சிலர் இன்றும் கூட கூட்டுக் குடும்பங்களில் வசிக்கத்தான் செய்கிறார்கள். அந்த அழகான, இனிமையான கூட்டு வாழ்க்கைக்கு நிகர் எதுவும் கிடையாது. சில பல உராய்வுகள் இருந்தாலும் கூட, கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் சுகத்தை விட மனமில்லாமல் அதைப் பொருட்படுத்துவதில்லை இவர்கள்.
கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் முக்கியமான சுவாரஸ்யமே, கணவன், மனைவி இடையிலான சின்னச் சின்ன சில்மிஷங்கள்தான். அதுவும் புதுமணத் தம்பதிகளாக இருந்து விட்டால் இந்த சில்மிஷங்கள் படு திரில்லாக இருக்கும்.
வீட்டில் வயதானவர்கள் இருப்பார்கள், நாத்தனார், கொழுந்தனார் என்று கூட்டமாக இருக்கும், குட்டீஸ்கள் ஊட ஊட போய் வருவார்கள். இதையும் தாண்டி ரொமான்ஸ் என்பது, ஏழு கடல், ஏழு மலையைத் தாண்டி கழுகின் காதில் புதைந்திருக்கும் பொக்கிஷத்தை எடுப்பதற்குச் சமமான ஜிலீர் திரில் விஷயமாக இருக்கும்.
இருந்தாலும் இதுபோன்ற கூட்டம் அலை மோதும் வீடுகளில் இளம் தம்பதிகள் தங்களுக்குள் உணர்வுகளைப் பரிமாறிக் கொள்ள அல்லது தாங்கள் நினைப்பதை உணர்த்த கோட் வேர்ட்களை கடைப்பிடிப்பது சாதாரணமானது. மற்றவர்களுக்கு இவர்கள் என்னவோ பேசுகிறார்கள் என்று மட்டும்தான் தெரியும், ஆனால் என்ன பேசுகிறோம் என்பது இந்த இருவருக்கு மட்டும்தான் புரியும்.
முத்தமிட விரும்பும்போதும், உறவுக்கு டைம் ஆகிறது என்பதை உணர்த்தவும், தனியாக அழைக்க விரும்பும்போதும் இந்த கோட் வேர்ட்களை இளம் தம்பதிகள் பரிமாறிக் கொள்வது வழக்கம். கூட்டுக் குடித்தனம் என்றில்லை, வீட்டில் கெஸ்ட்கள் கூட்டம் அதிகமாக இருந்தாலும், மற்ற சமயங்களிலும் கூட இந்த கோட் வேர்ட்கள் ரொம்பவே யூஸ் ஆகும்.
எங்காவது நண்பர் வீட்டுக்கோ அல்லது வேறு இடத்திற்கு போகிறோம். போனோமோ, கிளம்பினோமா என்றில்லாமல் கணவர் உட்கார்ந்து அவர் பாட்டுக்கு அரட்டை அடித்துக் கொண்டிருந்தால் அவரைக் கிளப்ப இந்த கோட் வேர்ட்கள் மனைவியருக்கு உதவும். இப்படி பல இடங்களில் இதைப் பயன்படுத்தலாம்.
செக்ஸ் கோட் என்பது இந்தியாவில் மட்டுமல்ல, தமிழ்நாட்டு வீடுகளில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே பிரபலமாக உள்ள ஒன்றுதான். இடத்திற்கு இடம் இந்த கோட் வேர்ட்கள் மாறலாம். மற்றபடி உள்ளர்த்தம் ஒன்றுதான்.
'புழக்கத்தில்' உள்ள ஒரு சில கோட் வேர்ட்கள்...
லேட்டாகப் போகுது ஹோம்வொர்க் பண்ணலையா?, பூனைக்கு ரொம்ப பசியா இருக்குது சாப்பாடு வக்கலையா?, சாக்லேட் கிடைக்குமா?, ஐஸ்கிரீம் எங்கே?, குரங்கு பசியா இருக்கு போல?, ரூமைக் கிளீன் பண்ணனும் கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமா?, இன்னிக்காச்சும் மழை பெய்யுமா? ... இப்படி நிறைய.
நேரடியாக பேசுவதை விட இந்த கோட் வேர்ட்களுக்கு கிக் அதிகம் என்கிறார்கள் அனுபவசாலிகள். யூஸ் பண்ணாதவங்க டிரை பண்ணிப் பார்க்கலாமே...!