•  

பெண்ணுக்குள் புதைந்திருப்பது 50 அல்ல, 366 வகை செக்ஸ் உணர்வுகள்...!!!

 
'50 Shades of Grey' - இங்கிலாந்தில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே பரவலாக இன்று பேசப்படும் முக்கிய விஷயமாக மாறியுள்ளது இந்த நூல். பெண்களின் செக்ஸ் உணர்வுகள், வேட்கை குறித்து எல் ஜேம்ஸ் எழுதியுள்ள இந்த நூல் இதுவரை 31 மில்லியன் காப்பி விற்று பெரும் சாதனை படைத்துள்ளது.



இதுவரை இல்லாத அளவுக்கு பெண்களின் செக்ஸ் தாகம், வேட்கை, உணர்வுகள் குறித்து மிக வெளிப்படையாக பேசிய நூல் இதுதான் என்கிறார்கள். ஆனால் இதில் கூறப்பட்டுள்ளதைப் போல பெண்களுக்கு 50 விதமான செக்ஸ் உணர்வுகள் மட்டும் இருக்கவில்லை, மாறாக அவர்களுக்கு இருப்பது 366 வகை செக்ஸ் உணர்வுகள் என்று ஒரு கட்டுரை நாளிதழ் ஒன்றில் வெளியாகியுள்ளது.



டெல்லி டைம்ஸ் இதழ்தான் இப்படி ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. எப்படி....அதை இப்படிக் கூறுகிறது அந்தக் கட்டுரை..



பெண்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் ஒரு வகை உணர்வை அவர்கள் வெளிப்படுத்தத்தான் செய்கிறார்கள். ஒவ்வொரு நாளும் புத்தம் புதிய உணர்வுகளை அவர்கள் பெறுகிறார்கள். புத்தம் புது ஆசைகளை மனதுக்குள் விதைத்துக் கொள்கிறார்கள். புத்தம் புது கற்பனைகளை எடுத்துக் கொள்கிறார்கள். அப்படிப் பார்த்தால், லீப் ஆண்டையும் சேர்த்தால், அவர்களுக்கு 366 வகையான செக்ஸ் உணர்வுகள் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.



பெண்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு அனுபவம் கிடைக்கிறது. சில பெண்கள் தங்களுக்குள் தோன்றும் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருக்கலாம். தங்களுக்குள் செக்ஸ் உணர்வுகள் குறித்து பேசிக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் பெரும்பாலான பெண்கள் தங்களுக்குள் உதிக்கும் உணர்வுகளை ஏதாவது ஒரு வகையில் உணர்த்தி விடுகிறார்கள்.



கிராமப்புறங்கள் கூட இன்று மாறிப் போயுள்ளன. தனது கணவனுடன் சந்தோஷணாக இருக்க வேண்டும் என்பதை தனது மாமியாரிடம் குறிப்பால் உணர்த்தும் கிராமத்து மருமகள்கள் நிறையப் பேர் உள்ளனர். கிராமத்து மாமியார்களும் முன்பு போல இல்லை. மருமகள் சொல்ல வருவதை புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல நடந்து கொள்கிறார்கள்.



முன்பெல்லாம் கிராமப்புறங்களில் கணவருடன் சேருவதை ஒரு பெரும் ரகசியமாக கருதி வந்த பெண்கள் இன்று அப்படி இல்லை. வாய்ப்பு கிடைக்கும்போது கணவனின் ஆதரவுக் கரங்களில் விழுந்து கிடக்கத் தவறுவதில்லை.



நான்கு ஆண்கள் சேர்ந்தால் கண்டிப்பாக செக்ஸ் பற்றிப் பேசாமல் இருக்க மாட்டார்கள். ஆனால் பெண்களிடம் இது பெரிய அளவில் முன்பு இருந்ததில்லை. ஆனால் இப்போது அவர்களும் விரிவாக உரையாட ஆரம்பித்து விட்டார்கள். ஏன், தங்களது ஆண் நண்பர்களிடமும் கூட செக்ஸ் பற்றிப் பேசும் பெண்கள் நிறையவே உள்ளனர். தங்களது சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளும் பெண்களும் நிறைய உள்ளனர்.



அந்த வகையில் ஆண்களைப் போலவே, பெண்களும் செக்ஸ் குறித்து வெளிப்படையாக பேச ஆரம்பித்து விட்டனர். எனவே இனியும் செக்ஸ் குறித்த பேச்சுக்கள் ஆண்களுக்கு மட்டுமே சொந்தம் என்று நிச்சயம் யாரும் கூற முடியாது என்பதே நிதர்சனம்.



English summary
Not just 50 shades, but 366 shades of sexuality prevail in women’s life….! Delhi Times carried an interesting article in today’s edition captioned ‘What’s Getting Grey Read?’ explaining the run away success of ‘50 Shades of Grey’, hailed as a beacon of female empowerment, enabling women to discuss their sexuality more comfortably.

Get Notifications from Tamil Indiansutras