•  

35 வயதுக்கு மேல் செக்ஸ் உணர்வு குறைந்தால் தப்பா?

Sex
 
35 வயதைத் தாண்டிய பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம் நமக்கு செக்ஸ் உணர்வு குறையத் தொடங்கி விட்டதே என்பதுதான் என்றஉ டாக்டர்கள் கூறுகிறார்கள். ஆனால் அப்படி ஒரு கவலை தேவையில்லை என்பதே அவர்களின் பதில்.

35 வயதைத் தாண்டிய பல பெண்களின் மனதில் இனி நம்மால் செக்ஸில் முன்பு போல ஈடுபட முடியாதா, உச்ச நிலையை அடைய முடியாதா என்ற எண்ணம் பரவலாக தோன்றுகிறதாம். மேலும் 30 வயதைத் தாண்டி விட்டாலே செக்ஸ் உணர்வுகள் குறையத் தொடங்கி விடும் என்ற பரவலான கருத்தும் அவர்களிடம் நிலவி வருகிறதாம்.

ஆனால் டாக்டர்கள் இதை சுத்தமாக மறுக்கிறார்கள். இதுகுறித்து செக்ஸாலஜிஸ்ட்டுகள் கூறுகையில், நிச்சயம் இது தவறான கருத்து. 30 வயதைத் தாண்டி விட்டோம், இனி செக்ஸ் வாழ்க்கை முன்பு போல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவு செய்து விட்டொழியுங்கள்.

20 வயதுகளில் எப்படி செக்ஸை அனுபவித்தீர்களோ அதே போல 30 வயதைத் தாண்டிய பின்னரும் கூட அனுபவிக்கலாம். அதற்கு ஒரே முக்கிய தேவை உங்களது மனதை ரிலாக்ஸ்டாக வைத்துக் கொள்வது மட்டுமே. உண்மையில் 30 வயதுக்கு மேல்தான் செக்ஸ் வாழ்க்கையில் நிம்மதியாக, பரிபூரணமாக, முழுமையான இன்பத்துடன் ஈடுபட முடியும். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று.

அதேசமயம், சில பெண்களுக்கு 35 வயதுக்கு மேல்செக்ஸ் ஆர்வம் குறைவது இயல்புதான். அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஒவ்வொருவருக்கும் இது வித்தியாசப்படும். பொதுவான காரணம் என்று எதுவும் கிடையாது.

ஆர்கசம் எனப்படும் உச்ச நிலையை அடைவதில் 35 வயதைத் தாண்டிய பெண்களுக்கு என்றில்லை, 20 களில் இருக்கும் பெண்களுக்கும் கூட பிரச்சினை வருவதுண்டு. எனவே ஆர்கசம் என்பது எல்லோருக்கும் உள்ள பொதுவான பிரச்சினைதான். அது, செக்ஸ் உறவில் ஈடுபடும்போது நமது மன நிலை, உடல் நிலை எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தது.

ஆர்கசம் பிரச்சினை உள்ள பெண்கள், உரிய தெரபிஸ்டுகளை அணுகி ஆலோசனை கேட்கலாம். ஆர்கசத்தை அடைவதற்கு பல மருத்துவ ரீதியான, மனோ ரீதியான வழிமுறைகள் உள்ளன. அதைக் கையாளலாம்.

30 வயதைத் தாண்டிய, விவாகரத்து செய்த அல்லது கணவரை இழந்த பல பெண்களுக்கும் ஆர்கசம் வரும். செக்ஸ் உணர்வும் அதிகமாக இருக்கும். இதை நினைத்து பல பெண்கள் கவலைப்படுவார்கள். நாம் தவறு செய்கிறோமோ என்ற எண்ணமும் அவர்களிடம் எழலாம். ஆனால் இது நிச்சயம் தவறான ஒன்றில்லை. இது இயல்பான ஒன்றுதான். பெண்களின் உடலியல் அப்படி. எனவே நாம் செக்ஸ் குறித்து சிந்திப்பது தவறு என்று இந்தப் பெண்கள் நினைக்கத் தேவையில்லை.

இதுபோன்ற பெண்கள் தங்களது மனதை ஒருமுகப்படுத்த பல வழிகள் உள்ளன. அவற்றில் ஈடுபடலாம்.

எனவே 30 வயதுக்கு மேல் செக்ஸ் உணர்வும், ஆர்கசமும் அற்றுப் போய் விடும் என்ற கவலையும், ஆர்கசம் அதிகமாக இருக்கிறதே என்ற கவலையும் தேவையில்லை. இவை இயல்பானவைதான். அதற்கான உபாயங்களைக் கையாண்டு அவற்றை வெற்றிகரமாக சமாளிக்க நாம்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

மனிதனுக்கு உள்ள பெரிய பலமே மூளைதான். அது எந்த சிந்தனையின் பக்கம் திரும்ப வேண்டும் என்பதை தீர்மானிக்கும் கட்டுப்பாடு, மனதின் கையில்தான் உள்ளது. எனவே மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்ற முதுமொழிக்கேற்ப இதையும் சமாளிக்க முயல்வோம்.

English summary
There is a worry among the women who have crossed 30, that the sex drive will decrease within them. But the doctors dont agree this. They say, the woman must learn to be comfortable and familiar with her own body and sexuality, which unfortunately a lot of women are not. All women can be taught how to have an orgasm!, They just need to get in touch with a good therapist, docs say.
Story first published: Thursday, November 10, 2011, 11:16 [IST]

Get Notifications from Tamil Indiansutras