•  

ஆசை அதிகரிக்கும் மெனோபாஸ்!

Menopause
 
40 வயதுகளைத் தொட்டிருக்கும் பெண்களுக்கு பெரும் மனக் கவலையைத் தருவது மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நிற்கும் காலம்தான்.

இதற்கு மேல் என்ன இருக்கிறது, எல்லாம் முடிந்து விட்டது என்ற அலுப்பும், சலிப்பும், கவலையும் மெனோபாஸ் கட்டத்தை எதிர்நோக்கும் பல பெண்களுக்கு உள்ளது. முன்பு இந்தக் கவலை எல்லாப் பெண்களுக்குமே இருந்தது. ஆனால் இப்போது காலம் மாறி விட்டதால் இந்தக் கவலையிலிருந்து பல பெண்கள் மீண்டு விட்டார்கள். இருந்தாலும் இன்னும் பல பெண்களுக்கு இந்தக் கவலை இருப்பது நிஜம்.

ஆனால் மெனோபாஸ் காலத்திலும் சந்தோஷமாக இருக்க முடியும், செக்ஸ் வாழ்க்கையை நிம்மதியாக, இன்னும் சொல்லப் போனால் முன்பை விட உற்சாகமாக, சுதந்திரமாக அனுபவிக்க முடியும் என்பது மருத்துவர்களின் கூற்று.

மாதவிடாய் வந்து கொண்டிருக்கும் காலங்களில்தான் பெண்களுக்கு ஏகப்பட்ட கவலைகள்-கருத்தரித்து விடுமோ என்ற பயம் உள்பட இருக்கும். ஆனால் மெனோபாஸ் காலத்தை அடைந்தவர்களுக்கு அந்தக் கவலைகள் சுத்தமாக இருக்காது என்பதால் இந்த காலகட்டத்தில்தான் செக்ஸ் வாழ்க்கையை மிக சுதந்திரமாக,விரும்பியபடி அனுபவிக்க முடியும் என்கிறார்கள் டாக்டர்கள். அதை விட முக்கியமாக மெனோபாஸ் காலத்தில்தான் செக்ஸ் ஆசையும் அதிகமாக இருக்குமாம்.

மெனோபாஸ் காலத்தில், செக்ஸ் ரீதியான திருப்தியை விட துணைவர்களின் ஆதரவு குறித்த கவலைதான் பெண்களுக்கு அதிகம் இருக்கிறதாம். நம்மை இனி கணவர் கண்டு கொள்ளமாட்டாரோ, வயதாகி விட்டது என்பதற்காக புறக்கணித்து விடுவாரோ என்ற அச்சம் பெண்களுக்கு நிறையவே வருகிறதாம்.

ஆனால் இத்தகைய கவலைகள் தேவையில்லை. மெனோபாஸ் காலத்தில்தான் கணவர்களை அதிகமாக ஈர்க்க முடியும் பெண்களால் என்கிறது ஒரு ஆய்வு.

இதுகுறித்து ஒரு மருத்துவர் கூறுகையில், மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு செக்ஸ் உணர்வுகளை உருவாக்கும் ஹார்மோன் சுரப்பு குறைந்து விடும் என்பது பொதுவான எண்ணமாக இருந்து வருகிறது. ஆனால் உண்மையில் இந்த சுரப்பு மெனோபாஸ் காலகட்டத்திலும் சிறப்பாகவே இருக்கும் என்பதை ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் வழக்கம் போல பெண்களால் மெனோபாஸ் காலத்திலும் கூட சிறப்பான செக்ஸ் உணர்வை அடைய முடியும், செக்ஸை அனுபவிக்க முடியும்.

பல பெண்களுக்கு மெனோபாஸுக்கு முன்பு இருந்ததை விட மெனோபாஸ் காலத்தில்தான் செக்ஸ் உறவு சீராகவும், சிறப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் இருப்பதாக தெரிவித்துள்ளனர். முன்பை விட இப்போதுதான் ஆசை அதிகமாக உள்ளது என்பது பல பெண்களின் கருத்தாகும் என்கிறார்.

எனவே வயதாகி விட்டதே என்று கவலைப்படுவதை விட்டு விட்டு, தொடர்ந்து வழக்கம் போல இயங்கலாம் இந்த மெனோபாஸ் காலத்திலும். இதை பெண்கள், தங்களது கணவர்களுக்கும் புரிய வைத்தால், அதன் பிறகு வரும் காலம் நிச்சயம் சந்தோஷமாகவே கழியும் என்பதில் சந்தேகம் இல்லை.

English summary
Women"s experience of sexual activity during menopause differs greatly between individuals, says a new study. New research from the University of Sheffield says that external factors such as providing care for a relative, partner"s low sexual desire and the quality of the relationship were more important than hormonal changes in determining sexual satisfaction during menopause. Biological research tends to report the negative impact of declining hormone levels on women"s ability to engage in and enjoy sexual activities, whereas our study found that some women actually saw an increase in sexual desire during this time.
Story first published: Friday, December 17, 2010, 17:01 [IST]

Get Notifications from Tamil Indiansutras