•  

நடிகையுடன் உட்ஸ் லீலை-இன்று கேசட் ரிலீஸ்-கணவரே வெளியிடுகிறார்!

Devon James
 
நியூயார்க்: ஆபாசப் பட நடிகை தேவன் ஜேம்ஸும், கோல்ப் வீரர் டைகர் உட்ஸும் புரிந்த லீலைகள் தொடர்பான கேசட் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது. இதை நடிகையின் கணவரே தயாரித்து வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

டைகர் உட்ஸுக்கு துயரம் சற்றும் குறைந்தபாடில்லை. அவரும், ஆபாசப் பட நடிகை தேவனும் உல்லாசமாக இருந்த காட்சிகள் அடங்கிய டேப்பை தேவனின் கணவர் நிக் ஜேம்ஸ் வெளியிட்டு வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறார். இன்று முதல் இந்த கேசட் கிடைக்கும் என்றும் நிக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எனது மனைவியுடன் உட்ஸ் இருக்கும் அந்தக் காட்சிகள் அடங்கிய கேசட் வெள்ளிக்கிழமை முதல் பொதுமக்களுக்கு்க கிடைக்கும். இதைத் தடுக்க உட்ஸின் வழக்கறிஞர்கள் முயன்றனர். ஆனால் பலன் தரவில்லை.

தடை வந்தாலும் நான் கவலைப்படவில்லை. திட்டமிட்டபடி இன்று அது மார்க்கெட்டுக்கு வரும் என்றார் நிக்.

இந்த கேசட் 62 நிமிடங்கள் ஓடக் கூடியதாம். இதற்கு ஆர்டர்கள் வேறு குவிந்து வருகிறதாம்.

தனது 9 வயது மகன் ஆஸ்டினின் தந்தை டைகர் உட்ஸ்தான் என்று அந்த ஆபாசப் பட நடிகை ஏற்கனவே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் தனது மனைவியும், உட்ஸும் இருந்த காட்சிகள் அடங்கிய கேசட்டை கடை பரப்பி விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளார் நடிகையின் கணவர் நிக்.

அதேசமயம், இப்படி ஒரு டேப்பே இல்லை என்றும் கூறப்படுகிறது. டேப் இருப்பதாக கூறி தேவனும், நிக்கும் காசு பார்த்து வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. டேப் இருக்கிறது என்பதை தேவனின் தாயாரே நம்பவில்லையாம்.

Story first published: Friday, October 15, 2010, 17:04 [IST]

Get Notifications from Tamil Indiansutras