முன்கூட்டியே விந்தனு வெளியேறுவது ஒரு பிரச்சினை என்றால் விந்தனு வருவதற்கு தாமதமாகும் பிரச்சினையும் ஆண்களை பெரும் வாட்டத்தில் ஆழ்த்தும் இன்னொரு பிரச்சினையாகும்.
வி்ந்தனு முன்கூட்டியே வெளியாவதற்கு Premature Ejaculation என்று பெயர். அதேபோல தாமதமாவதற்கு Delayed Ejaculation என்று பெயர். உடலுறவின்போதோ அல்லது சுய இன்பம் செய்யும்போதோ விந்தனு வெளியேறுவதில் தாமதம், அல்லது வெளியேறாமல் இருப்பது போன்றவைதான் இந்த தாமதமான விந்தனு வெளியேறுதலுக்கான அறிகுறிகள் ஆகும்.
உடலுறவில் ஈடுபடத் தொடங்கிய 2 அல்லது 4 நிமிடங்களுக்குள் விந்தனு வெளிப்பட்டால் அது இயல்பான நிலையாகும். அதைத் தாண்டி போகும்போது அது தாமதமான விந்தனு வெளிப்பாடு.
தாமதமான விந்தனு வெளிப்பாடு இருப்போரால் உடலுறவின்போது விந்தனு வெளியாவதில் சிக்கல் ஏற்படலாம் அல்லது சில நேரம் வெளியாகமலே கூட போகலாம். மிகுந்த சிரமத்திற்குப் பின்னரே அவர்களுக்கு விந்தனு வெளிப்படும். நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட்டால்தான் விந்தனு வரும்.
இந்த தாமதமான விந்தனு வெளிப்பாடுக்கு பல காரணங்கள் உள்ளன.
- செக்ஸ் வைத்துக் கொள்வது பாவம் அல்லது அது குறித்த பயம் அடி மனதில் பதிந்து போயிருந்தால் விந்தனு வெளிப்பாட்டில் சிக்கல் ஏற்படும்.
- மனைவி மீதான ஈர்ப்பு குறைந்து போயிருந்தால் அல்லது இல்லாமல் போனால் விந்தனு வெளியாகாது.
- சுய இன்பப் பழக்கம் மிக அதிகமாக இருந்தால் விந்தனு வெளிப்பாட்டில் பாதிப்பு ஏற்படலாம்.
- நீண்ட காலமாக சக்தி வாய்ந்த மருந்துகளை சாப்பிட்டு வருவோருக்கும் இந்தப் பிரச்சினை ஏற்படலாம்.
- நரம்பியல் பிரச்சினைகள், நோய்கள் இருந்தால் இப்பிரச்சினை வரலாம். குறிப்பாக பக்கவாதம், முதுகெலும்பு அல்லது முதுகில் ஏற்படும் பிரச்சினைகள்.
குறிப்பிட்ட நேரத்திற்குள் விந்தனு வெளிப்படாவிட்டால் தாமதமான விந்தனு பிரச்சினை இருப்பதாக தீர்மானிக்கலாம். இதை ஆணுறுப்பில் ஏற்படும் உணர்வுகளை வைத்தும் கூட எளிதாக அறிய முடியும். ஆணுறுப்பில் எந்தவிதமான உணர்ச்சியும் இல்லாமல் இருந்தால் தாமதமான விந்தனு வெளியேறும் பிரச்சினை இருப்பதை அறியலாம்.
ஒரு முறை கூட உடலுறவு கொள்ளாதவர்கள், சுய இன்பத் தூண்டுதல் ஏற்படாதவர்கள், உடலுறவில் ஆர்வம் இல்லாதவர்கள் உரிய மருத்துவர்களை அணுகி ஆலோசனையும், தேவையான சோதனைகளையும் செய்து கொள்வது நல்லது. காரணம், விந்தனு வெளியேறும் வாய்ப்பு இல்லாத காரணத்தால்தான் இவர்களுக்கு உடலுறவில் விருப்பம் இல்லாமை ஏற்படுகிறது.
சிலருக்கு இயல்பான உடலுறவின்போது விந்தனு வெளிப்படாது. அதேசமயம், சுய இன்பம் செய்யும்போது விந்தனு வெளிப்படும். அப்படிப்பட்டவர்களுக்கு செக்ஸ் தெரப்பி சிறந்தது.
தாமதமான விந்தனு குறைபாடு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது கணவன், மனைவி இருவரையும் நேரில் வைத்துதான் மருத்துவ ஆலோசனை வழங்கப்படும். இருவருக்கும் செக்ஸ் உறவு குறித்த அடிப்படை உண்மைகள் தெளிவாக்கப்படும். பின்னர் பிரச்சினைகளை அறிந்து, அதைக் களைவதற்கான யோசனைகள், சிகிச்சைகள் தரப்படும்.
இந்தப் பிரச்சினையை சரி செய்ய கணவன், மனைவி இருவரும் பதட்டமில்லாமல், செக்ஸ் உறவுக்குத் தயாராவதே சிறந்ததாகும். இருவரும் மனம் விட்டுப் பேச வேண்டும். இருவருக்குள்ளும் தயக்க நிலை ஏதாவது இருந்தால் அதை போக்க முயல வேண்டும். செக்ஸ் உறவின் போது ஏற்படும் பதட்டத்தைக் குறைத்து, இயல்பான நிலையில் ஈடுபட முயற்சித்தால் தாமதமான விந்தனு வெளிப்பாட்டை குறைக்கவும், போக்கவும் முடியும்.
செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள முடிவு செய்து விட்டால், அதற்குப் பல மணி நேரங்களுக்கு முன்பே அதுகுறித்த சிந்தனையிலேயே மூழ்கிப் போய் விடுவது நல்லது. அது நல்ல பலன் தரும். செக்ஸியான விஷயங்களைப் பற்றி அதிகம் யோசிப்பதும் பலன் தரும்.
தாமதமான வி்ந்தனு வெளிப்பாட்டு பிரச்சினையை நிச்சயம் முன்கூட்டியே தவிர்க்க முடியும். ஆரோக்கியமான செக்ஸ் சிந்தனைகளே இதற்குப் போதுமானது.
செக்ஸ் உறவு குறித்த தேவையற்ற பயம், தெளிவற்ற சிந்தனை உள்ளிட்டவற்றை நீக்கி, செக்ஸ் உறவு குறித்தும், ஆணுறுப்பின் குணாதிசயங்கள் குறித்தும், செக்ஸ் உறவின் மூலம் கிடைக்கும் இன்பங்கள் குறித்தும் ஆரோக்கியமான தகவல்களுடன் தயாராகி விட்டாலே இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியும்.