•  

கிளைமேக்ஸ் பற்றி சலனமா? ரிலாக்ஸ் ஆக இருங்கள்...

Amruthavalli
 
கிளைமேக்ஸ் எனப்படும் உச்சக்கட்டம் அவசியமானது. அது சரியில்லை எனில் மனதில் குழப்பங்கள் குடியேறத்தொடங்கிவிடும். இன்றைக்கு 35 வயதைத் தாண்டிவிட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம் நமக்கு செக்ஸ் உணர்வு குறையத் தொடங்கி விட்டதே என்பதுதான். ஆனால் அப்படி ஒரு கவலை தேவையில்லை என்று உளவியல் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.



35 வயதைத் தாண்டிய பல பெண்களின் மனதில் இனி நம்மால் செக்ஸில் முன்பு போல ஈடுபட முடியாதா, உச்ச நிலையை அடைய முடியாதா என்ற எண்ணம் பரவலாக தோன்றுகிறதாம். மேலும் 30 வயதைத் தாண்டி விட்டாலே செக்ஸ் உணர்வுகள் குறையத் தொடங்கி விடும் என்ற பரவலான கருத்தும் அவர்களிடம் நிலவி வருகிறதாம். இதற்குக் காரணம் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், பெண்களுக்கு ஏற்படும் மாற்றம்தான் என்கின்றனர் நிபுணர்கள்.



தாம்பத்ய உறவின் போது உச்சநிலை எனப்படும் கிளைமேக்ஸ் சரியாக இல்லையெனில் திருப்தி என்பது ஏற்படாது. கிளைமேக்ஸ் பிரச்சினை பிறப்புறுப்பின் வலியினாலும், வறட்சியினாலும் ஏற்படும். மேலும் 35 வயதிற்கு மேல் பெண்களுக்கு உடல் பருமன், நீரிழிவு போன்றவை இருந்தாலும் உச்சநிலையை உணர்வரில் பிரச்சினை ஏற்படும்.



நீரிழிவினால் பெண்களுக்கு நரம்பியல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும். மேலும் முதுகெலும்பில் பிரச்சினை என்றாலும் அவர்களால் இயல்பான செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபடமுடியாது. அதேபோல் ஹார்மோன்கள் சரிவர சுரக்கவில்லை என்றாலும் பெண்கள் தங்களின் உச்சநிலையை உணர்வதில் சிக்கல்கள் எழுகின்றன என்கின்றனர் நிபுணர்கள்.



இதுபோன்ற சிக்கல்கள் உள்ள பெண்கள் தங்கள் கணவருடன் கலந்து ஆலோசித்து அதற்கேற்ப பொசிசன்களை மாற்றினால் வலியின்றி உறவில் ஈடுபடமுடியும். இனிமையான உச்சநிலையை உணரமுடியும் என்கின்றனர் நிபுணர்கள்.



30 வயதைத் தாண்டி விட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்பு போல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவு செய்து விட்டொழியுங்கள். 20 வயதுகளில் எப்படி செக்ஸை அனுபவித்தீர்களோ அதே போல 30 வயதைத் தாண்டிய பின்னரும் கூட அனுபவிக்கலாம். அதற்கு ஒரே முக்கிய தேவை உங்களது மனதை ரிலாக்ஸ்டாக வைத்துக் கொள்வது மட்டுமே. உண்மையில் 30 வயதுக்கு மேல்தான் செக்ஸ் வாழ்க்கையில் நிம்மதியாக, பரிபூரணமாக, முழுமையான இன்பத்துடன் ஈடுபட முடியும். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று என்கின்றனர் நிபுணர்கள்.



அதேசமயம், சில பெண்களுக்கு 35 வயதுக்கு மேல் உறவில் ஆர்வம் குறைவது இயல்புதான். அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஒவ்வொருவருக்கும் இது வித்தியாசப்படும். பொதுவான காரணம் என்று எதுவும் கிடையாது. உச்ச நிலையை அடைவதில் 35 வயதைத் தாண்டிய பெண்களுக்கு என்றில்லை, 20 களில் இருக்கும் பெண்களுக்கும் கூட பிரச்சினை வருவதுண்டு. எனவே ஆர்கசம் என்பது எல்லோருக்கும் உள்ள பொதுவான பிரச்சினைதான். அது, தாம்பத்ய உறவில் ஈடுபடும்போது நமது மன நிலை, உடல் நிலை எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தது. எனவே கிளைமேக்ஸ் பிரச்சினை உள்ள பெண்கள், உரிய தெரபிஸ்டுகளை அணுகி ஆலோசனை கேட்கலாம். ஆர்கசத்தை அடைவதற்கு பல மருத்துவ ரீதியான, மனோ ரீதியான வழிமுறைகள் உள்ளன. அதைக் கையாளலாம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.



மேலும் 30 வயதைத் தாண்டிய, விவாகரத்து செய்த அல்லது கணவரை இழந்த பல பெண்களுக்கும் கிளைமேக்ஸ் வரும். செக்ஸ் உணர்வும் அதிகமாக இருக்கும். இதை நினைத்து பல பெண்கள் கவலைப்படுவார்கள். நாம் தவறு செய்கிறோமோ என்ற எண்ணமும் அவர்களிடம் எழலாம். ஆனால் இது நிச்சயம் தவறான ஒன்றில்லை. இது இயல்பான ஒன்றுதான். பெண்களின் உடலியல் அப்படி. எனவே நாம் செக்ஸ் குறித்து சிந்திப்பது தவறு என்று இந்தப் பெண்கள் நினைக்கத் தேவையில்லை. இதுபோன்ற பெண்கள் தங்களது மனதை ஒருமுகப்படுத்த பல வழிகள் உள்ளன. அவற்றில் ஈடுபடலாம்.



எனவே 30 வயதுக்கு மேல் செக்ஸ் உணர்வும், உச்சநிலையும் அற்றுப் போய் விடும் என்ற கவலையும், கிளைமேக்ஸ் அதிகமாக இருக்கிறதே என்ற கவலையும் தேவையில்லை. இவை இயல்பானவைதான். அதற்கான செயல்முறைகளை கையாண்டு அவற்றை வெற்றிகரமாக சமாளிக்க நாம்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். செக்ஸ் உணர்வுகளை கட்டுப்படுத்துவதில் மூளைக்கும், மனதிற்கும் முக்கிய பங்குண்டு. எனவே சரியான வழியில் உணர்வுகளை திசை திருப்பினால் நம்மால் இயல்பான செக்ஸ் வாழ்க்கையை வாழ முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.



English summary
Orgasm is the release of sexual tension - and the period of ultimate pleasure. Women and men experience such physical and psychological pleasure in different ways. Men experience pleasure upon reaching orgasm depending on the sperm they ejaculate. On the other hand, women are gifted with multiple orgasms and each orgasm can reach up to 10 to 20 seconds.
 
Story first published: Tuesday, August 14, 2012, 14:11 [IST]

Get Notifications from Tamil Indiansutras