•  

அரை மணி நேரம் 'ஜாலி'-250 கலோரி 'காலி'!

Sex
 
வியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி செய்வதோ, டிரெட்மில்களில் ஏறி கால் வலிக்க வலிக்க ஓடுவதோ தேவையே இல்லை. உங்களது உடலில் கூடிப் போய் விட்ட கூடுதல் எடையைக் குறைக்க தினசரி ஒரு அரை மணி நேரத்தை ஒதுக்கினால் போதும்- செக்ஸ் உறவுக்காக.

'எக்சர்ஸைஸை' விட 'செக்ஸர்ஸைஸ்' சிறந்த உடற் பயிற்சி என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், உடல் எடையைக் குறைக்க உடல் உறவே சிறந்த வழி என்ற எண்ணம் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் இருக்கிறதாம். நாள் முழுக்க கடுமையான வேலை பார்த்து விட்டு வந்தாலும் இரவில் உறவு கொள்வதற்கு பெண்கள் மனதளவிலும், உடல் அளவிலும் தயாராக இருக்கிறார்களாம்- அது உடல் எடையைக் குறைத்து, மனதையும், உடலையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும் என்பதால்.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட 76 சதவீத பெண்கள், உடல் எடைக் குறைப்புக்கு செக்ஸர்ஸைஸ் சிறந்த வழி என்று கருதுகிறார்களாம்.

மூன்றில் இரண்டு பங்குப் பெண்கள், ஜிம்முக்குப் போய் உடற் பயிற்சி செய்வதை விட சிறந்தது செக்ஸ் உறவு என்று கருத்து தெரிவித்துள்ளனர். இதற்காக தினசரி செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளவும் தாங்கள் தயார் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

கெர்ரி மெக்லோஸ்கி என்பவர் எழுதியுள்ள 'The Ultimate Sex Diet' என்ற புத்தகத்தில், அரை மணி நேர உடல் உறவின் மூலம் 150 முதல் 250 கலோரிகள் வரைக் குறைவதாக கூறியுள்ளார். உறவில் ஈடுபடுவோரின் செயல்பாடுகளைப் பொறுத்து சில நேரங்களில் இது 350 கலோரிகள் வரை கூட கூடுகிறதாம்.

முத்தமிடுவதன் மூலம் 200 கலோரிகள் வரை குறைகிறது என்ற தகவலையும் கெர்ரி தெரிவித்துள்ளார்.

எந்த ஜிம்முக்கும் போகாமலேயே இயற்கையான முறையிலேயே நமது உடல் எடையைக் குறைத்து நம்மை டிரிம்மாக வைத்துக் கொள்ள முடியும். செக்ஸ் என்பது உடல் ரீதியான இன்பத்துக்கு மட்டும் நமக்கு உதவுவதில்லை. மாறாக நம்மை புத்துணர்ச்சியுடனும், இளமையுடனும், வைத்துக் கொள்ள பேருதவி புரிகிறது. எனவே செக்ஸ் என்பதை உடல் மகிழ்ச்சிக்கான விஷயமாக மட்டும் கருதாமல் அதை பல விதங்களிலும் நமக்கு உதவும் ஆசானாக கருதி அணுகினால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும் என்பதில் சந்தேகமில்லை என்பது கெர்ரியின் கருத்து.

English summary
Hitting gyms and running on treadmills is not necessary to burn extra calories in your body. Half an hour 'sexercise' is enough to reduce 250-360 calories, a study says. The study has also revealed that, women are more inclined to have sex after a long day if they think it will help them lose weight. Simply kissing for an hour burns over 200 calories, the study says.
Story first published: Friday, July 29, 2011, 13:26 [IST]

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more