக்க வேண்டும். உடலின் மற்ற உறுப்புக்களை விட, உடல் உஷ்ணத்தில் ஒரு டிகிரி குறைந்தே இருக்க வேண்டும். உடல் உஷ்ணம் அதிகரித்தால், விந்துப்பை அதிகமாக விரிந்து, உடலை விட்டு தொங்கிவிடும். உடலுறவு ஆர்வம் அதிகமாகும். ஆனால் சில விநாடிகளே உடலுறவில் ஈடுபடமுடியும். சூடான ஆண் அவயம், குளிர்ச்சியான பெண் உடலுடன் இணைந்தால், உடனே விந்து வெளியாகி விடும். ஆண்மை குறைவு ஏற்படும்.
இது தவிர விந்துவின் ‘பலமும்' குறையும். விந்துவின் உயிரணுக்களின் எண்ணிக்கை குறையும். இதனால் ஆண் மலட்டுத்தன்மை எற்படும். உடலுறவு ஆர்வத்தை உடல் உஷ்ணம் தூண்டிவிடுவதால், இரவில் விந்து வெளியேறலாம். தவிர சுய இன்பப் பழக்கமும் சூடான உடலுடைய இளைஞர்களிடம் அதிகம் காணப்படும். இதனால் குற்ற உணர்வு ஏற்பட்டு உடலுறவுக்கு தகுதி குறைந்து விடும்.
பெண்களுக்கு உடல் சூடு அதிகமாக இருந்தால் உடலுறவில் ஆர்வம் குறையும். அதிக வெள்ளைபடுதல் ஏற்படும். தளர்ச்சி, இடுப்பு வலி, முதுகுவலி இவை ஏற்படும். உடல் சூடு அதிகரிக்கும் காரணம் வாய்வுத்தொல்லை. வாய்வுத்தொல்லை அதிகரிக்க காரணம் அஜீரணம். எனவே ஜீரணக் கோளாறுகளை சரி செய்து கொள்வது உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
சிகரெட், மதுப்பழக்கம்
புகை மனிதனுக்குப் பகை என்பார்கள். இது உடல்நலக் கோளாறுகளை மற்றும் ஏற்படுத்துவதில்லையாம், சந்ததி உருவாவதையும் தடுக்கிறது. என்கின்றனர் நிபுணர்கள். புகைப் பிடிப்பதன் மூலம் விந்தணு உற்பத்தி குறைகிறதாம். இதற்கு காரணம் சிகரெட்டில் உள்ள ரசாயனம்தான். அதேபோல் பெண்கள் புகை பிடிப்பதனால் ரத்த நாளங்கள் சுருங்குவதோடு, உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் ரத்தம் சீராக செல்வது தடை படுகிறது. இதனால் தாம்பத்ய உறவில் ஆர்வம் குறைகிறது. அதேபோல் இன்றைக்கு ஆண், பெண் இருவருக்குமே மதுப்பழக்கம் இருக்கிறது. இதனால் ஆணிற்கு விந்தணு உற்பத்தி பாதிக்கிறது. பெண்ணிற்கு ஹார்மோன் சுரப்பில் மாறுபாடு ஏற்பட்டு கருமுட்டை உற்பத்தியில் சிக்கல்கள் எழுகின்றன.
மனஅழுத்தம் வேண்டாம்
மனஅழுத்தம் இருந்தால் மகப்பேறு பாதிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். எனவே மனஅழுத்தத்தை குறைக்கும் வழிமுறைகளை கடைபிடித்து மனதை ரிலாக்ஸ் ஆக வைத்துக்கொள்ளுங்கள். இயற்கையான முறையில் குழந்தை பேறு உண்டாகும்.
துத்தநாகச் சத்து குறைவாக இருந்தாலும் உயிரணு, கருமுட்டை உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுமாம். என சிப்பி உணவு, சிவப்பு மாமிசம், பயறு மற்றும் பருப்புவகைகளில் துத்தநாகம் உள்ளது. இவற்றை உட்கொள்ளலாம்.
மாதவிடாய் சுழற்சி சரியாக உள்ள பெண்கள் தங்களின் கருமுட்டை உருவாகும் நாளினை கவனத்தில் கொண்டு கணவருடன் இணையவேண்டும். இதன் மூலம் எளிதில் கரு உருவாகும். மாதவிலக்கு ஏற்பட்டு 11 வது நாளில் இருந்து 21 வது நாளுக்குள் கரு முட்டை வெளியேறும் என்று கூறும் நிபுணர்கள் இந்த நாளில் தம்பதியர் இணைந்தால் கருமுட்டையானது விந்தணு உடன் இணைந்து கரு உருவாகும் என்கின்றனர் நிபுணர்கள்.