எப்ப பார்த்தாலும் பிஸி
வாழ்க்கைக்கு வேலை அவசியம்தான் அதற்காக இருவரும் வேலையை கட்டிக்கொண்டே அழுதால் வாழ்க்கையை யார் வாழ்வது. அப்புறம் வாழ்க்கை மீது இருவருக்கும் வெறுப்புதான் ஏற்படும். ரொட்டீன் வாழ்க்கை இருந்தாலும் அரைமணி நேரத்திற்கு ஒருமுறையாவது போன் செய்து பேசுங்கள். பேச நேரமில்லையா அட்லீஸ்ட் ரொமான்ஸ் மெசேஜ் தட்டிவிடுங்கள். அடிக்கடி ஐ லவ் யூ மெசேஜ்களால் துணையின் இன்பாக்ஸ் நிரம்பட்டும். வேலை நேரங்களில் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்தால் உணவு இடைவேளை நேரத்திலாவது பேசுங்களேன்.
சமையலறை ரொமான்ஸ்
காலையில் அலுவலகம் செல்லும் பிஸியில் இருந்தாலும் சமையல் அறையிலேயே உங்களின் காதலை தொடங்கலாம். அது இருவருக்குமே உற்சாகத்தை தரும். சமையலின் ருசியும் கூடுதலாகும். அவசரமாய் சமைக்கிறேன் என்று உங்கள் துணைவியின் வாய் கூறினாலும் மனமானது கணவரின் சின்ன சின்ன ரொமான்ஸ் செயல்களை விரும்பும் என்கின்றனர் நிபுணர்கள்.
ரொமான்ஸ் கிப்ட்
அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வரும்போது காதலை வெளிப்படுத்தும் சின்ன சின்ன பரிசுப்பொருட்களை வாங்கி வரலாம். பூக்கள், மனம் மயக்கும் பெர்ப்யூம், லிப்ஸ்டிக் என எதையாவது வாங்கி வந்து சின்ன முத்தங்களுடன் உங்கள் துணைவிக்கு பரிசளிக்கலாம். இது இருவருக்கும் இடையேயான அலுவலக டென்சனை மறக்கடிக்கும்.
ரொமான்ஸ் வேண்டும்
அலுவலகம் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை என்றால் கவலையில்லை தம்பதிகளுக்கு கொஞ்சமாவது வீட்டில் நேரமிருக்கும். ஆனால் ஷிப்ட் வாழ்க்கை என்றால் கேட்கவே வேண்டாம். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளக்கூட நேரமிருக்காது. எனவே கிடைக்கும் நேரத்தை சந்தோசமாக செலவழியுங்கள். இருவரும் சேர்ந்தே உணவருந்துங்கள். அந்த நேரத்தில் செல்போன், தொலைக்காட்சி என தேவையற்ற இடைஞ்சல்களை சுவிட்ச் ஆஃப் செய்து விடுங்கள். சின்ன சின்ன ரொமான்ஸ் விளையாட்டுக்களை உங்கள் டைனிங் ஹாலில் இருந்தே தொடங்கலாம். இதனால் உங்களுக்கு இடையே இடைவெளி ஏற்படுவது குறையும்.
சீரியஸா பேசாதீங்க
வேலைக்கு செல்லும் தம்பதியர்கள் கிடைக்கும் கொஞ்ச நேரத்தையும் உபயோகமாக செலவழியுங்கள். அந்த நேரத்தில் சீரியஸ் பேச்சுக்கள் வேண்டாமே. அது உங்களின் சந்தோசத்தை பறித்துவிடும். வார விடுமுறை நாட்களை உங்கள் இருவருக்காக மட்டுமே ஒதுக்குங்கள் அந்த நாட்களில் கூட பார்ட்டி நண்பர்கள் வீடு என பொழுதை கழிக்க வேண்டாம். நன்றாக இருவரும் சேர்ந்து ஓய்வெடுங்கள் அது அடுத்த வாரத்திற்கான உற்சாகத்தை அளிக்கும். என்னென்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை இருவரும் சேர்ந்து திட்டமிடுங்கள்.
புதிதாக யோசியுங்கள்
படுக்கையறையில் உங்களின் காதல் செயல்பாடுகளை புதிது புதிதாக செயல்படுத்துங்கள். நடனம், உடற்பயிற்சி என எதுவென்றாலும் அதில் ரொமான்ஸ் செயல்பாடுகள் இருக்கட்டும். அப்பொழுதுதான் உங்கள் காதல் வாழ்க்கை போர் அடிக்காமல் புத்துணர்ச்சியோடு இருக்கும்.