•  

ஒரே இரவில் 8 பெண்களுடன் உறவு கொண்ட பெர்லுஸ்கோனி: பொறாமைப்படாதீங்க என்கிறார் புடின்!

Italian PM Berlusconi
 
ரோம்: பெர்லுஸ்கோனியின் பெட்ரூம் கதைகள் என்ற பெயரில் எப்போது ஹாலிவுட்டில் படம் எடுக்கப் போகிறார்கள் என்று தெரியில்லை. அந்தஅளவுக்கு பெர்லுஸ்கோனியின் காமக் களியாட்டக் கோலாகலங்கள் குறித்த லீலைகள் தொடர்ந்து வெளியாகிய வண்ணம் உள்ளன. இந்த நிலையில் பெர்லுஸ்கோனி ஒரே இரவில் 8 பேருடன் காமக் களியாட்டத்தில் ஈடுபட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பெண்களை அழைத்து வர அரசு செலவில் விமானத்தையும் அவர் அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் பெர்லுஸ்கோனியைப் பார்த்துப் பொறாமைப்படுபவர்கள்தான் இப்படியெல்லாம் புகார் கூறுகிறார்கள் என்று கூறியுள்ளார் ரஷ்ய பிரதமர் விலாடிமிர் புடின்.

இத்தாலி நாட்டின் பிரதமர் சில்வியோ பெர்லூஸ்கோனி. இவருக்கு வயது 74 ஆகி விட்டது. ஆனாலும், இன்னும் அடங்கவில்லை இவரது காமக்களியாட்டங்கள். பெண்களுடன் கும்மாளமிடுவதுதான் இவரது முக்கிய வேலையாக உள்ளது. பிறகுதான் பிரதமர் பதவியெல்லாம் என்பது போலாகி விட்டது இவரது லீலைகள். இவர் மீது பல செக்ஸ் புகார்கள் உள்ளன. இதுதொடர்பாக நீதிமன்றங்களில் விசாரணைகளும் நடந்து வருகின்றன. விசாரணைகளின்போது வெளியாகும் தகவல்கள் பெர்லுஸ்கோனியைப் பற்றி அனைவரும் வியந்து வெளிறிப் போகும் அளவுக்கு உள்ளன.

இந்நிலையில் கடந்த 2009ம் ஆண்டு விபசார புரோக்கரான தராந்தினி என்பவர் பெரிய வியாபாரிகளுடன் பேசிய ரகசிய பேச்சுகளின் டேப்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் பெர்லுஸ்கோனி குறித்து திடுக்கிடும் தகவல்கள் உள்ளன. எல்லாமே பொம்பளை மேட்டர் பற்றித்தான்.

ஒருமுறை 11 பெண்களை பெர்லுஸ்கோனிக்காக ஏற்பாடு செய்திருந்தாராம் தராந்தினி. ஆனால் அத்தனை பேருக்கும் கால்ஷீட் கொடுக்க முடியாமல் போய் விட்டதாக வருத்தப்பட்டு தராந்தினியிடம் கூறியுள்ளார் பெர்லுஸ்கோனி. இதுகுறித்து பெர்லுஸ்கோனி கூறுகையில், நேற்று இரவு எனது பெட்ரூக்கு வெளியே பெரிய கியூவே காத்திருந்தது. 11 பேர் வந்திருந்தனர். ஆனால் என்னால் எட்டு பேருடன்தான் இருக்க முடிந்தது. காரணம், படுக்கை அறை நிரம்பி வழிந்தது. அதற்கு மேல் யாரையும் உள்ளே அழைக்க முடியாத நிலை. எனது திறமை குறித்து காலையில்தான் என்னால் முழுமையாக உணர முடிந்தது என்று கூறியுள்ளார் பெர்லுஸ்கோனி.

அத்தோடு நில்லாமல் இங்கிலாந்து (முன்னாள்) பிரதமர் கார்டன் பிரவுன், போப்பாண்டவர் என பல உலகத் தலைவர்களுடன் அடுத்தடுத்து சந்திக்கவுள்ளதால், கொஞ்ச நாளைக்கு பார்ட்டி யாரையும் அனுப்ப வேண்டாம் என்றும் அந்த புரோக்கரிடம் கேட்டுக் கொண்டுள்ளார் பெர்லுஸ்கோனி.

பெர்லுஸ்கோனியின் இந்தப் பளிச் பேச்சு பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது, அதிர வைத்துள்ளது. அத்தோடு நின்றாரா பெர்லுஸ்கோனி?, அதுதான் இல்லை. தனக்குத் தேவைப்படும் அழகிகளை அழைத்து வர அரசு செலவில் விமானங்களையே அனுப்பி வைத்து என்ஜாய் செய்துள்ளார். மேலும் அரசு நிகழ்ச்சிகளுக்கு பெண்களை வர வைத்து பின்னர் அவர்களுடன் உல்லாசமாகவும் இருந்துள்ளார்.இதற்கான செலவுகளை அரசு கஜானாவில் இருந்து செலவி்ட்டதாக தெரிகிறது.

இந்த தகவல்கள் அடங்கிய டேப்கள் அனைத்தும் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தராந்தினி, மாஜிஸ்திரேட் மற்றும் சில முக்கிய அரசு அதிகாரிகளுக்கும் கூட பெண்களை அனுப்பி வைத்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கொந்தளித்துள்ளன. உடனடியாக பெர்லுஸ்கோனி விலக வேண்டும் என்று அவை கோரியுள்ளன. ஆனால் பெர்லுஸ்கோனி படு கூலாக இதுகுறித்துக் கூறுகையில், எனது தனிப்பட்ட வாழ்க்கை நன்றாகவும் இருக்கலாம், அசிங்கமாகவும் இருக்கலாம். ஆனால் அது எனது தனிப்பட்ட வாழ்க்கை, நான் மட்டுமே சம்பந்தப்பட்டது. அது குறித்து யாரும் கவலைப்பட முடியாது என்று கூறியுள்ளார்.

இத்தாலியின் இந்த மதன காமராஜனின் லீலைகள் உலுக்கியெடுத்து வரும் நிலையில் அவருக்கு ஆதரவாக ரஷ்யாவிலிருந்து ஒரு குரல் கிளம்பியுள்ளது. அது சாட்சாத் புடின்தான். இதுகுறித்து அவர் கூறுகையில், எல்லோருக்கும் பெர்லுஸ்கோனி மீது பொறாமை. அதனால்தான் புகார் கூறுகிறார்கள் என்று கூறியுள்ளார் புடின்.

ஒரு வேளை புடின் 'புற்று'க்குள்ளும் இதுபோல ஏதாவது இருக்குமோ...?

English summary
Italian PM Silvio Berlusconi has been caught boasting on tape of having sex with 8 women in one night and lamenting that he did not have the energy to get around to 3 more who were waiting for him, said the Italian PM in the latest leaked wiretap.
Story first published: Tuesday, September 20, 2011, 11:40 [IST]

Get Notifications from Tamil Indiansutras