•  

எப்போதும் என்ன நினைப்பு? ஆணுக்கு செக்ஸ் ; பெண்ணுக்கு உணவே பிரதானம்

Sex
 
எப்ப பாத்தாலும் சாப்பாட்டு நினைப்புதானா? என்று பெண்கள் சிலரை கேலி செய்வதுண்டு. நிஜமாகவே பெரும்பாலான பெண்கள் உணவு குறித்தே சிந்தித்து கொண்டிருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. உறவில் ஈடுபடுவதை விட உணவுக்கே முக்கியத்துவத்துவம் தருவதாக தெரிவிக்கிறது அந்த ஆய்வு முடிவு. அதேசமயம் ஆண்கள் அடிக்கடி செக்ஸ் பற்றிய நினைப்பிலேயே ஆழ்ந்திருப்பதாகவும் அந்த ஆய்வு முடிவு குறிப்பிட்டுள்ளது.

ஒகியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனோதத்துவ இயல் பேராசிரியர் மேற்கொண்ட ஆய்வு முடிவில், ஆண்களுக்கு ஏழு செகண்டுக்கு ஒருமுறை செக்ஸ் பற்றிய நினைப்பு ஏற்படுவதாகவும் ஒரு வாரத்திற்கு 8 ஆயிரம் முறை செக்ஸ் பற்றி சிந்திப்பதாகவும் கண்டறிந்துள்ளார்.

ஆண்களுக்கு ஆசை அதிகம்

163 பெண்கள் மற்றும் 120 ஆண்களிடம் நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வு முறையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களிடம், அத்தியாவசியமான உணவு, தூக்கம், செக்ஸ் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது நாளொன்றுக்கு சராசரியாக 19 முறை செக்ஸ் பற்றி நினைப்பதாக ஆண்கள் தெரிவித்தனர். ஒருசில ஆண்கள் நாளொன்றுக்கு 388 முறை செக்ஸ் பற்றி நினைப்பதாகவும், அதைப்பற்றி பேசுவதாகவும் தெரிவித்துள்ளனர். உண்ணும் உணவு பற்றி 18 முறையும், உறங்குவது பற்றி 11 முறையும் சிந்தனை எழுவதாக தெரிவித்துள்ளனர்.

பெண்களுக்கு உணவு பிரதானம்

இளம் பெண்கள் நாளொன்றுக்கு 15 முறை உணவு குறித்து சிந்திப்பதாகவும், செக்ஸ் பற்றி 10 முறை சிந்திப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஒரு சில பெண்கள் மட்டுமே நாளொன்றுக்கு 140 முறை செக்ஸ் பற்றி சிந்திப்பதாகவும், அதைப்பற்றி பேசுவதாகவும் தெரிவித்துள்ளனர். பசியின் போது உணவைப் பற்றியும், சோர்வின் போது உறக்கத்தைப் பற்றி சிந்திக்கும் இளைஞர்கள் செக்ஸ் பற்றி அநேக நேரங்களில் சிந்திப்பதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு முடிவு ஆங்கில மருத்துவ இதழ் ஒன்றில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

English summary
New study has found it's wrong to believe that men think about sex every seven seconds but, of course, they do think of it more than women do, as the latter think more about food than sex, says a new study.
Story first published: Monday, December 12, 2011, 15:55 [IST]

Get Notifications from Tamil Indiansutras