•  

நீங்க அவசரக்குடுக்கையா?

Sex
 
எந்தக் காரியத்திலும் அவசரப்படுவதோ, அதிவேகம் காட்டுவதோ கூடாது என்பார்கள் பெரியவர்கள். பதறிய காரியம் சிதறும் என்று பழமொழியே உண்டு. இது செக்ஸ் உறவுகளுக்கும் பொருந்தும்.

வாழை இலையை விரித்து, தண்ணீர் தெளித்து துடைத்து, ஒவ்வொரு காயாக வைத்து, சாதம் போட்டு சாம்பார் ஊற்றி, பிறகு ரசம், காரக் குழம்பு, மோர், தயிர், அப்பளம், வடை, பாயாசம் என்று சாப்பிட்டால் அது தனி சுகம்.

சாப்பாடும் வயிற்றுக்குள் பதமாக, இதமாக இறங்கும், சுவையும் நாவிலிருந்து அகல நெடு நேரமாகும். அதேசமயம், கவுண்டரில் போய் காசு கட்டி பில் வாங்கி, அதை இன்னொரு கவுண்டரில் போய் கொடுத்து, வெந்தும் வேகாமலும் தட்டில் போடப்படும் 'அன்னா சாம்பாரையும்', 'இட்லி வடா'வையும், காராபாத், பிசிபேளா பாத்களை கையில் ஏந்தியபடி, ரவுண்டு ரவுண்டாக போடப்பட்டுள்ள டேபிளில் இடம் பிடித்து (ரெண்டு பக்கமும் குண்டானவர்கள் சூழ்ந்து விட்டால் ரொம்ப சிரமம்), கால் கடுக்க நின்றபடி, வேகம் வேகமாக சாப்பிட்டு விட்டு அரக்கப் பறக்க ஓடுவதால் சாப்பிட்டது நிலைக்குமா, சாப்பாடுதான் செரிக்குமா.

செக்ஸ் உறவிலும் இந்த இரண்டு வகையும் உண்டு. சிலருக்கு ஆற அமர உறவு வைத்துக் கொள்வது பிடிக்கும். அதேசயம் சிலர் அவசரம் அவசரமாக முடித்துக் கொண்டு குறட்டை விட ஆரம்பிப்பதை பழக்கமாக வைத்துள்ளனர்.

ஆனால் இந்த 2வது வகை உறவுகள் இருவருக்குமே திருப்தி தருவதில்லை என்பது அனுபவம் கூறும் உண்மை.

கணவன், மனைவி என்ற உறவு பாஸ்ட் புட் போல அல்ல என்பது நிறையப் பேருக்குத் தெரிவதில்லை, புரிவதில்லை. கைக்கு எட்டிய தூரம் எல்லாம் இருந்தும் ஏன் இந்த வேகம், அவசரம் என்று யாரும் யோசிப்பதில்லை.

செக்ஸ் உறவில் ஈடுபடுவதை மிக மிக திட்டமிட்டு, அனுபவித்து ஈடுபடுவதே சாலச் சிறந்தது. நேரமின்மை, வீட்டுக்குள் நிலவும் கூட்ட நெரிசல் போன்ற பல காரணங்களால் கிடைக்கிற கேப்பில் உறவை முடித்துக் கொள்கிறார்கள் பலர்.

ஆனால் இதனால் எந்த லாபமும் இருப்பதில்லை. அது சரி, ஆனால் வசதி வாய்ப்பு வரும்போதுதானே எல்லாம் செய்ய முடிகிறது என்று அலுத்துக் கொள்ள வேண்டாம். வாய்ப்புகளையும், வசதிகளையும் நீங்கள்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

இந்த விஷயத்தில் டைம் மேனேஜ்மென்ட் மிக மிக முக்கியம்.

வீட்டில் குழந்தைகள் வளர்ந்து விட்டனரா, பெரியவர்கள் கூடவே உள்ளனரா, அடிக்கடி உறவினர்கள், நண்பர்கள் வருகை இருக்கிறதா. இதையும் தாண்டி உங்களது உறவை புனிதமாக்கவும், மகிழ்ச்சிகரமாக்கவும் பல வழிகள் உள்ளன.

இரவு நேரங்களை முறையாக திட்டமிடுங்கள். சீக்கிரமே சாப்பிட்டு தூங்கப் போவது ஒரு உத்தமமான வழி. இரவு 9 மணிக்கு மேல் குழந்தைகளை விழித்திருக்க அனுமதிக்காமல் லாவகமாக தடுக்க முயலுங்கள். இதன் மூலம் அவர்கள் விரைவாக தூங்கி விடுவார்கள், உங்களுக்கான நேரம் கை கூடி வரும்.

கூட்டுக் குடித்தனம் இருப்பவர்கள், பெரியவர்களால் சில சங்கடங்களை சந்திக்க நேரிடும். வீட்டில் கூடுதலாக ஒரு அறை இருப்பது போல பார்த்துக் கொள்வது நலம். அப்படி செய்வதன் மூலம் அவர்களுக்கு தனி அறையை ஒதுக்கிக் கொடுத்து அவர்களை நிம்மதியாக இருக்கச் செய்வதோடு நீங்களும் உங்களது பிரைவசியை இழக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.

அல்லது, அவ்வப்போது அவர்களை ஆன்மீக பயணத்திற்கோ அல்லது உற்றார், உறவினர்களின் இல்லங்களுக்கோ அனுப்பி வைப்பதன் மூலம் அவர்களுக்கும் ஒரு மன மாறுதல், மன உற்சாகம் கிடைக்க வழிசெய்யலாம். நீங்களும் உங்களது உல்லாசத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம். அதற்காக, உங்களது வசதிக்காக அவர்களை சிரமப்படுத்தும் அளவுக்கு போய் விடக் கூடாது. அது தவறு.

நண்பர்கள், உற்றார், உறவினர்களின் வருகை அடிக்கடி இருந்தாலும் நீண்டநேரம் வீட்டில் டேரா போடும் அளவுக்கு அதை அனுமதிக்காமல் லாவகமாக தடுப்பது நலம்.

இப்படி சின்னச் சின்னதாக யோசித்து ஒவ்வொன்றையும் முறைப்படுத்தினாலே உங்களுக்கான நேரம் கிடைத்து விடும். அந்தநேரத்தில் உங்களது உல்லாசத்தை வைத்துக் கொள்ளும்போது அதில் மன மகிழ்ச்சியுடன், உடல் ரீதியான திருப்தியும் நிறையவே கிடைக்கும்.

செக்ஸ் உறவு போன்ற விஷயங்களுக்கு உடல் திருப்தி என்பதை விட மிக மிக முக்கியமானது மன திருப்திதான். அது உங்களது கையில்தான் உள்ளது. வெந்தும் வேகாமலும் உள்ள சாப்பாட்டை சாப்பிட்டால் அஜீரணம்தான் மிச்சமாகும். அதேசமயம், நல்ல சாப்பாட்டை ஆற, அமர நிதானமாக சாப்பிட்டால் கிடைக்கும் இன்பத்தை சொல்லிப் புரிய வைக்க முடியாது, அனுபவித்தால்தான் தெரியும்.

முயற்சித்துப் பாருங்கள், முடியாதது எதுவுமில்லை!.English summary
Fast foods may be good but trouble our health. Likewise fast and unsatisfied sex missions always end in disaster. Time management and proper planning will make your sex missions more happy. By Changing your house situations to suit your sex needs, you can "sex"periance a feel good intercourse.
Story first published: Wednesday, December 8, 2010, 13:06 [IST]

Get Notifications from Tamil Indiansutras