•  

காவலன்!

Condoms
 
ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவருக்கு நாட்டில் நல்ல பெயர். இவரைப் போல வல்லவர் உண்டா என்று அனைவருமே புகழாரம் சூட்டினர். ராஜாவும், நாட்டு மக்களை அவ்வளவு அருமையாக கவனித்துக் கொண்டார். நாட்டு மக்களுக்கு எந்தப் பாதிப்பும் வந்து விடாமல் காக்க பக்காவான காவல் ஏற்பாடுளையும் செய்து வைத்திருந்தார்.

காவலர்களும் சும்மா இல்லை. சிறப்பான பாதுகாப்பை நாட்டு மக்களுக்கும், ராஜாவுக்கும் கொடுத்தனர். ஆனால் தங்கம் தரமானதாக இருந்தாலும், குறை இருக்கத்தானே செய்யும். அதேபோல சில காவலர்கள் சரிவர செயல்படாததால், அவர்களால் நாட்டு மக்களுக்கும், ராஜாவுக்கும் சிக்கல் வந்து விட்டது. வந்த சிக்கலை எப்படியோ சமாளித்தார் ராஜா. அதன் பிறகு காவலில் படு கவனமாக இருந்தார்.

இந்தக் கதை எதற்கு என்றால், இப்படித்தான் நம்மில் பலர் 'இதை' நம்பலாம் என்று நம்பி ஏமாந்து போவார்கள், சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். இப்போது நாம் சொல்லப் போவது ஆணுறைகளைப் பற்றி.

குழந்தைப் பிறப்பைத் தடுக்க மட்டுமல்லாமல் இப்போது எச்ஐவி, பாலியல் நோய்கள் போன்றவற்றையும் தடுக்க முக்கிய சாதனமாக விளங்குவது ஆணுறைகள். பெரும்பாலான ஆணுறைகள் சிறப்பாகவே உள்ளன. ஆனால் ஆணுறைகளை முழுமையான பாதுகாப்பாக கருத முடியுமா என்றால் இல்லை என்ற பதில்தான் வருகிறது.

அதாவது 85 சதவீத அளவுக்குத்தான் ஆணுறைகளை நம்பலாம். ஆணுறைகளைப் பயன்படுத்தினால் கர்ப்பமாவதை தடுக்க முடியும் என்று உறுதியாக கூற முடியாது என்பது நிபுணர்களின் வாதம்..

இதற்கு என்ன செய்யலாம்...?

பாதுகாப்பான உடலுறவுக்குத் தயாராகி விட்ட பின்னர் ஆணுறைகளைப் பயன்படுத்தி வழக்கம் போல உறவில் ஈடுபடுங்கள். உறவு முடிந்ததும், கர்ப்பத் தடை மாத்திரைகளை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். இவற்றைப் பயன்படுத்துவது குறித்து முன்பே டாக்டர்களிடம் உரிய ஆலோசனை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். அதேசமயம், இதை ஒரு பழக்கமாக மாற்றிக் கொள்வதையும் தவிர்ப்பது மிக மிக அவசியம்.

ஆணுறைகள் லேட்டக்ஸ் அல்லது பாலியுரிதீன் என்ற வேதிப் பொருளால்தான் தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் எர்பஸ், சிலமிடியா அல்லது டிரைகோமோனியாஸிஸ் போன்ற சில பாலியல் நோய்களைத் தடுக்க முடியும். அதேசமயம், தோல் மூலம் பரவும் நோய்கள், குறிப்பாக ஆண் மற்றும் பெண் உறுப்புகள் மூலம் பரவும் நோய்களை அது தடுக்க முடியாது.

அதேபோல விலங்குகளின் திசுக்களிலிருந்து தயாரிக்கப்பட்ட ஆணுறைகளையும் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது அவசியம்.

எச்ஐவியை முழுமையாக ஆணுறைகள் தடுக்கும் என்று கூற முடியாது. ஆண் அல்லது பெண் இருவரில் யாராவது ஒருவருக்கு எச்ஐவி பாதிப்பு இருந்தால், ஆணுறைகளைப் பயன்படுத்தினால் கூட அது பரவும் வாய்ப்பு உள்ளது.

பாதுகாப்பான, முறையான உடலுறவே நோய்களைத் தேடிப் போகாமல் தடுத்துக் கொள்ள ஒரே வழி. சில நேரம் ஆணுறைகள் பாதியிலேயே கிழிய வாய்ப்புண்டு. இதனால் விந்தணுக்குள் பெண்ணுறுப்பை ஊடுறுவிச் செல்லும் வாய்ப்புகள் உண்டு. சிலர் சரிவர ஆணுறையை கையாள தெரியாமல் பயன்படுத்தலாம்.

எனவே உடலுறவுக்குத் திட்டமிடும்போது பாதுகாப்பான முறையில் அதை அமைத்துக் கொள்வதே நல்லது. இல்லாவிட்டால் காவல் காப்பதில் கோட்டை விட்டு ராஜாவைக் கவிழ்த்திய காவலர் கதைதான்.

(டிசம்பர் 1ம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது)Story first published: Tuesday, November 30, 2010, 15:10 [IST]

Get Notifications from Tamil Indiansutras