நேர்மறை எண்ணங்கள்
அரிசோனா மாகான பல்கலைக்கழகம் நடுத்தர வயதைச்சேர்ந்த 58 பெண்களிடம் நடத்திய ஆய்வின்படி தனது துணையுடனான நெருக்கத்தினால் எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறையான எண்ணங்கள் அதிகரிப்பதாக தெரிவித்துள்ளனர். முதல்நாளன்று தாம்பத்திய உறவினால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்ந்து வரும் நாட்களில் மனஅழுத்தத்தை குறைப்பதாக தெரிவித்துள்ளனர்.
நல்ல மனநிலையுடன் இருப்பவர்கள் தனது துணையுடனான உறவில் அதிக ஆர்வத்துடன் ஈடுபடுவதாக அதே ஆய்வில் தெரியவந்துள்ளது. நல்ல 'மூட்' இருந்தால் தம்பதியர்களுக்கிடையே சிறந்த அளவிலான உறவு ஏற்பட்டு மன அழுத்தத்தை குறைப்பதாகவும் ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ரத்த அழுத்தம் குறையும்
மன அழுத்தத்திற்கு உள்ளானவர்களை ரத்த அழுத்தநோய் தாக்கும் அபாயம் உள்ளது. ஆனால் தாம்பத்ய உறவானது மனஅழுத்தத்தை குறைப்பதோடு உயர்ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது. இதன்காரணமாகவே மன அழுத்தத்திற்கு ஆளானவர்கள் துணையுடன் நெருக்கமாக இருக்கவேண்டும் என்று மனநல மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
சீராகும் இதயத்துடிப்பு
மனஅழுத்தமானது பெண்களில் இதயத்துடிப்பு அதிகரிக்கச்செய்வதாக தெரிவிக்கிறது. ஆனால் துணையுடனான உடல்ரீதியான தொடர்பு மூலம் மன அழுத்தம் குறைந்து இதயத்துடிப்பு சீரடைவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. உணர்வு ரீதியான ஆதரவானது மனஅழுத்தத்தினை குறைக்கச்செய்கிறதாம்.
செக்ஸ் உறவானது மனஅழுத்தத்தினை குறைப்பதோடு மட்டுமல்லாமல் மனதை லேசாக்கி கவலைகளை மறக்கச்செய்வதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆழமான மூச்சு விடுவதன் மூலம் ரிலாக்ஸ்சாக உணரச்செய்து ரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவை அதிகரிக்கச்செய்கிறது. ஆதரவான தொடுகை மனஅழுத்தத்தைப் போக்கி மனதையும், உடலையும் லேசாக்குகிறது.
தாம்பத்ய உறவின் மூலம் ஹார்மோன் சுரப்பது சீரடைகிறது. உற்சாகத்தை அதிகரிக்கச்செய்கிறது. தேவையற்ற கலோரிகளை எரித்து மனஅழுத்தத்தை குறைப்பதோடு சிறந்த உடற்பயிற்சியாகவும் விளங்குகிறது.