•  

காதலியுடன் உறவு கொண்டபோது வேறு பெண்ணின் பெயரைச் சொல்லி வழக்கில் சிக்கிய நியூசிலாந்துக்காரர்

Sex
 
வெல்லிங்டன்: தன்னுடன் உறவு கொண்டிருந்தபோது, உற்சாகத்தில் வேறு ஒரு பெண்ணின் பெயரை உரக்கச் சொல்லி சத்தம் போட்ட நபரை கோர்ட்டுக்கு இழுத்து விட்டார் அந்த நபரின் முன்னாள் காதலி.

வெல்லிங்டனைச் சேர்ந்த அந்த 30 வயது நபர், தனது முன்னாள் காதலியை (இவர் மூலம் அந்த நபருக்கு 2 குழந்தைகள் உள்ளன) கடந்த ஆண்டு இருவரும் எதைச்சையாக ஒரு ஹோட்டலில் சந்தித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் நட்பு பூத்தது. இதையடுத்து இருவரும் உறவுக்குள் புகுந்தனர். அப்போது உற்சாக மிகுதியில் அந்த நபர், வேறு ஒரு பெண்ணின் பெயரைச் சத்தமாக சொல்லியுள்ளார். இதைக் கேட்டு முன்னாள் காதலி கடுப்பாகி விட்டார்.

இந்த சம்பவம் குறித்து தற்போது அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கோர்ட்டில் நீதிபதியிடம் கூறுகையில், எனக்கு இயல்பிலேயே பொறாமை குணம் அதிகம். சம்பவத்தன்று நான் அவருடன் உறவில் இருந்தபோது, அவர் வேறு ஒரு பெண்ணின் பெயரைச் சொல்லி கூப்பிட்டதால் நான் கோபமாகி விட்டேன் என்று கூறியுள்ளார்.

ஆனால் இவர் ஏற்கனவே போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்திற்கும், இதற்கும் நிறைய முரண்பாடுகள் உள்ளன. முதலில் அவர் போலீஸாரிடம் கூறுகையில், தன்னைக் கட்டாயப்படுத்தி தன்னுடன் தனது முன்னாள் காதலர் உறவு வைத்துக் கொண்டதாக கூறியுள்ளார். ஆனால் தனது உறவினர்களிடம் கற்பழித்ததாகவும், தாக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். ஆனால் கோர்ட்டில் கூறுகையில், வேறு ஒரு பெண்ணின் பெயரைச் சொன்னதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் அப்பெண்ணின் புகார்கள் அனைத்தும் பொய்யானவை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் மறுத்துள்ளார். கோர்ட் வழக்கை தொடர்ந்து விசாரித்து வருகிறது.English summary
A New Zealand man faces a legal suit for allegedly crying out another woman's name while making love with his ex-partner. The complainant told the court that the 30-year-old man, who is also the father of her children, called out another woman's name while having sex after a Saturday night party last year. Describing their love-making session in the court, she said the man called out another woman's name - "the one that was at the party" - and she got angry. The accused has denied charges against him.
Story first published: Friday, February 4, 2011, 11:28 [IST]

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more