•  

உறவுகளில் விரிசலை ஏற்படுத்தும் மன உளைச்சல்

Depression Affects Relationships
 
மன உளைச்சல் என்ற வார்த்தை இப்போது அனைவராலும் அடிக்கடி பயன்படுத்தப்படும் வார்த்தையாகிவிட்டது. பணியிடங்களில் ஏற்படும் நெருக்கடி, உடல்ரீதியாக ஏற்படும் பிரச்சினைகள் உள்ளிட்ட காரணங்களினால் மன உளைச்சல் அல்லது மன அழுத்தம் ஏற்படுவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இந்த மன அழுத்தம் தாம்பத்ய உறவையும் பாதிக்கின்றது என்று தெரிவிக்கிறது அந்த ஆராய்ச்சி முடிவு.

தாம்பத்யத்தின் போது கணவன் மனைவி இருவரும் ஒரே மனநிலையில் இருக்க வேண்டும். களைப்பு மற்றும் மன அழுத்தத்தில் கணவன் இருக்கும் போது மனைவி உறவில் ஈடுபடும் மனநிலையில் இருந்தாலோ, மனைவிக்கு இஷ்டமில்லாத சமயத்தில் கணவன் உறவுக்கு அழைத்தாலோ அது சிறப்பானதல்ல என்கின்றனர் நிபுணர்கள்.

இனப்பெருக்கத்தை தடுக்கும்

மன உளைச்சலுக்கு காரணமான ஹார்மோன் அட்ரீனலின் சுரப்பியில் சுரக்கிறது. இது விரைவாக செயல்பட்டு மூளையில் சுரக்கும் இனப்பெருக்க ஹார்மோனை தடை செய்கிறது. அதுமட்டுமல்லாமல் இனப்பெருக்கத்திற்கு முட்டுக்கட்டை போடும் ஹார்மோனையும் சுரக்கச் செய்வதாக கூறி அதிர்ச்சியடைய வைக்கிறது அந்த ஆராய்ச்சி.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள்தான் இதனை கண்டுபிடித்துள்ளனர். மன அழுத்தம் மூலம் சுரக்கும் இனப்பெருக்கத் தடை ஹார்மோன், பிட்யூட்டரி சுரப்பியில் தாக்கத்தை ஏற்படுத்தி ஆணிடம் சுரக்கும் டெஸ்ரோஸ்டிரான் மற்றும் பெண்ணின் ஓவரிகளில் சுரக்கும் ஈஸ்ரோஜன் அளவினையும் கட்டுப்படுத்துகிறது. இதன் விளைவாக,. விந்தணுக்களின் எண்ணிக்கை குறைகிறது. அண்டம் வெளியிடுதல் பாதிப்படைகிறது. இனப்பெருக்க ஈடுபாடும் குறைந்து போகிறது. இதனால் கருத்தரிப்பதற்கான சிகிச்சைக்கு உள்ளாபவர்களுக்கு மன உளைச்சல் அதிகரிக்கிறது.

மிருகங்களுக்கும் மனஉளைச்சல்

2000 மாவது ஆண்டில்தான் இந்த இனப்பெருக்கத்தடை ஹார்மோன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பறவைகளில் மட்டுமே காணப்பட்ட இந்த ஹார்மோன் தற்போது பாலுட்டிகளிடமும், மனிதர்களிடமும் சுரப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அடைத்துவைத்து வளர்க்கப்படும் மிருகங்களுக்குக்கூட மன உளைச்சல் ஏற்பட்டு அவற்றின் இனப்பெருக்கம் குறையும் வாய்ப்பு உள்ளது.

மன உளைச்சல் ஏற்படும் சமயங்களில் இனப்பெருக்கச் செயல்களில் ஈடுபடுவது பயனற்றது என்று இந்த ஆய்வாளர்களில் ஒருவர் கருத்து தெரிவிக்கிறார்.

இது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. ஏனெனில் 'வறுமையினால் ஏற்படும் மன உளைச்சலுக்கு மருந்தாகத்தான் இனப்பெருக்கச் செயல்களில் இந்தியர்கள் ஈடுபட்டு மக்கள்தொகையை அதிகரிக்கிறார்கள்' என்பது மக்கள்தொகைப் பெருக்கத்தை ஆராயும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்

மனதில் உற்சாகம் நீடிக்கும்

திருமணம் ஆன புதுத் தம்பதிகளை ஹனிமூன் அனுப்பி வைப்பதே இருவரும், வேறு எந்த சூழ்நிலையையும் யோசிக்காமல், மனம் மகிழ ஒரே சிந்தனையில் புணர்ச்சி கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான்.

உறவு கொள்வதற்கு முன் மேற்கொள்ளப்படும் கிளர்ச்சி தூண்டல் மிகவும் முக்கியப் பங்காற்றுகிறது. எனவே புணர்ச்சியின் போது, அவசரத்தை கடைபிடித்தல் தேவையற்றது. தவிர, திருமணமாகி ஒரு சில ஆண்டுகளுக்குப் பின் பல்வேறு காரணங்களால் இருபாலருக்குமே தாம்பத்ய உறவில் நாட்டம் விட்டுப்போவது சகஜம்தான். அதுபோன்ற நிலையில், குறிப்பிட்ட இடைவெளியில், அவரவர் சூழ்நிலைக்கேற்ப, அவ்வப்போது உறவில் ஈடுபடுவது மனதில் உற்சாகத்தை நீடிக்கச்செய்யும்.

English summary
Depression adversely affects every aspect of our lives – including our relationships – and when one partner is depressed, the relationship may suffer badly. This is a great shame because a good relationship is very therapeutic for somebody with depression. When we're low we need love, support and closeness more than ever – even if we're not good at showing it.
Story first published: Monday, June 27, 2011, 10:04 [IST]

Get Notifications from Tamil Indiansutras