தாம்பத்ய உறவின் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் எரிக்கப்படுகின்றன. மூளையானது எண்டோர்பினை சுரப்பதால் இயற்கையாகவே மன அழுத்தம், கவலை குறைகிறது. எனவே தாம்பத்ய உறவு என்பது மனித வாழ்க்கையில் அவசியமானது, இயற்கையானது என்கின்றனர் மருத்துவர்கள்.
ஆலோசனை செய்யுங்கள்
தாம்பத்ய உறவு என்பது இருவர் தொடர்புடையது. எனவே வாரம் ஒருமுறையோ, மாதம் ஒருமுறையோ இருவரும் அவர்களின் லிபிடோ தன்மைக்கு ஏற்ப கலந்து ஆலோசித்து முடிவெடுக்கலாம். இது உடல்ரீதியாகவும், உணர்வு ரீதியாவும் தொடர்புடையது என்பதால் நன்றாக கலந்து ஆலோசித்து உறவில் ஈடுபடலாம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
உற்சாகமூட்டும் உணர்வுகள்
ஆரோக்கியமான தாம்பத்ய உறவு என்பது உணர்வுகளை உற்சாகப்படுத்தும். மங்கலான விளக்கின் வெளிச்சத்தில் மென்மையாய் கசியும் இசையைப் போல உங்கள் துணையில் மூச்சு சப்தம் உங்களின் உணர்வுகளை கிளர்ந்தெழச்செய்யும். அப்பொழுது நீங்கள் அளிக்கும் அன்பான ஸ்பரிசம் கலந்த உணவுகள் அவரை உற்சாகப் படுத்தும். அதேபோல் புத்துணர்ச்சி அளிக்கும் அதிகாலை நேரத்தில் உற்சாகமாக இருவரும் வாக்கிங், ஜாக்கிங், என கிளம்பலாம். இது உடலையும் உள்ளத்தையும் உற்சாகப்படுத்தும். அன்றைய நாளுக்குத் தேவையான சக்தியை அளிக்கும் என்றும் உளவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
பயத்தை விட்டொழியுங்கள்
அடிக்கடி தாம்பத்ய வைத்துக்கொண்டால், உடல் நலம் கெட்டுப்போகும் என்ற அதீத பயத்தின் காரணமாக, அதிக இடைவெளி விடுவார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு, நரம்பு தொடர்பான பலவீனங்கள், மனநோய், அஜீரணக்கேளாறுகள், நெஞ்செரிச்சல், தலைநோய், தலைபாரம் போன்ற பலம் குன்ற வைக்கும் நோய்கள் தோன்றி அவதிக்குள்ளாக்கும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இயற்கைக்கு எதிரானது
ஆணுக்கு உயிரணுக்கள் நன்றாகச் சுரக்க ஆரம்பித்த பிறகும், அதை அவன் வெளியேற்றாமல் நீண்ட நாட்களாக அடக்கி வைத்துக்கொண்டே இருந்தால், அது உள்ளேயே தேங்கி, அதனால் பின்விளைவுகளாக சில உடல் கோளாறுகளும் உண்டாக ஆரம்பிக்கும். தவிர, எந்த ஒரு உறுப்பை நாம் பயன்படுத்தாமல் விடுகிறோமோ அந்த உறுப்பானது நாளடைவில், அதன் செயல்திறனை இழப்பதோடு மட்டுமின்றி அது தன்னளவில் சுருங்கி இறுதியில் மறைந்து போகும் என்கின்றனர் ஆய்வாளர்கள். ஆண், பெண்களின் பாலியல் உறுப்புகளுக்கும் இது பொருந்தும். எனவே அவற்றிர்க்கும் சரியான, மிதமான வேலை கொடுக்க வேண்டியது முக்கியம். இல்லையெனில் இருவருக்குமே உடல்ரீதியான, மன ரிதியான கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.