•  

ஸ்லிம்மாக, சுறுசுறுப்பாக, இளமையாக இருக்க ஒரே வழி ...'செக்ஸ்'!

Sex
 
செக்ஸ்....இந்த வார்த்தையைக் கேட்டதுமே உடலில் நாடி நரம்புகள் முறுக்கேறும், 80 வயது தாத்தாவானாலும் சற்றே சுறுசுறுப்பாக எழுந்து உட்காரத் தோன்றும். அப்படி ஒரு மாயாஜால வார்த்தைதான் செக்ஸ்.செக்ஸ்..வெறும் காமப் பசிக்கான தீனி மட்டுமல்ல, நமது ஒட்டுமொத்த உடலையும், மனதையும் ஆரோக்கியமாக, வைத்திருக்க உதவும் ஒரு மருந்துமாகும். ஆரோக்கியமான முறையில், சீரான செக்ஸ் உறவு வைத்திருப்போரை அவ்வளவு சீக்கிரம் மனப் பிரச்சினை, மன அழுத்தம், நோய்கள் அண்டாது என்கிறார்கள் டாக்டர்கள்.மேலும் செக்ஸில் ஆர்வத்துடன், தொடர்ச்சியாக ஈடுபடுவோருக்கு தோல் வியாதிகள் அவ்வளவு சீக்கிரம் வராதாம், மாறாக தோல் பளபளவென்று மின்னும் என்கிறார்கள்.செக்ஸ் நமது உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியமானது. நமது உடலைப் பொலிவோடு வைத்திருக்க மட்டும் உதவாமல், இளமையாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ளவும் செக்ஸ் கை கொடுக்கிறது. ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கையைக் கொண்டவர்களுக்கு என்னென்ன நன்மைகள் நடக்கிறது என்பது குறித்த ஒரு சின்ன ரவுண்டப்...- இதயத் துடிப்பை சீராக வைத்திருக்கிறதாம் செக்ஸ் உறவு. ரத்த ஓட்டம் சீராக இருக்குமாம். இதயத்திற்குப் போகும் ரத்தமும் சீராக இருக்குமாம். மேலும் இதய நோய்களை விரட்டவும் செக்ஸ் உதவுகிறதாம். காதல் வயப்படுகிறவர்களுக்கும், காமத்தை ஆரோக்கியமாக மேற்கொள்கிறவர்களுக்கும் இதயநோய்கள் அண்டாது என்று அடித்துக் கூறுகிறார்கள் டாக்டர்கள்.30 முதல் 50 வயது வரை கொண்டவர்கள் ரெகுலராக உடலுறவு வைத்து வந்தால் இதய நோய்களைத் தள்ளிப் போட முடியுமாம்.- ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டையும் தீர்த்து வைக்கும் அருமருந்தாக செக்ஸ் உள்ளது. வாரத்திற்கு குறைந்தது 2 முறையாவது உறவு வைத்துக் கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டால், ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டை விரட்டி விடலாமாம். சிலர் இதற்கு மேற்பட்ட நாட்களும் கூட உறவு வைத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். அவர்க்ளுக்கு எழுச்சிக் குறைபாடே இல்லாமல், எப்போதும் எழுச்சியுடன் இருக்க உதவுகிறதாம் செக்ஸ்.- மன அழுத்தம், ஓவராக வாட்டுகிறதா... எதையாவது நினைத்துக் குழப்பிக் கொள்கிறீர்களா, எப்போது பார்த்தாலும் சோர்வாக இருக்கிறதா... பேசாமல் உடல் உறவுக்குப் போய் விடுங்கள், அதுதான் ஒரே நிவாரணம் என்பது நிபுணர்களின் வாதமாகும். நமது உடலை கிட்டத்தட்ட புரட்டிப் போட்டு புத்துணர்ச்சியுடன் திகழ வைக்கிறதாம் செக்ஸ் உறவு. மன அழுத்தம், மனக் குழப்பம் உள்ளிட்டவற்றை தூக்கி வெளியே போட்டு நம்மை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்கிறதாம் செக்ஸ்.- கலோரிகளைக் காலி செய்யவும் செக்ஸ் உறவு உதவுகிறது. தினசரி நாம் செய்யும் செக்ஸ் வேலைகளால், நமது உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகள் காலியாகி விடுகின்றன. தினசரி அரை மணி நேரம் செக்ஸில் ஈடுபட்டாலே அது நல்ல உடற்பயிற்சியாக இருக்கிறதாம்.- உடல் எடை கூடி விடாமல் ஸ்லிம்மாக இருக்கவும் செக்ஸ் உதவுகிறது. உடம்பில் எடை கூடி விட்டது, நிறம் சற்று மங்கலாகி விட்டதாக உணர்ந்தால் அடிக்கடி செக்ஸ் வைத்துக் கொள்வதை தொடங்குங்கள். இதன் மூலம் உடல் எடை குறைவதோடு, தோலிலும் ஒரு விதி மினுமினுப்பபைப் பார்க்க முடியுமாம்.- என்றும் இளமை என்ற பெருமையையும் நமக்கு செக்ஸ் தேடித் தருகிறது. செக்ஸ் உணர்வுகள் எப்போதெல்லாம் நமது உடலில் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் நமக்குள் இளமை உணர்வுகளும் கூடவே தோன்றுகின்றன. விரும்பிய முறையில் செக்ஸ் உறவை வைத்துக் கொண்டால் என்றும் இளமையாக, இளமைத் துள்ளலுடன் திகழ முடியுமாம்.மொத்தத்தில் செக்ஸ் வெறும் காம இச்சைக்கான விஷயம் மட்டுமல்ல, அதையும் தாண்டிப் புனிதமானதும் கூட....!
English summary
Sex, which is said to make one look and feel young by boosting the skin's production of Vitamin D, has, as revealed by an expert, many other advantages.
Story first published: Monday, August 20, 2012, 11:27 [IST]

Get Notifications from Tamil Indiansutras