•  

மல்லிகைப் பூ கொடுத்து மனைவியைக் குஷிப்படுத்துங்க

Jasmine
 
வாழ்க்கையின் பாதையில் பூக்கள் மட்டுமே பூத்திருப்பதில்லை. முட்களும் நிறைந்ததுதான் குடும்ப வாழ்க்கை. பயணத்தின் போது எதிர்பாராத திருப்பங்களும் ஏற்படும். எத்தகைய இடைஞ்சல் வந்தாலும் எதிர்நீச்சல் போட்டு வெல்ல உளவியல் வல்லுநர்கள் கூறும் சில ஆலேசனைகள்.

மனதை ரிலாக்ஸ் செய்

காலையில் எழுந்ததும் குறைந்தது 1/4 மணி நேரமாவது தியானம் செய்யுங்கள். அது, உங்கள் மனதை அமைதிபடுத்தும். தெளிவான-உறுதியான முடிவுகள் எடுக்க உதவும். நாள்முழுவதும் மேற்கொள்ளும் செயல்களுக்கு உற்சாகத்தை தரும்.

ஆரோக்கியம் அவசியம்

உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும். அதனால், நீங்கள் உண்ணும் உணவு ஆரோக்கியமானதாக இருக்கட்டும். அவசர கதியில் பாஸ்ட் புட் அயிட்டங்களுக்கு எக்காரணம் கொண்டும் முக்கியத்துவம் தரவேண்டாம். ஏனெனில் அவற்றை விரும்பி சாப்பிட ஆரம்பித்தால் உடல் எக்குத்தப்பாக சதை போட ஆரம்பித்துவிடும். இல்லாத நோய்களும் வந்து ஒட்டிக்கொள்ளும்.

மயக்கும் மல்லிகை

வேலைக்கு செல்பவர்கள் வேலையே கதியென்று இருந்துவிடக்கூடாது. குடும்பம் என்ற ஒன்று இருக்கிறது என்ற நினைப்பும் இருக்க வேண்டும். அப்படி வரும்போது, திருமணம் ஆன ஆண்கள் மனைவிக்கு தினம் ஒரு முழம் மல்லிகைப் பூவுடன் ஸ்வீட் வாங்கி கொடுத்துப்பாருங்கள் அது மனைவியை ஆனந்தத்தின் உச்சிக்கே கொண்டு போய் விடும்.

இன்பச் சுற்றுலா அவசியம்

சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்றால் உற்சாகம் ஊற்றாக பெருக்கெடுத்து வரவேண்டும். அதற்கு, நம்மை சுற்றிள்ள சூழ்நிலைகள் ஆரோக்கியமாக - மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டும். அதற்கு, வாரத்தில் ஒருநாளாவது குடும்பத்தோடு செலவிடுங்கள். பார்க், பீச், தியேட்டர் என்று வெளியில் சென்று வருவது செலவை வைத்தாலும், அள்ள அள்ள குறையாத மகிழ்ச்சியை கொண்டு வரும். வருடத்திற்கு ஒருமுறையாவது ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் என்று குடும்பத்தோடு இன்பச் சுற்றுலா சென்று வாருங்கள். இதுவும் உங்கள் உள்ளத்தை உற்சாகப்படுத்தும்.

பட்ஜெட் போடுங்க

வரவிற்குள் தான் குடும்பத்தை ஓட்ட வேண்டும். அதனால், மாதம்தோறும் பட்ஜெட் போடுவது சிறந்தது. அந்த பட்ஜெட்டில் சேமிப்புக்கு என்றும், மருத்துவச் செலவுக்கு என்றும் தேவைபடும்போது மாத்திரம் எடுத்து பயன்படுத்தும் வகையில் ஒரு தொகையை ஒதுக்குவது ஆனந்த வாழ்வுக்கு வித்திடும். விருந்தினர் வருகையை எதிர்பார்த்து சேமிப்பது புத்திசாலித்தனம்.

அடுத்தவர் தலையிடுவது ஆபத்து

கணவன்- மனைவி பிரச்சினையை இருவரும் பேசி தீர்க்கவேண்டும். அதில் மூன்றாவது நபரை தலையிட அனுமதித்தால் சிக்கலாகிவிடும். எனவே உங்கள் வீட்டுப்பிரச்சினையை நீங்கள் மட்டுமே பேசித் தீருங்கள். தம்பதியருக்குள் எக்காரணம் கொண்டும் பிரிவு ஏற்படக்கூடாது. மீறி பிரியும் சூழ்நிலை ஏற்பட்டால், வேறு வாழ்க்கைக்கு மனம் பழகிவிடும். அதனால் உஷார்...

பாலின வேறுபாடு வேண்டாம்

குழந்தைகளை லட்சியத்தோடு வளர்த்து ஆளாக்க வேண்டும். பாலின வேறுபாடு காட்டக்கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித திறமை உண்டு. அதை கண்டறிந்து ஊக்கபடுத்தினால், நிச்சயம் வெற்றிதான்.

ஆனந்தம் விளையாடும்

தம்பதியரின் ஆனந்த வாழ்க்கைக்கு தாம்பத்திய வாழ்க்கையும் ஒரு முக்கிய காரணம். அந்த வாழ்க்கை ஆனந்தமாக இருந்தால் உங்கள் ஒவ்வொரு செயலும் இனிக்கும். ஆனந்த வாழ்க்கை தானாகத் தேடி வரும். எனவே தாம்பத்ய வாழ்க்கையில் எந்த தடங்கலும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அப்புறம் பாருங்கள் உங்கள் வீட்டில் ஆனந்தம் விளையாடும்.

English summary
Romance is the life blood of love that keeps the beat alive thus making the love everlasting and ever charming. Romance after marriage is perhaps the key to a successful wedding life that keeps the flame of love burning throughout. Getting hold of some romantic tips for couples would let the married couple to induce a romantic break in their love life.
Story first published: Monday, November 28, 2011, 16:42 [IST]

Get Notifications from Tamil Indiansutras