நிறையப் பெண்களுக்கு இந்த ஆர்கசம் பிரச்சினை பெரும் பிரச்சினையாகவே மாறி வருகிறது. ஆனால் ஆர்கசம் வராமல் போவதற்கு மன பிராந்தியே காரணம் என்கிறார் பிரபல சைக்காலஜிஸ்ட் சீமா ஹிங்கொரானி.
கர்ப்பமாகி விடுவோமோ என்ற பயம், கணவர் மூலம் செக்ஸ் வியாதி வந்து விடுமோ என்பது உள்ளிட்ட சின்னச் சின்ன அச்சம் காரணமாகவே பெண்கள் உச்ச நிலையை அடைவதில் சிக்கல் ஏற்பட்டு விடுகிறது. இதை கைவிட்டு விட்டு, ரிலாக்ஸ்டாக உறவில் ஈடுபட்டால் ஆர்கசம் ஆட்டோமேட்டிக்காக வரும் என்கிறார் சீமா.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், செக்ஸ் நிலைகள் குறித்தும், செக்ஸை எப்படியெல்லாம் அனுபவிக்கலாம் என்பதும் குறித்த அடிப்படை அறிவைப் பெற வேண்டியது இரு பாலாருக்கும் அவசியம். அதில் அரைகுறை ஏற்பட்டால்தான் உறவின்போது சொதப்பல் ஏற்படுகிறது.
அதேபோல உறவுக்கு முன்பும், உறவின்போதும் மன அழுத்தம் ஏற்படாமல் இருப்பது மிக மிக அவசியம். அப்படி ஏற்பட்டால் டெஸ்டோஸ்டிரான் அளவு குறைந்து போகும். இதனால் உறவு கசந்து போகும். செக்ஸ் என்பது பிறவியிலேயே அனைவருக்கும் தெரிந்த ஒன்றல்ல. கற்றுக் கொள்வதில்தான் அதன் முழு இன்பம் நமக்கு கை கூடும்.
செக்ஸ் உணர்வுகளை எதிர்பார்ப்பது மட்டுமல்ல, அதை நாம் நமது பார்ட்னருக்குத் தருவதிலும் முழுமையாக இருக்க வேண்டும். ஆனால் ஆண்களுக்குக் கிடைப்பது போன்ற எக்ஸ்போசர்கள் பெண்களுக்குக் கிடைப்பதில்லை என்பதும், வெளிப்படையாக இதுகுறித்து யாரிடம் விளக்கம் பெறலாம் என்பதில் பெண்களுக்கு இருக்கும் அடிப்படை சிக்கலும், பல பெண்களுக்கு செக்ஸ் உறவு குறித்த முழுமையான அறிவு கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது என்கிறார் சீமா.
செக்ஸ் தெரபிஸ்ட்டான டாக்டர் ராஜன் போன்ஸ்லே கூறுகையில், ஆர்கசத்தை அடைவதில் சிரமம் ஏற்படுவது சாதாரண விஷயம்தான். இதுகுறித்து முதலில் கவலைப்படுவதை விட்டு விட வேண்டும். உங்களது செக்ஸ் மன நிலை முழுமையாக செக்ஸ் உறவில் ஈடுபடாதபோது இதுபோன்ற பரிச்சினை ஏற்படுகிறது. மனோ ரீதியான பிரச்சினைதான் இது. சில டிப்ஸ்களை கடைப்பிடித்தால் இதிலிருந்து விடுபடலாம் என்கிறார்.
இதேபோல பெண்களுக்கு செக்ஸ் எழுச்சி ஏற்படுவதிலும் சில சமயங்களில் குறைபாடுகள் ஏற்படும். இதன் காரணமாக பிறப்புறுப்பில் வழவழப்புத் தன்மை குறைந்து, அது அவர்களது பார்ட்னர்களுக்கு சிரமத்தைத் தர நேரிடும். இதையும் தவிர்க்கலாம். எல்லாம் உங்களது கையில்தான் உள்ளது.
இதுபோன்ற பிரச்சினை உள்ளவர்கள் ஒரு மருத்துவரை அணுகி உரிய ஆலோசனை பெறலாம். அதன்படி நடக்கலாம். நாமே கூட மன ரீதியாக இதை சரி செய்ய முடியும். இதற்காகவே பல புத்தகங்கள், வீடியோக்கள் உள்ளன. அவற்றை அணுகி சுயமாக அறிந்து கொள்ளலாம். செக்ஸ் நிலைகள் குறித்து முழுமையாக அறிந்து கொள்ளலாம். ஆர்கசத்தை அடைவது எப்படி என்பதை அறிய பல வழிகள் இன்று உள்ளன.
எனவே உச்சத்தை அடைவது சிக்கலா இருக்கே என்ற கவலையை விட்டு விட்டு அதை சரி செய்யும் முயற்சியில் இறங்கினால், எல்லாம் இன்ப மயமாகும்!.