டென்ஷன் திங்கள்!
திங்கட்கிழமை என்பது உலகம் முழுவதுமே டென்சன் ஏற்படுத்தும் தினமாகவே உள்ளது. விடுமுறை முடிந்து வேலைக்கு செல்வோரும் சரி, பள்ளி கல்லூரிக்குக் செல்வோரும் சரி அனைவருக்குமே திங்கட்கிழமை என்பது படபடப்பான நாளாக இருப்பதாகவே தெரிவித்துள்ளனர். எனவே திங்கட்கிழமையை மன அமைதியை ஏற்படுத்தும் நாளாக மாற்றிக்கொள்ளவேண்டும் என்பது ஆய்வாளர்களின் அறிவுரை.
'பிளானிங்' செவ்வாய்
வீடோ, அலுவலகமோ எதுவென்றாலும் திட்டமிட ஏற்றநாள் செவ்வாய்க்கிழமை உகந்தநாள் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். திங்கட்கிழமையின் டென்சன் முடிந்து வழக்கமான பணிக்கு திரும்பியிருப்பார்கள் எனவே செய்ய வேண்டிய காரியங்களை திட்டமிட்டுக்கொள்ளலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். மேலும் வாரத்தின் தொடக்கம் என்பதால் நமது மூளையின் இடப்பக்க இயக்கச் செயல்பாட்டின் ஆதிக்கம் அதிகம் இருக்கும். எனவே வழக்கமான பணிகளை செய்வதற்கு செவ்வாய்க்கிழமை உகந்த நாள் என்றும் தெரிவிக்கிறது “ தொழிலாக மற்றும் மனோதத்துவ ஆராய்ச்சி முடிவு"
'காதல்' புதன்
முதன்முதலாக காதலைச்சொல்ல புதன்கிழமை உகந்த நாள் என்று தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள். காதலர்கள் சந்தித்துக்கொள்ளவும் முதல் டேட்டிங்கிற்கும் சம்மதம் பெறவும் ஏற்றநாள் புதன்தான் சிறந்தநாள் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்த ஆய்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த 8 ஆயிரம் பேரில் 40 சதவிகிதத்தினர் காதல் செய்வதற்கு உகந்தநாளாக புதன்கிழமையையே தேர்வு செய்துள்ளனர்.
இவையெல்லாவற்றையும் விட அலுவலகத்தில் புரமோஷன் அல்லது சம்பள உயர்வு குறித்து மேலதிகாரியிடம் பேச புதன்கிழமைதான் "பெஸ்ட் சாய்ஸ்" என்று அடித்துக்கூறுகின்றனர் ஆய்வாளர்கள். வாரத்தின் நடுப்பகுதி என்பதால்,மேலதிகாரிகள் அல்லது முதலாளிகள் டென்ஷன் குறைந்து காணப்படுவார்கள் என்பதால், நமது கோரிக்கைக்கு சாதகமாக பலன் கிடைக்கும் என்கிறது லண்டனில் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பல ஆராய்ச்சிகளின் முடிவுகள்.
'உறவுக்கு' வியாழன்
உறவு கொள்ள ஏற்றநாள் வியாழக்கிழமை என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'டேட்டிங்' வெள்ளி-'பீச்'சுக்கு சனி
வெள்ளிக்கிழமை மாலை அல்லது சனிக்கிழமை தங்களது காதலன் அல்லது காதலியை சந்திக்கலாம் அல்லது டேட்டிங்-குறைந்தபட்சம் பீச் அல்லது சினிமாவுக்காவது போகலாம் என்பதை முடிவு செய்துகொள்ள இரண்டு,மூன்று நாட்கள் அவகாசம் இருப்பதால், அநாவசிய மனமுறிவு ஏற்படாது என்றும் ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'ரிலாக்ஸ்' ஞாயிறு
ஞாயிற்றுக்கிழமை ரிலாக்ஸ் செய்ய ஏற்ற நாள் என்றும் கூறப்பட்டுள்ளது. என்ன, காதலைச் சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் எல்லாம் இப்போதே புதன்கிழமை எப்பொழுது வரும் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டீர்களா?.