எந்த ஒரு செயலிலும் ஆர்வம் இருந்தால்தான் அதை செய்வதற்கான உற்சாகம் அதிகரிக்கும். பாலியலும் அப்படித்தான் உணர்வும்,அது குறித்த சிந்தனைகளும் இருந்தால்தான் உற்சாகமாக செயல்பட முடியும். தாம்பத்ய வாழ்க்கை செழிப்பாக இல்லை என்றால் உடலும், மனமும் சோர்ந்து போய் எதிலுமே லயிப்பு இருக்காது. மகிழ்ச்சியான உடலுறவில் திளைக்கும் பெண்களுக்கு அழகு கூடுமாம். வாரத்தில் 4 முறை உடலுறவு கொள்ளும் பெண்கள் 10 வருட வயது இளமையானவர்களாக தெரிகிறார்கள் என்று சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தாம்பத்யத்தில் உற்சாகம் ஏற்பட சில ஆலோசனைகளை அறிவுறுத்தியுள்ளனர் நிபுணர்கள் அவற்றினை பின்பற்றிப் பாருங்களேன்.
காதல் உணவுகள்
உணவுக்கும் உணர்வுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. தாம்பத்ய வாழ்க்கையில் சுறுசுறுப்பையும், உற்சாகத்தையும் தரும் உணவுகள் பல உண்டு. பழங்காலத்தில் சோம்புக் செடி, துளசி, கேரட், பிஸ்தா பருப்புகள், டர்னிப், நதி நத்தைகள் போன்றவை காமத்தை தூண்டுவதாக கருதப்பட்டன.
பாதாம் உள்ள விட்டமின் "இ" ஒரு செக்ஸ் விட்டமினாகும். இது இளமையை காக்கும். பாதாம் தவிர, பிஸ்தா, பாதாம், முந்திரி, வேர்க்கடலை பருப்புகளும் பாலுணர்வை மேம்படுத்தும். சாக்லேட் காதல் உணர்வுகளை ஊக்குவிக்கும். இதனை ஆண்மை மற்றும் பெண்மை பெருக்கிகளின் இராஜா என்றே அழைக்கின்றனர். இது வேட்கையை பெருக்குவதோடு கிளர்ச்சியூட்டும். சாக்லேட் பெண்ணின் காதல் ஆசையை தூண்டுவதற்குக் காரணம் ரசாயனம் தான். ‘செரோடோனின்' லெவல்கள் அதிகரிக்கும் சாக்லேட்டில் Phenylethylamine (Pea) என்ற கவர்ச்சியை தூண்டும் பொருள் இருக்கிறது.
ஜாதிக்காய், ஏலக்காய், குங்குமப்பூ, இலவங்கப் பட்டை இவைகளும் ஆசையை அதிகரிக்கும் குறிப்பாக ஜாதிக்காய் "விந்து முந்துதலை" (Premature ejaculetion) தடுக்கும். இந்த வாசனை திரவியங்களை பாலுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி
பாலியல் உறவுகள் சிறப்படைய உடலை ஆரோக்கியமாக வைக்க வேண்டும். அதே போல் நிறைவு தரும் உடலுறவு ஆரோக்கியத்தை அதிகரிக்கும். தவறாமல் நடப்பது, உடற்பயிற்சி செய்வது இவை அவசியம். உடற்பயிற்சிக்கூடத்திற்குச் சென்று சுவிஸ் பந்து மூலம் கீழ் வயிற்று தசைகளை உறுதியாக்க செய்யும் கெகெல் பயிற்சி (Kegal exercise) செய்தால் ஜனன உறுப்புக்களுக்கு அதிக ரத்தம் பாயும். செக்ஸ் பற்றிய ஆர்வம் குறைவாக உள்ளவர்கள் இதனை செய்வதன் மூலம் ஆர்வம் அதிகரிக்கும்.
அன்பான தழுவல்
செக்ஸ் உணர்வு ஏற்படுவது அற்புதமானது. நம்முடைய உணர்வுகளை ஸ்பரிசத்தின் மூலம் வெளிப்படுத்தலாம். ஒவ்வொருவிதமான ஸ்பரிசமும் ஒவ்வொருவிதமான உணர்வுகளை அறிவிக்கும். தம்பதியரில் யாராவது ஒருவருக்கு செக்ஸ் ஆர்வம் குறைவாக இருந்தால் சிக்கல்தான். எனவே அடிக்கடி நெருக்கமான தருணங்களில் துணையை கட்டி அணையுங்கள், முத்தமிடுங்கள். அவ்வப்போது நம்பிக்கையுடன் பேசுங்கள். உங்களின் காதல் மொழிகளும், செய்கைகளும் அவர்களிடையே காதல் உணர்வுகளையும், ஆர்வத்தையும் அதிகரிக்கும்.