•  

கொஞ்சம் முத்தம்... கொஞ்சம் அரவணைப்பு – ஆண்களின் புதிய விருப்பம்

Sex
 
தாம்பத்ய உறவை விட முத்தமும், அரவணைப்பும், கட்டி தழுவுதல்களும்தான் ஆண்களின் முக்கிய விருப்பமாக இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அதற்கு நேர்மாறக செக்ஸ் உறவில் பெண்கள் அதிக ஆர்வமுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தாம்பத்ய உறவுக்கு ஆண்கள் தான் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள் என்று அனைவரும் நம்பிக்கொண்டுள்ளனர். ஆணின் ஸ்பரிசத்தையும் அரவணைப்பை மட்டுமே பெண்கள் அதிகம் விரும்புவார்கள் என்று இதுவரை எண்ணப்பட்டு வந்தது. இந்த எண்ணத்தை தவிடு பொடியாக்கும் வகையில் அதிரடியான ஆய்வு முடிவு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அரவணைப்பு போதும்

ஐம்பது ஆண்டுகாலம் இணைந்து வாழும் 5 நாடுகளைச்சேர்ந்த ஆயிரம் தம்பதியரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 25 ஆண்டுகளாக தாம்பத்ய உறவில் ஈடுபட்ட தம்பதியரில் பெரும்பான்மையான ஆண்கள் பலரும் முத்தமிடுவதையும், கட்டித் தழுவுவதையும் அதிகம் விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

40 முதல் 70 வயதுடைய தம்பதியரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது அதில் பல ஆண்கள் தம்முடைய துணையுடன் உறவில் ஈடுபடுவதை விட முத்தமிடுவதையும், அரவணைப்பையுமே விரும்புவதாக கூறியுள்ளனர்.

செக்ஸில் ஆண்களுக்கு எது அதிகம் பிடிக்கிறது என்ற கேள்விக்கு நிறைய முத்தமும், கட்டிப் பிடிப்புகளும்தான் என்று பெரும்பாலான ஆண்களிடமிருந்து தகவல் கிடைத்துள்ளது. அடிக்கடி தங்களை மனைவியர் கட்டிப் பிடிப்பது மிகவும் பிடித்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

உறவு அதிகம் வேண்டும்

பெண்களைப் பொறுத்தவரை அதிக அளவிலான செக்ஸ் உறவையே தங்களது பார்ட்னர்களிடமிருந்து எதிர்பார்க்கிறார்களாம். திருமணமாகி 15 ஆண்டுகளைப் பூர்த்தி செய்து விட்ட பெண்களுக்கு செக்ஸ் உறவு குறித்த நல்ல அறிவும், ஞானமும் ஏற்படுகிறதாம். இந்த விஷயத்தில் ஆண்களை விட பெண்களுக்குத்தான் செக்ஸ் குறித்த முழுமையான ஞானம் இருப்பதாக தகவல் கூறுகிறது.

என்னதான் கட்டிப்பிடிப்புகளும், முத்தங்களும் அதிகம் பிடித்தமானவையாக இருப்பதாக ஆண்கள் கூறினாலும் கூட செக்ஸ் உறவுகளுக்கும் 20 சதவிகிதம் பேர் முக்கியத்துவம் தருகிறார்களாம். ஆணும் சரி, பெண்ணும் சரி செக்ஸ் உறவு என்பது நிம்மதியான மகிழ்ச்சியைத் தரும் அனுபவமாக அது இருப்பதாக பொதுவான கருத்தைத் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வு இந்தியாவில் நடத்தப்படவில்லை. எனவே இந்தியர்களின் மன நிலை குறித்த அளவீடாக இதை எடுத்துக் கொள்ள முடியாது. இந்தியப் பெண்கள் பெரும்பான்மையோர் கணவனிடம் இருந்து எதிர்பார்ப்பது சின்னச் சின்ன முத்தங்கள், அன்பான கட்டித் தழுவல்களும்தான் என்றால் மிகையாகாது.English summary
Men need to cuddle to be happy in a long-term relationship while women prefer to have sex, a new study finds. Acts of affection like hugs and kisses were more important to men than women, researchers found. And for women, sex tends to get better over time - after a couple has been together about 15 years.
Story first published: Saturday, November 26, 2011, 18:23 [IST]

Get Notifications from Tamil Indiansutras