•  

3,323 ஆண்கள், 2,161 பெண்களுக்கு செக்ஸ் பாடம் நடத்திய ஜோடி!

Couple
 
செக்ஸ் ஆலோசனை என்ற பெயரில் 3323 ஆண்களுடன் செக்ஸ் வைத்துக் கொண்டுள்ளார் ஒரு பெண். அவரது 'விங்டுகெதர் பார்ட்னரோ' 2161 பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டுள்ளார்.

இந்த புள்ளி விவரத்தை அவர்களே பத்திரிகைகளுக்கு பெருமையுடன் தெரிவித்தனர்.

இங்கிலாந்தை சேர்ந்தவர் ஜெஃப் டேனியல்ஸ் (40). இவருடைய காதலி சாரா மூர் (39). இருவரும் திருமணமாகாமல், லிவிங்டுகெதர் ஸ்டைலில் சேர்ந்து வசிக்கிறார்கள்.

இவர்களுக்கு தொழிலே, செக்ஸ் வாழ்க்கையில் திருப்தி இல்லாதவர்களைத் திருப்திப்படுத்துவது.

யாருக்கெல்லாம் செக்ஸில் திருப்தி கிடைக்கவில்லையோ, அவர்கள் இந்த தம்பதிகளிடம் வந்தால் போதும், திருப்திப்படுத்தி அனுப்பி வைப்பார்களாம்.

முதலில் செக்ஸ் மஸாஜிலிருந்து ஆரம்பிக்கிறார்களாம் தங்களது போதனையை. படிப்படியாக உணர்வைத் தூண்டி இறுதியில் செக்ஸ் வைத்துக் கொள்வது இவர்கள் இருவரின் ஸ்டைல். தங்களை நாடி வந்தவர்களுக்கு திருப்தி ஏற்பட்ட பிறகே திருப்பி அனுப்பி வைப்பார்களாம்.

இப்படி இதுவரை 3,323 ஆண்களை தான் திருப்திப்படுத்தியிருப்பதாக சாரா மூர் கூறுகிறார். டேணியல் கணக்கு 2,161 பெண்கள். சமயத்தில் ஜோடியாக உறவில் ஈடுபட்டதும் உண்டாம்.

இதுகுறித்து அவர்களிடம் கேட்டால், "இதிலென்ன தவறு இருக்கிறது... நாங்கள் செய்வது ஒரு சேவை, ஆராய்ச்சி. இதற்காக உலகம் முழுவதும் சுற்றி வருகிறோம். இந்த தொழில் செய்வதால் எங்களை விபச்சாரி என்றும் யாரும் நினைத்துவிட வேண்டாம். ஒரு செக்ஸாலஜிஸ்ட் கூட செய்யாத பணியை நாங்கள் செய்கிறோம். எனவே நாங்களும் டாக்டர்கள்தான்", என்றார்.

நியூயார்க் பல்கலைக்கழகத்தில் கவுன்சிலிங் படிப்பை படித்தபோதுதான் ஜெஃப்பை சந்தித்தாராம் சாரா மூர். இதுகுறித்து மூர் கூறுகையில், ஜெஃப்பை பார்த்தவுடன் காதல் கொண்டேன். அப்போது எனக்கு வயது 20. அன்று முதல் இருவரும் இணைந்தே இருக்கிறோம்.

நான் 15 வயதில் எனது கன்னித் தன்மையை இழந்தேன். அன்றே செக்ஸ் எனது வாழ்க்கையில் மிகப் பெரிய பங்காற்றும் என்பதை உணர்ந்தேன் என்கிறார்.

இந்தத் தம்பதிகளிடம் செக்ஸ் பிரச்சினை உள்ளவர்களை பல நேரங்களில் டாக்டர்களே அனுப்பி வைக்கிறார்களாம்.

Story first published: Saturday, December 4, 2010, 16:46 [IST]

Get Notifications from Tamil Indiansutras