•  

'அதுக்கெல்லாம்' ஏது நேரம்? அலுத்துக்கொள்ளும் தம்பதிகள்!

Sex
 
அதிகாலை எழுந்து அரக்கப் பரக்க வீட்டு வேலை செய்துவிட்டு உடனே அலுவலகப் பணிக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வாழ்க்கையே இயந்திரமயமாகி விட்ட சூழலில் சுற்றத்தாரையும், நண்பர்களையும் சந்தித்துப் பேச நேரமேது என்று ஆதங்கப்படுபவர்கள்தான் அதிகம் உள்ளனர்.

அலுத்து சலித்து போய், 'அதற்கெல்லாம் நேரம் ஏதுங்க' என கூறப்படும் வரிசையில் ஒன்றாகி வருகிறது தாம்பத்யம். இது அதிர்ச்சியும் வருத்தமும் படவேண்டிய விசயம்தான். தளர்வும், சோர்வுமே தாம்பத்யத்தை தள்ளி வைப்பதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது. 10ல் 7 தம்பதியர்கள் இவ்வகையான சோர்வு நிலையிலேயே உள்ளனர் என அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

தவிர்க்க ஐந்து காரணங்கள்

தாம்பத்யத்திற்கு முன் சோர்வாக காணப்படுவதற்கு 5 முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. அவை : போதுமான அளவு தூக்கமின்மை, நீண்ட வேலை நேரம், துணையில் ஒருவர் நேரங்கழித்து படுக்கைக்கு செல்லுதல், குழந்தைகள் சீக்கிரமாக எழுந்து நம்மையும் எழுப்பி விடுதல் அல்லது தாமதம் ஏற்படுத்துதல், இயந்திர மயமான சமூக வாழ்க்கை போன்ற சூழ்நிலைகளால் தாம்பத்யம் தவிர்க்கப்படுகிறது.

தூக்கமின்மையால் பாதிப்பு

இது தொடர்பாக 3,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 2/3 பங்கு பேர் தங்களது தாம்பத்யத்திற்கு வார இறுதி நாட்கள் உகந்ததாக உள்ளது என கருத்து கூறியுள்ளனர். மறுநாள் விடுமுறை ஆதலால் அவசரமாக எழுந்து எந்த வேலையையும் செய்ய வேண்டியதில்லை.

இந்த வாரம் கிடையாது என 5ல் ஒருவர், தெளிவாக சொல்லி விடுகின்றனர். போதுமான தூக்கம் இன்மையே தங்களின் இயலாமைக்கு காரணமாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த காரணமே நீண்டநேர பணி என்று குறிப்பிட்டுள்ளனர்.

களைப்பினால் தவிப்பு

மேலும் அந்த ஆய்வில், தாம்பத்யத்தை தவிர்ப்பதற்கு களைப்பு மட்டும் காரணமாக அமையவில்லை. உடல் பலவீனமும் ஒத்துழையாமை இயக்கத்துடன் சேர்ந்து கொள்கிறது. குறிப்பாக 7 சதவீதம் பேர் தாங்கள் தினமும் சோர்வான நிலையில் உள்ளதாக கூறுகின்றனர். 39 சதவீதம் பேர் களைப்பின் மிகுதியால் ஏதோ ஒன்றை மறக்க முயல்கின்றனர். 38 சதவீதம் பேர் தங்களது துணையுடன் இரவு பொழுதை கழிப்பதை தவிர்த்து உறங்க சென்று விடுகின்றனர்.

பெரும்பான்மையான தம்பதிகள் இரவு 10 மணி கடந்து விட்டால் தூங்க சென்று விடுகின்றனர். கால்வாசி பேர் இரவு 9 மணி கடந்து விட்டாலே தாம்பத்யத்திற்கு மறுப்பு தெரிவித்து விடுகின்றனர். 10ல் 6 பேர், தாம்பத்யத்திற்கு என நேரம் ஒதுக்க வேண்டும். குறைந்தது அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என கூறி தங்களை தேற்றி கொள்கின்றனர்.

ஆற்றலை பெருக்கும் பானம்

எனவே இதிலிருந்து விடுபட்டு தங்களது ஆற்றல் அளவை பெருக்கிக்கொள்ள 40 சதவீதம் பேர் டீ அல்லது காபி அருந்துகின்றனர். ஒரு பிரிவினர் உடற்பயிற்சி செய்து தங்களை தூக்கத்தில் இருந்து விடுவித்து கொள்ள முயல்கின்றனர். 21 சதவீதம் பேர் சாக்லேட் போன்ற இனிப்புகளை எடுத்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

சோர்வையும், மனஅழுத்தத்தையும் போக்கும் மாமருந்தாக தாம்பத்ய உறவை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால் அந்த சோர்வை தாம்பத்ய உறவுக்கு இடையூராக மாறியுள்ளது என்பது விநோதமான உண்மை.

English summary
The causes of sexual problems are as varied and complex as the human race. Some problems stem from a simple, reversible physical problem. Others can stem from more serious medical conditions, difficult life situations, or emotional problems. Still others have a combination of causes. Any of the following can contribute to sexual problems
Story first published: Wednesday, September 21, 2011, 16:45 [IST]

Get Notifications from Tamil Indiansutras