அமெரிக்கர்களிடையே நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 60களில் இருப்போரில் பெரும்பாலானவர்களும், 70 வயதுகளின் தொடக்கத்தில் இருப்போரில் பாதிப்பேரும் நல்ல ஆக்டிவ் செக்ஸ் உறவுகளில் ஈடுபடுவது தெரிய வந்துல்ளது.
அதேசமயம், வயதானவர்களில் பலருக்கு பல்வேறு செக்ஸ் ரீதியான பிரச்சினைகள் ஏற்படுவதும் தெரிய வந்துள்ளது. ஆசை குறைவது, ஆணுறுப்பு எழுச்சியின்மை உள்ளிட்டவை அதில் சில.
இந்த ஆய்வுக்காக 57 முதல் 85 வயது வரையிலான 3000 அமெரிக்கர்களிடம் ஆய்வு நடந்தது. தங்களது செக்ஸ் நடவடிக்கைகள் குறித்த தகவல்களைத் தருமாறு இவர்களிடம் கோரப்பட்டது.
57 வயதைக் கடந்த ஆண்களை விட பெண்களுக்கு செக்ஸ் ஆசை குறைவாக உள்ளது தெரிய வந்தது. மேலும் பார்ட்னர் இல்லாமல் வாழக் கூடிய வகையிலான மனப் பக்குவம் கொண்டவர்களாக இந்த வயதுடையப் பெண்கள் உள்ளனர். இனியும் தங்களுக்கு செக்ஸ் ஆசை தேவையில்லை என்பது இவர்களது கருத்து.
அதேசமயம், இந்த வயதுடைய ஆண்களுக்கு செக்ஸ் ஆர்வம் அதிகமாக உள்ளதாம் என்கிறார் ஆய்வை மேற்கொண்ட குழுவின் தலைவரான ராபர்ட் பட்லர்.
இந்த ஆய்வின் மூலம் கிடைத்த பொதுவான தகவல்...
57 முதல் 64 வயது வரையில் உள்ளவர்களில் 84 சதவீதம் பேர் நல்ல உடல் நலம் மற்றும் செக்ஸ் நலத்துடன் உள்ளனர்.
75 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் இது 38 சதவீதமாக உள்ளது.
70 வயதுகளில் இருப்பவர்களில் மூன்றில் இரண்டு பங்குப் பேர் மாதம் இருமுறை செக்ஸ் உறவு வைத்துக் கொள்கின்றனராம். 80வயதுகளில் இருப்போரும் கூட மாதம் ஒருமுறை உறவு வைத்துக் கொள்கின்றனராம்.
70 முதல் 80 வயது கொண்ட பெண்களுக்கு செக்ஸ் ஆர்வம் பெரிய அளவில் இல்லை. ஆனால் இந்த வயதுடைய தாத்தாக்களுக்கு செக்ஸ் ஆசை சிறப்பாக உள்ளதாம். பெண்களில் 43 சதவீதம் பேர் ஆசை இல்லாமல் உள்ளனர். 39 சதவீத பெண்களுக்கு பெண்ணுறுப்பு வறட்சி பிரச்சினை உள்ளது. 37 சதவீதம் ஆண்களுக்கு உறுப்பு எழுச்சியின்மை குறைபாடு காணப்படுகிறது.
இந்த ஆய்வின் பொதுவான முடிவு வயதானாலும் செக்ஸ் ஆசையில் பெரிய அளவில் குறைவில்லை என்பதே.