•  

கனவைக் கலைக்க 'கலப்போம்'!

Daydreaming
 
கனவுகள். மனிதர்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு அங்கம். கனவு ஏன் வருகிறது, எப்படி வருகிறது என்பது இதுவரை அறிவியல் பூர்வமாக கண்டுபிடிக்கப்படவில்லை. நமது மனதில் தங்கிப் போகும் விஷயங்கள்தான் கனவாக வருகிறது என்பது மட்டுமே இதுவரை நிரூபிக்கப்பட்ட ஒன்று. இருந்தாலும் கனவுக்கு இதுதான் காரணம் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

அதேபோல கனவுகள் பலிப்பதில்லை என்பதும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. இருந்தாலும் ஜோதிடர்கள் சும்மா இருக்காமல், அதிகாலைக் கனவு பலிக்கும். பகல் கனவு பலிக்காது. இந்த மாதிரி கனவு கண்டால் இன்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று புத்தகம் புத்தகமாக எழுதிக் கொண்டே இருக்கிறார்கள்.

இதில் பகல் கனவைத் தடுக்க ஒரு நூதன மருந்தை சொல்லியிருக்கிறார்கள் ஆய்வாளர்கள். அது - செக்ஸ். செக்ஸ் உறவை தொடர்ந்தால் பகல் கனவுகளைத் தடுக்க முடியுமாம்.

ஏதாவது மும்முரமாக ஒரு வேலையைப் பார்த்துக் கொண்டிருப்போம். அப்படியே நம்மையும் அறியாமல் கற்பனை உலகில் சஞ்சரிக்க ஆரம்பித்து பகல் கனவில் மூழ்கி விடுவோம். இது உடலுக்கு கேடு என்பது அறிவியலாளர்களின் கருத்தாகும். இதைத் தடுக்கத்தான் இப்போது செக்ஸ் என்ற மருந்தை அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

அனைவருக்குமே பகல் கனவு வந்து போவதுண்டு. அடிக்கடி வராவிட்டாலும் கூட அவ்வப்போது ஒவ்வொருவரையும் தொட்டுச் செல்வதுண்டு இந்த பகல் கனவு. சிலருக்கு பல் விளக்கும்போது, எதையாவது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்போது என்று இந்த சந்தர்ப்பத்தில்தான் என்றில்லாமல் வரும். மனம் அலை பாய்வதால் வருவதுதான் இந்த பகல் கனவுகள்.

இப்படிப்பட்ட மனம் அலைபாய்தல் என்பது செக்ஸ் உறவின்போது மட்டும் மிக மிக குறைவாக இருக்குமாம். இதனால்தான் மனம் அலை பாய்கிறதா, பகல் கனவில் மூழ்க ஆரம்பிக்கிறீர்களா, உடனே செக்ஸை நாடுங்கள் என்கிறது இந்த ஆய்வு.

செக்ஸ் உறவில் ஈடுபடும்போது மனம் அலை பாய்வது, வழக்கமான சமயத்தை விட 30 சதவீதம் வரை குறையுமாம்.

இதுகுறித்து கலிபோர்னியா பல்கலைக்கழ பேராசிரியர் ஜோனதன் ஸ்மால்வுட் கூறுகையில், பகல் கனவுக்குக் காரணம் மனம் அலை பாய்வதுதான். அதற்கும், எதிர்மறையான எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. எனவே பகல் கனவு என்பது நமது உடலுக்கு மட்டுமல்லாமல், மனதுக்கும் கூட தேவையற்றதாகும். ஆபத்தானதாகும்.

மனம் அலை பாய்வதைத் தடுக்க ஒரே வழி செக்ஸ் உறவுதான் என்று சொல்ல வரவில்லை. ஆனால் செக்ஸ் உறவின்போது மனம் அலை பாய்வது என்பது வெகுவாக குறையும். இதன் மூலம் மனம் அலை பாயும் பிரச்சினையை படிப்படியாக குறைக்க முடியும்.

ஒரு வேளை நமது மனம் அலை பாய ஆரம்பிக்கும்போது செக்ஸ் குறித்த சிந்தனைக்கு நம்மை மாற்றிக் கொண்டால் அந்தப் பிரச்சினையிலிருந்து விடுபட முடியும். இருப்பினும் சிந்தனையை விட செயலுக்கு அதிக மதிப்பு உண்டு என்பதால், செக்ஸ் குறித்த சிந்தனைகளை விட அதில் நேரடியாக ஈடுபடுவது நல்லது என்கிறார் ஸ்மால்வுட்.

கனவு காண்பது நல்லதுதான். அதேசமயம், பகல் கனவால் பலன் இல்லை என்கிறபோது 'மருந்தை' சாப்பிட்டு குணப்படுத்த முயற்சிக்கலாமே....!

English summary
We often find ourselves drifting away while at work or studying but experts have said that it's bad for health – and now the best way to avoid daydreaming is to make love, it seems. Mind-wandering turns out to be extremely common – users reported daydreaming almost 50 per cent of the time – mostly during brushing their teeth or doing other grooming, reports New Scientist. During only one activity – making love – did the frequency of mind-wandering drop below 30 per cent.
Story first published: Thursday, January 20, 2011, 16:47 [IST]

Get Notifications from Tamil Indiansutras