இதுகுறித்து ஆஸ்திரேலிய மகளிர் பத்திரிக்கை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,ஆண்களும் சரி, பெண்களும் சரி, திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். செக்ஸ் தொடர்பான நியதிகளை அவர்கள் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும்.
உறவு தவிர்க்க முடியாதது என்ற நிலை ஏற்பட்டாலும் கூட கர்ப்பம் தரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே கருத்தடை முறைகளை நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும். அதேசமயம், பெண்கள் தங்களது கன்னித்தன்மையை திருமணமாகும் வரை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
எனது மகள்கள் திருமணமாகும் வரை கன்னித்தன்மையுடன் இருப்பார்களா என்பதை நான் சொல்ல முடியாது. அதேசமயம், தங்களது கன்னித்தன்மையை அவர்கள் பாதுகாக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அது அவர்களுக்குக் கிடைத்த அருமையான பரிசு, அதை எளிதில் அவர்கள் விட்டுக் கொடுத்து விடக் கூடாது.
திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்ளக் கூடாது என்று நான் கூற முடியாதுதான். அதற்கான ரோல் மாடலாக நான் இல்லை என்பதும் உண்மைதான். இருந்தாலும் நான் சொல்ல விரும்புவது, ஏன் கோரிக்கையாகவே சொல்கிறேன், கன்னித்தன்மை என்பது மிகப் பெரிய விஷயம், அருமையான பரிசு. கடவுள் கொடுத்த பரிசு. அதை நாம் இழக்காதவை நமது தன்னம்பிக்கையும், கெளரவமும் அசைக்க முடியாததாக இருக்கும் என்று கூறியுள்ளார் அப்பாட்.
இப்படிப் பேசும் அப்பாட் அந்தக் காலத்தில் பயங்கர சாதனை படைத்தவர். 25 ஆண்டுகளுக்கு முன்பு அவர் தன்னுடன் படித்த பல்கலைக்ககழக மாணவியுடன் உறவு கொண்டு அவர் மூலம் ஒரு ஆண் குழந்தைக்குத் தந்தையானவர். இது பர காலமாக வெளியில் வராமலேயே இருந்தது. சமீபத்தில்தான் மகன், தனது தந்தை அப்பாட் என்று கூறி அனைவரையும் வியப்படைய வைத்தார்.
இந்த அனுபவத்தை வைத்துதான் இப்படி அறிவுரை கூறியுள்ளார் அப்பாட் என்று கூறப்படுகிறது.