அச்சம் தவிருங்கள்
பலருக்கு தாம்பத்ய வாழ்க்கையைப் பற்றிய பல எதிர்பார்ப்புகளும், அதே அளவுக்கு சந்தேகங்களும் இருக்கலாம். என்னதான் உடலளவில் பலசாலியாக இருப்பவர்களுக்கும் முதலிரவை நினைத்தே ஒருவித பயம் ஏற்படக்கூடும், இந்த பயம் இருபாலருக்கும் இருப்பது இயல்பே.
முன் கூட்டியே விந்தணு வெளியேறி விடுமோ? முழு அளவில் உறவில் ஈடுபட என்பன போன்ற பலவாறான சந்தேகங்கள் எழலாம். அந்த சந்தேகங்கள் உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால், உறவின் போது இருவரும் ஒரே நோக்கத்துடன் மாற்று சிந்தனைகளுக்கு இடம் அளிக்காமல் ஈடுபட வேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள்.
மன அழுத்தம் கூடாது
உறவின் போது மன அழுத்தம் அறவே கூடாது என்கின்றனர் உளவியலாளர்கள். மனதை இலேசாக வைத்துக் கொண்டு, உறவை மேற்கொள்ளுங்கள். ஒருவித பயம் அல்லது மன அழுத்தத்துடன் உறவில் ஈடுபடும் போது இருவருக்குமே திருப்தி ஏற்படாது என்கின்றனர் அவர்கள்.
சந்தேகம் வேண்டாம்
திருமணம் ஆன புதுத் தம்பதிகளை ஹனிமூன் அனுப்பி வைப்பதே இருவரும், வேறு எந்த சூழ்நிலையையும் யோசிக்காமல், மனம் மகிழ ஒரே சிந்தனையில் உறவில் ஈடுபடவேண்டும் என்ற நோக்கத்தில்தான். வேறு எதைப்பற்றியும் கவலை கொள்ள வேண்டாம். அப்படியே ஏதேனும் குறை இருப்பதாக, இருபாலரில் யாராவது உணர்ந்தால், திருமணம் ஆகி ஓரிரு மாதங்களுக்குள் உரிய மருத்துவரை அணுகி உங்களின் சந்தேகங்களுக்கு விடை காணவும்.
அவசரம் ஆகாது
உறவிற்கு முந்தைய கிளர்ச்சி தூண்டல் எனப்படும் முன்விளையாட்டு மிகவும் முக்கியப் பங்காற்றுகிறது. இந்த தூண்டல் நபருக்கு, நபர் வேறுபடும் என்பதோடு, பாலுறவில் இருவரில் யாருக்காவது ஒருவருக்கு நாட்டம் இல்லாதபோது, என்னதான் கிளர்ச்சியைத் தூண்டினாலும் அது சுவாரஸ்யத்தை அளிக்காது. எனவே உறவின் போது, அவசரத்தை கடைபிடித்தல் தேவையற்றது என்பதே உளவியலாளர்களின் அறிவுரை.
ஒரே மனநிலை அவசியம்
பாலுறவு என்பதே இனவிருத்திக்கும், மனிதன் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்குமான ஒரு புனிதமான உறவு என்பது அனைவருக்கும் தெரியும். எனவே உறவின் போது இருவருமே ஒரே மனநிலையில் இருத்தல் அவசியம். மனைவிக்கு மூடு உள்ள போது கணவன் களைப்புடன் இருந்தாலோ, அல்லது மனைவிக்கு விருப்பமில்லாமல் கணவன் விடாப்பிடியாக உறவு கொண்டாலோ, அது சுவரஸ்யமானதாக அமைய வாய்ப்பில்லை என்பதே நிபுணர்களின் கருத்து.
உற்சாகம் ஊற்றெடுக்கும்
திருமணமாகி ஒரு சில ஆண்டுகளுக்குப் பின் பல்வேறு காரணங்களால் இருபாலருக்குமே பாலுறவில் நாட்டம் இன்றி இருப்பது சகஜம்தான்.
அதுபோன்ற சூழ்நிலையில், குறிப்பிட்ட இடைவெளியில், அவரவர் சூழ்நிலைக்கேற்ப, அவ்வப்போது உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே உளவியலாளர்களின் அறிவுரை. இதனால் இருவரின் உள்ளத்திலும் மன அழுத்தம் நீங்கி உற்சாகம் நீடிக்கும். என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.