•  

மையலை அதிகரிக்கும் இந்திய சமையல்!

 
ஒரு சராசரி மனிதனுக்கு தேவையான புரதம், கார்போஹைடிரேட், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் செறிந்த உணவுகளை தேவையான கலோரிகளில் எடுத்துக் கொள்ளாவிட்டால், உடல் ஆரோக்கியத்துடன் பாலுணர்வு திறனும் சிதைந்து விடும். அதனால்தான் நம் முன்னோர்கள் உணர்வுகளை தூண்டும் உணவுகளை சமைத்து உட்கொண்டுள்ளனர். இதன் மூலம் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து தம்பதியர் ஆரோக்கியமான சந்ததியை உருவாக்கினர். இந்திய சமையலில் இடம்பெறும் மையலை அதிகரிக்கும் முக்கிய உணவுப் பொருட்களை தெரிந்து கொள்வோம்.

ஆண்மையை அதிகரிக்கும் பொட்டாசியம்

பொட்டாசியமும் 'பி' விட்டமின்களும் செக்ஸ் ஹார்மோன் உற்பத்திக்கு இன்றியமையாதவை. காய்கறிகளிலும், பழங்களிலும் உள்ள பொட்டாசியம் ஆண்மையை அதிகரிக்கின்றன. வாழைப்பழம் ஆண்மையை பெருக்கும் முக்கியமான பழமாக கருதப்படுகிறது. வாழைப்பழத்தில் உள்ள ஒரு வேதிப்பொருள் செக்ஸ் உணர்வை அதிகரிக்கும். பப்பாளி, மாம்பழம், கொய்யாபழம் இவைகளும் சிறந்த இளமை காக்கும் பழங்கள். கொய்யாப்பழம் பெண்களின் உறுப்புக்களின் தசைகளை வலுப்படுத்தும்.

மங்கனீஸ் சத்துக்கள்

மங்கனீஸ் அடங்கிய கொட்டைகள், விதைகள், முழுத்தானியங்கள் முதலியவைகளும் பாலியல் ஆற்றலுக்கு உதவும். பாஸ்பரஸ், தாதுப்பொருளும் 'தாது விருத்திக்கு' உதவும். தொன்று தொட்டு ஆண்மையையும், மக்களைப் பெற சக்தி அளிக்கும் உணவாக பாதாம் பருப்பு பயன்படுத்தப்படுகிறது. கருமிளகு, தேன், மிளகாய் முதலியன பாலுணர்வை தூண்டும் உணவாக உட்கொள்ளப்படுகின்றன.

வைட்டமின்கள்

வைட்டமின் 'இ','சி','ஏ','பி' காம்ப்ளெக்ஸ், ஃபோலிக் அமிலம், விட்டமின் பி 6, பி 12, இருக்கும் உணவுகள் உணர்வை தூண்ட உதவுகின்றன.

பூமிக்கு அடியில் விளையும் கிழங்குகள், பூமியின் சக்தியை உறிஞ்சி, அதை நமக்களிக்கும். கேரட், முள்ளங்கி போன்றவை ஆண்மையை பெருக்கவல்லவை. தக்காளியும் சிறந்த பாலுணர்வு ஊக்கி. ஃப்ரான்ஸில் இதை 'காதல் ஆப்பிள்' என்பார்கள்.இவை தவிர குடமிளகாய், இஞ்சி, செலரி, வெள்ளரி, தனியா இவைகளும் உதவும்.உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் துளசி ஆண்களின் பாலுணர்வு ஆர்வத்தை தூண்டுகிறது.

வெங்காயம் தொன்றுதொற்று இந்தியாவில், எகிப்தில், அரேபியாவில் ஆண்மை ஊக்கியாக பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறியாகும். அதுவும் வெள்ளை வெங்காயம் சிறந்தது. வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி உண்ண வேண்டும். “ஆனியன் சூப்" புத்துணர்ச்சி ஊட்டும். பாலுணர்வை தூண்டுவதில் வெள்ளைப்பூண்டு முக்கிய பங்கு வகிக்கிறது.

மீன், நண்டு,முத்துச்சிப்பி

செலினியம் உள்ள வெண்ணெய், மீன்கள், முழுக்கோதுமை, எள் முதலியவைகளும் காதல் உணவுகளாகும். மாமிச வகைகளில் நீர் வாழ் பிராணிகளின் மாமிசம் உண்பது நல்லது. கடல் மீன்களை விட நதிமீன்கள் பாலியல் உணர்வை தூண்டுபவை. கடல் முத்துசிப்பி, சிறந்த ஆண்மை பெருக்கியாக கருதப்படுகிறது.

வாசனைப் பொருட்கள்

கோதுமை அரிசி, உளுத்தம் பருப்பு இவை ஆண்மையை ஊக்குவிக்கும், விந்துவின் தரத்தை உயர்த்தும். ஜாதிக்காய், ஏலக்காய், குங்குமப்பூ, இலவங்கப் பட்டை இவைகளும் ஆசையை அதிகரிக்கும் குறிப்பாக ஜாதிக்காய் “விந்து முந்துதலை" தடுக்கும். இந்த வாசனை திரவியங்களை பாலுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும். இலவங்கப்பட்டை தான் ஆசைய ஊக்குவிக்கும். ஆலிவ் எண்ணெய் உணர்வுகளை தூண்டும் முக்கிய உணவுப் பொருளாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

வெற்றிலை - உணவுக்கு பின் தாம்பூலம் தரிப்பது உடலுறவு ஆசையை தூண்டும். ஆனால் பாக்கு, புகையிலை, ஆல்கஹால் இவை எதிர்மாறான விளைவுகளை உண்டாக்கும்.

English summary
Everything that can be summed up as good sex depends to a great extent on your body's blood circulation, which is made or marred by the food that you consume. Food that facilitates the proper pumping of blood in the body adds to your sexual prowess.
Story first published: Friday, November 25, 2011, 17:43 [IST]

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more